SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

எம்எல்ஏவாக இருக்கும் நடிகருக்கு சீட் கொடுக்க எதிர்ப்பு தெரிவிக்கும் இலையை பற்றி சொல்கிறார்: wiki யானந்தா

2020-10-20@ 00:53:07

‘‘பள்ளி திறப்பதில் அதிகாரிகள் இரண்டு பிரிவாக இருக்காங்க போல...’’ என்றார் பீட்டர் மாமா.
‘‘கொரோனாவுக்கு அரசியல்வாதிகள் இறந்தாலே... அது பூதாகரமாக மாறிவிடுகிறது. பள்ளியை திறந்து துரதிர்ஷ்டவசமாக ஏதாவது அசம்பாவிதம் நடந்தால் அரசை கட்சிகளும் மக்களும் உண்டு இல்லை என்று செய்துவிடுவார்கள் என்பது அரசுக்கு தெரியாதா... இருந்தாலும் 7 மாதங்கள் திறக்காமல் இருந்தால் மாணவர்கள், பள்ளிகளின் கட்டமைப்பு என்ன ஆகும் என்றும் யோசிக்க வேண்டி இருந்ததால் அமைச்சர் தலைமையில் அடிக்கடி அது தொடர்பான கூட்டம் நடக்குதாம். நேத்து கூட அமைச்சர் தலைமையில நடந்த கூட்டத்துல கூட, இந்த விவகாரம் தான் காரசாரமா போச்சாம். கூட்டத்துல இருந்த ஒரு டைரக்டரு, கொரோனா எல்லாம் பறந்து போச்சு. தீபாவளி முடிஞ்சதும் பள்ளிக்கூடத்த திறந்திடலாம்னு ஐடியா கொடுத்தாராம். மறுகணமே, இதுக்கு எதிர்ப்பு தெரிவிச்ச 3 டைரக்டருங்க, வேணவே வேணாம்னு அடம்பிடிச்சிருக்காங்க. இப்போ பள்ளிக்கூடத்த திறந்தா நம்ம துறைக்கு கெட்ட பேரு தான் வரும். வேணும்னா மருத்துவ ஆலோசனை குழுவிடம் கருத்து கேட்டு அதற்கு பிறகு முடிவு செய்துடலாம்னு சொன்னதுக்கு எல்லோரும் ஓகே சொல்லிட்டாங்களாம்...’’ என்றார் விக்கியானந்தா.

‘‘நடிகராக இருக்கும் எம்எல்ஏவுக்கு இலை நிர்வாகிகள் டென்ஷன் தர்றாங்களாமே, உண்மையா...’’ என்றார் பீட்டர் மாமா.
‘‘சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில், சமூக வலைத்தளங்களில் இலை கட்சி சார்பில் சில தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை சிலர் கணித்து வெளியிட்டு வருகின்றனர். வேட்பாளரை பெயர், படத்துடன் கட்சியினர் தொடர்ந்து வெளியிட்டு வருவதில், ராமநாதபுரம் மாவட்டத்தின் திருவாடானை தொகுதிக்கு ‘முன்னாள் மாவட்ட செயலாளர்’ பெயரை வெளியிட்டுள்ளனராம். இது தற்போது எம்எல்ஏவாக இருக்கிறவருக்கும், அவரது ஆதரவாளர்களுக்கும் கடும் கோபத்தை ஏற்படுத்தியிருக்கிறதாம்.

சசிகலா விடுதலையாகி வெளியில் வந்தால், எப்படியும் மீண்டும் சீட் வாங்கும் கனவிலும், அதுவே பலிக்காவிட்டாலும் இலையில் ஒரு சீட் பெற்று ‘அமைப்பின் பெயரில்’ கூட்டணியில் தொடரலாம் என்றும் நினைத்திருந்தவருக்கு, கட்சியினரின் இந்த கருத்துக் கணிப்பு பெரும் தலைவலியைத் தந்திருக்கிறதாம். இந்த கணிப்பு பட்டியலைப் பார்த்த இருதரப்பினரும் தற்போதே ஒருவரை ஒருவர் விமர்சித்து மோதல் வலுத்து வருகிறதாம்.திருவாடானையில் தனி கோஷ்டியாக பிரிந்து, தனக்கு எதிராக, செயல்பட்டு வருகிறவர்கள், முன்னாள் மாவட்ட செயலாளரின் பெயரைப்போட்டு எப்படி வெளியிடலாம்... அவர்கள் மீது தலைமை தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எம்எல்ஏ தரப்பினர் புகார்களை முதல்வருக்கும், துணை முதல்வருக்கும் குவித்து வருகிறார்களாம். இந்த பட்டியல் வெளியீடு குறித்து கட்சியினர் யாருக்கும், எதுவும் தெரியாதென கைவிரித்து வருகிறார்களாம்... போஸ்டரை நாங்க பார்த்தோம்... ஆனால் அதை நாங்க ஒட்டவில்லை...’’ என்கிறார்களாம்...’’ என்றார் விக்கியானந்தா.

‘‘தென் மாவட்டத்துல இப்போது அமைச்சராக இருக்கும் சிலருக்கு சீட் கிடைக்காது என்கிறார்களே, என்ன என்று விசாரித்தார்களா...’’ என்றார் பீட்டர் மாமா.
‘‘தென்மாவட்டத்தில் தற்போதுள்ள எம்எல்ஏக்கள் பலர், கடந்த 2016 சட்டமன்ற தேர்தலில் சிறைபறவை மற்றும் தேனிகாரர் ஆதரவு பெற்றவர்களாம்... இவர்களில் ஒரு சிலரைத்தவிர பலர் இருதரப்பையும், சரி செய்து செல்கின்றனராம்... எதற்கு ரிஸ்க் என்று யோசித்த சேலம்காரர், வரும் தேர்தலில் தனது தலைமையில் வேட்பாளர் பட்டியல் வெளியிட முடிவு செய்துள்ளாராம்... அப்போதுதான் தான் சொல்லும் பேச்சை கேட்பார்கள். இல்லையென்றால் எதிர்ப்பார்கள். இதற்காக தென்மாவட்டத்தில் தனக்கென ஆதரவாளர்களை சேலம்காரர் ஏற்கனவே நியமித்துள்ளாராம்... அவர்களுக்கு வரும் தேர்தலில் சீட் கொடுக்க முதல்வர் எடப்பாடி முடிவு செய்துள்ளராம்... இதற்காக தென்மாவட்டத்தில் உள்ள சேலம்காரரின் ஆதரவாளர்கள் தற்போது குஷியில் உள்ளனராம்... எப்படியும் தங்களுக்கு சீட் கிடைத்து விடும் என இருமாப்பில் அமைச்சர்களையும், எம்எல்ஏக்களையும் அவர்கள் மதிப்பது இல்லையாம்... இதனை பார்த்த அமைச்சர்களும், தேனிகாரரின் ஆதரவாளர்களும் கொந்தளிப்பில் உள்ளனராம்...’’ என்றார் விக்கியானந்தா.

‘‘அடிச்சா இவரு போல ஜாக்பாட் அடிக்கணும்னு தமிழகம் முழுவதும் உள்ள அரசு அதிகாரிகள் பேசிக் கொள்வது உங்கள் காதில் விழுந்ததா...’’ என்றார். ‘‘வேலூர் மண்டல மாசுக்கட்டுப்பாட்டு வாரிய முதன்மை பொறியாளர் வீட்டில் ரூ.3.25 கோடி பணம், கிலோ கணக்கில் தங்கம், வெள்ளி பொருட்களை கடந்த சில நாட்களுக்கு முன்பு விஜிலென்ஸ் போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் ரூ.100 கோடி அளவில் சொத்து மதிப்புகள் என தினந்தோறும் பல்வேறு திடுக்கிடும் தகவல் வெளியாகி வருகிறது. இது ஒருபுறம் இருக்க இதற்கு எல்லாம் காரணம் அமைச்சரும், அவரின் கீழ் உள்ள உயர் அதிகாரிகள் தான் என கூறப்படுகிறது.

ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு பணிமாறுதல் செய்ய வேண்டும் என்றால் லட்சக்கணக்கில் பணம் கொடுத்துவிட்டு வர வேண்டிய நிலையாம். இல்லையெனில் மாதம்தோறும் வசூல் செய்து கொடுக்க வேண்டிய நிலை உள்ளதாம். ஒவ்வொரு மாவட்டத்திலும் தகுதியே இல்லாத தொழிற்சாலைகளுக்கு பணத்தை வாங்கி கொண்டு அனுமதி அளித்து உள்ளார்களாம். வசூலிக்கும் பணம், சென்னையில் உள்ள தலைமை அலுவலகம் வரை மாதம்தோறும் பிரித்து அனுப்பி வைக்கப்படுகிறதாம். நேர்மையாக பணியாற்ற வந்தாலும், மேல் நிலையில் உள்ள அமைச்சர், உயர்அதிகாரிகள் விடுவது இல்லையாம்.

இதனால் தான் லஞ்சம் வாங்கி தற்போது இப்படி துறையின் பெயர் காற்றில் பறந்து வருகிறது. முதன்மை பொறியாளர் யார் யாரிடம் எவ்வளவு பணம் வாங்கினார். எத்தனை அமைச்சர்கள் மற்றும் எத்தனை உயர் அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்தார் என்பது குறித்த விவரம் டைரியில் உள்ளதாம். இதனால் எந்த நேரத்திலும் விஜிலென்ஸ் போலீசார் டைரி விசாரணைக்கு அழைப்பார்கள். டைரியில் உள்ள ரகசியம் எப்போது கசியும் என்று தெரியாமல் தூக்கத்தை தொலைத்து அமைச்சர்களும், அதிகாரிகளும் கலக்கத்தில் உள்ளனர். ஆனால் மற்ற துறை அதிகாரிகளோ... கொரோனா காலத்திலும் கோடிக்கணக்கில் சம்பாதித்து ஜாக்பாட் அடித்த ஒரே அதிகாரி இவராக தான் இருக்கும் என்று பேசிக் கொள்கின்றனர்....’’ என்றார் விக்கியானந்தா.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • rainpurevi111

  தமிழகத்தை மிரட்டும் புரெவி புயல்... கொட்டும் மழை; கொந்தளிக்கும் கடல் : சாலைகளில் சூழ்ந்த வெள்ளம்!!

 • radish3

  புவியீர்ப்பு சக்தியில்லாத சர்வதேச விண்வெளி நிலையத்தில் முள்ளங்கியை வெற்றிகரமாக வளர்த்த நாசா விஞ்ஞானிகள்!: புகைப்படங்கள்

 • farmers_proteeee11

  மத்திய அரசின் சட்டங்களை எதிர்த்து வீறுகொண்டெழுந்த விவசாயிகள்... டெல்லியில் 8வது நாளாக ஆவேச கோஷங்களை எழுப்பி போராட்டம்!!

 • 03-12-2020

  03-12-2020 இன்றைய சிறப்பு படங்கள்

 • 300kg11

  பிரான்சில் 300 கிலோ எடையுள்ள நபரை, வீட்டினை உடைத்து கிரேன் மூலமாக மீட்ட மீட்புப் படையினர்!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்