அமைச்சர் செல்லூர் ராஜூ கருத்து: பாஜவில் குஷ்பு இணைந்தது அதிமுகவுக்கு வலு சேர்க்காது
2020-10-19@ 03:27:22

மதுரை: பாஜவில் குஷ்பு இணைந்தது அதிமுகவுக்கு வலு சேர்க்காது என அமைச்சர் செல்லூர் ராஜூ கூறினார். அதிமுகவின் 49வது ஆண்டு விழாவையொட்டி, மதுரை தவிட்டுச்சந்தையில் அதிமுக கொடியேற்று விழா நேற்று நடந்தது. இதில், அமைச்சர் செல்லூர் ராஜூ கொடியேற்றிய பிறகு அளித்த பேட்டி வருமாறு: நீட் தேர்வு வேண்டாம் என்பதுதான் எங்களுடைய குறிக்கோள். ஆனால், அதே நேரத்தில் மருத்துவ மாணவர் சேர்க்கையில், அரசுப்பள்ளி மாணவர்கள் பயன் பெறும் வகையில், தமிழக அரசு 7.5 சதவீத இடஒதுக்கீடு கொண்டு வந்து சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. இதில் அதிமுக உறுதியாக உள்ளது.
பிரதமர் மோடி, மாநில அரசுக்கு உதவிகளை செய்து வருகிறார். எனவே ஒருமித்த கருத்துடன் அவர்களுடன் தோழமையுடன் உள்ளோம். கட்சிப்பதவிகள் ஒருபோதும் ஏலம் விடப்படுவது இல்லை. கமல்ஹாசன் கூறுவது பொய். பாஜவில் குஷ்பு இணைந்தது அதிமுகவிற்கு வலு சேர்க்காது. கூட்டணி கட்சியால் எங்களுக்கு பலம் சேரும். இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் செய்திகள்
கலைஞர் அறக்கட்டளை சார்பில் 8 பேருக்கு ரூ.2 லட்சம் நிதியுதவி: மு.க.ஸ்டாலின் வழங்கினார்
வேளாண் சட்டங்களை திரும்ப பெறக்கோரி கவர்னர் மாளிகை நோக்கி இன்று பேரணி: காங்கிரஸ் சார்பில் நடக்கிறது
காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டத்தில் முதல்வர் எடப்பாடி 20, 21ம் தேதி தேர்தல் பிரச்சாரம்: அதிமுக தலைமை அறிவிப்பு
புரட்சி பாரதம் கட்சியின் இளைஞர் அணி ஆலோசனை கூட்டம்
பாஜ 60 சீட் கேட்கும் நிலையில் தொகுதி பங்கீடு குறித்து அமித்ஷாவுடன் முதல்வர் எடப்பாடி இன்று பேச்சுவார்த்தை: பிரதமர் மோடியை நாளை சந்திக்கிறார்
ஐஐடியில் சமஸ்கிருத திணிப்பு பாஜ கடும் விளைவுகளை சந்திக்க வேண்டி வரும்: கே.எஸ்.அழகிரி எச்சரிக்கை
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியை முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ பன்னீர் செல்வம் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்
மாட்டு வண்டியை ஒட்டிய மு.க.ஸ்டாலின்... மக்களுடன் அமர்ந்து உணவு சாப்பிட்ட முதல்வர் பழனிசாமி, ராகுல் காந்தி!!
16-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
14-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
9 மாதங்களுக்கு பிறகு தியேட்டரில் ‘மாஸ்டர்’ ரிலீஸ்!: விஜய் ரசிகர்கள் கொண்டாட்டம்..புகைப்படங்கள்