SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

வாகன விற்பனை, உற்பத்தி அதிகரிப்பு

2020-10-19@ 02:37:00

புதுடெல்லி: கடந்த செப்டம்பர் மாதத்தில் பயணிகள் வாகன விற்பனை 26.45 சதவீதம் அதிகரித்துள்ளதாக, இந்திய வாகன உற்பத்தியாளர் சங்கம் தெரிவித்துள்ளது. கடந்த செப்டம்பர் மாதத்தில், அனைத்து பிரிவுகளிலும் சேர்த்து மொத்தம் 2,619,045 வாகனங்கள் உற்பத்தி செய்யப்பட்டுள்ளன. உள்நாட்டில் பயணிகள் வாகன விற்பனை 26.45% அதிகரித்து, 272,027 வாகனங்கள் விற்கப்பப்டுள்ளன. டூவீலர் விற்பனை 11.64% அதிகரித்து 1,849,546 விற்கப்பட்டுளன.

அதேநேரத்தில் 3 சக்கர வாகன விற்பனை 71.91% சரிந்து 18,640 வாகனங்கள் விற்கப்பட்டுள்ளது. கொரோனா ஊரடங்கால் கடந்த ஜூலை - செப்டம்பர் காலாண்டில் மொத்த வாகன உற்பத்தி 7.08 சதவீதமும், கடந்த ஏப்ரல் முதல் செப்டம்பர் வரையிலான அரையாண்டில் 43.24% சரிந்து 8,185,672 வாகனங்கள் மட்டுமே உற்பத்தி செய்யப்பட்டுள்ளன.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 15-05-2021

    15-05-2021 இன்றைய சிறப்பு படங்கள்

  • 13-05-2021

    13-05-2021 இன்றைய சிறப்பு படங்கள்

  • 11-05-2021

    11-05-2021 இன்றைய சிறப்பு படங்கள்

  • 09-05-2021

    09-05-2021 இன்றைய சிறப்பு படங்கள்

  • 07-05-2021

    07-05-2021 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்