திருப்பத்தூர் அருகே திடீர் பனி மூட்டத்தால் விவசாய நிலத்தில் தரையிறங்கிய ஹெலிகாப்டரால் பரபரப்பு
2020-10-19@ 01:48:19

திருப்பத்தூர்: திருப்பத்தூர் அருகே திடீர் பனிமூட்டத்தால் மலையடிவார விவசாய நிலத்தில் ஹெலிகாப்டர் தரையிறங்கியது. கோவையில் தனியார் நிறுவனம் கோவையைச் சுற்றி பார்க்கவும், பல்வேறு இடங்களுக்கு பயணிகளை ஏற்றிச் செல்லவும் ஹெலிகாப்டரை வாடகைக்கு இயக்கி வருகிறது. இந்த நிறுவனத்தை பெங்களூருவைச் சேர்ந்தவர் நடத்தி வருகிறார். இந்நிலையில், கோவையை சேர்ந்த நகைக்கடை அதிபர் சீனிவாசன் (45), மனைவி கவிதா, மகன்கள் திலீப், கோகுல், மகள் ரேஷ்கா ஆகிய 5 பேர் தனி ஹெலிகாப்டரில் கோவையில் இருந்து திருப்பதிக்கு சுவாமி தரிசனம் செய்ய நேற்று காலை 7.45க்கு புறப்பட்டனர்.
பெங்களூருவை சேர்ந்த பைலட்டுகள் எஸ்.கே.சிங், பைரவன் ஆகியோர் இயக்கினர். காலை 9.30 மணியளவில் திருப்பத்தூர் மாவட்டம் கந்திலி, தாதன்குட்டை அருகே வரும்போது, திடீரென பனி மூட்டம் அதிகமாக காணப்பட்டது. இதனால் திசையை கண்டறிய முடியாமல், சிக்னல் கோளாறு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து செய்வதறியாமல் திகைத்த பைலட் ஹெலிகாப்டரை தாதன்குட்டை அருகே மலையடிவாரத்தில் உள்ள விவசாய நிலத்தில் தரையிறக்கினார். விவசாய நிலத்தில் திடீரென ெஹலிகாப்டர் தரையிறக்கப்பட்ட தகவல் அப்பகுதியில் பரவியது. ஹெலிகாப்டரை பார்க்க அப்பகுதி மக்கள் திரண்டனர்.
தகவலறிந்த கந்திலி போலீசார் மற்றும் வருவாய்த் துறையினர் விசாரணை நடத்தினர். அப்போது, ‘சிக்னல் கோளாறு மற்றும் பனிமூட்டம் காரணமாக ஹெலிகாப்டர் தரையிறக்கப்பட்டது தெரியவந்தது. பனிமூட்டம் கலைந்ததும் காலை 11 மணியளவில் மீண்டும் ஹெலிகாப்டர் திருப்பதிக்கு புறப்பட்டது. இந்த சம்பவத்தால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
மேலும் செய்திகள்
இலங்கை கடற்படையால் கொடூரமாக தாக்கப்பட்டு 4 மீனவர்களும் எரித்து கொலை: மீனவர் அமைப்புகள் கொதிப்பு; உடல்களை ஒப்படைக்க வலியுறுத்தல்; போராட்டத்தால் ராமேஸ்வரத்தில் பதற்றம்
தேனி கலெக்டருக்கு கொரோனா
ஆன்லைன் வர்த்தகத்தில் 35 லட்சம் கடன் காருக்குள் விஷம் குடித்து தொழிலதிபர் தற்கொலை
அவுட் சோர்சிங் முறையில் நடந்த மினி கிளினிக் பணியாளர் நியமனங்கள் ரத்து: ஐகோர்ட் கிளை அதிரடி
கட்டணம் குறைக்க கோரி 44வது நாளாக மாணவர்கள் போராட்டம்: அண்ணாமலை பல்கலைக்கழக மருத்துவ கல்லூரி திடீர் மூடல்: விடுதிகளை காலி செய்யவும் உத்தரவு
சட்டம், விவசாயம் உள்ளிட்ட நுழைவுத்தேர்வுக்கு பயிற்சி மையம்? தமிழக அரசு பதில் அளிக்க உத்தரவு
ஆர்ஜெண்டினாவில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கம்!: வீடுகள், கட்டிடங்கள் குலுங்கின..மக்கள் அலறடித்து ஓட்டம்..!!
அமெரிக்காவின் 46வது அதிபராக ஜோ பைடன், சாதனை படைத்த துணை அதிபர் கமலா ஹாரிஸ் பதவியேற்பு!: புகைப்படங்கள்
21-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
உலகின் மிக நீளமான நகங்களைக் வளர்த்திருக்கும் பெண்மணி!!!
குஜராத்தில் கோர விபத்து: தூங்கிக் கொண்டிருந்தவர்கள் மீது சரக்கு லாரி ஏறியதில் குழந்தை உட்பட 16 பேர் உடல் நசுங்கி பலி..!!