ஜார்கண்ட் மாநிலத்தில் மாடு திருடிய 5 போலீஸ்காரர் கைது
2020-10-20@ 17:00:51

ஜார்கண்ட்: ராஞ்சி -ஜார்கண்ட் மாநிலம் ராம்கரில், சட்டவிரோதமாக மாடு கடத்தப்படுவதைத் தடுக்க வேண்டிய போலீசார், அவற்றை திருடிச் சென்றனர். இதையடுத்து, 5 போலீஸ்காரர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். முன்னதாக ஜார்கண்ட் போலீசார் 32 மாடுகளை கடத்திச் ெசன்ற லாரியை கைப்பற்றியது. இவற்றை, பசு காப்பகத்தில் கொண்டு செல்வதற்கான பொறுப்பை சில போலீசாரிடம் அதிகாரிகள் ஒப்படைத்தனர். அவர்கள், ராம்கரில் இருந்து கிழக்கு சிங்பூமில் உள்ள காட்ஷிலாவுக்கு அழைத்துச் சென்றனர். இதற்கிடையில், இந்த போலீசார் தாங்கள் சென்ற லாரியை நிறுத்தி, அங்கிருந்து மற்றொரு தனியார் வாகனத்தில் ஐந்து மாடுகளை ஏற்றினர்.
இந்த தகவல் மூத்த போலீஸ் அதிகாரிகளுக்கு சென்றது. அதையடுத்து, அங்கு வந்த அதிகாரிகள் 5 போலீசாரையும் கையும் களவுமாக பிடித்தனர். தொடர் விசாரணைக்கு பின்னர், 5 போலீஸ்காரர்களையும் சஸ்பெண்ட் செய்தனர். இதுகுறித்து, வடக்கு சோட்டானக்பூர் டிஐஜி ஏ.வி.ஹோம்கர் கூறுகையில், ‘ராஜரப்பா காவல் நிலையத்தில் பணிபுரிந்து வந்த 5 போலீசார் திருட்டு வழக்கில் கைது செய்யப்பட்டனர். அவர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கையும் எடுக்கப்பட்டுள்ளது’ என்றார்.
மேலும் செய்திகள்
டெல்லியில் விவசாயிகள் போராட்டத்தை சீர்குலைக்க பாகிஸ்தான் சதி திட்டம் : 308 ட்விட்டர் பக்கங்களை கண்காணித்து டெல்லி காவல்துறை எச்சரிக்கை
சசிகலா உடல்நிலை சீராக உள்ளது..! கொரோனா பிரிவு வார்டில் இருந்து சாதாரண வார்டுக்கு மாற்ற மருத்துவமனை நிர்வாகம் முடிவு
அற்புதங்களை நிகழ்த்துவதாக கூறி 2 மகள்களை நிர்வாணப்படுத்தி நரபலி கொடுத்து பேராசிரியர் தம்பதி வெறிச்செயல் சித்தூர் அருகே கொடூரம்
முதலமைச்சர் பதவியில் இருந்து எந்த நேரத்திலும் நீக்கப்படலாம்!: பீகார் முதல்வர் நிதிஷ்குமாரின் அதிருப்தி குரலால் அதிர்ச்சி..!!
ஒரே நாளில் 13,203 பேர் பாதிப்பு: இந்தியாவில் கொரோனா பாதிப்பு 1.06 கோடியாக உயர்வு...1.53 லட்சம் பேர் பலி..!!!
ஜம்மு காஷ்மீரில் ராணுவத்துக்கு தெரியாமல் புதிய ஆப்களை பயன்படுத்தும் பாக். தீவிரவாத அமைப்புகள்: குறைந்த இன்டர்நெட்டிலும் வேகமாக செயல்படும்
25-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
24-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
22-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
ஆர்ஜெண்டினாவில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கம்!: வீடுகள், கட்டிடங்கள் குலுங்கின..மக்கள் அலறடித்து ஓட்டம்..!!
அமெரிக்காவின் 46வது அதிபராக ஜோ பைடன், சாதனை படைத்த துணை அதிபர் கமலா ஹாரிஸ் பதவியேற்பு!: புகைப்படங்கள்