SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

சென்னையில் மிதமான மழை: தமிழகத்தில் அடுத்த 48 மணி நேரத்தில் 15 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு..வானிலை மையம் அறிக்கை.!!!

2020-10-18@ 13:01:43

சென்னை: அடுத்த 48 மணி நேரத்தில் தமிழகத்தில் 15 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 48 மணி நேரத்தில் தமிழகத்தில் குறிப்பாக, திருவள்ளூர், வேலூர்,  ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், புதுக்கோட்டை, திருச்சி, பெரம்பலூர், அரியலூர், கரூர், திண்டுக்கல் மற்றும் தேனி மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை முதல் மிக கனமழையும் ஏனைய மாவட்டங்களில் அநேக இடங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்ச மழைபெய்த விவரம்:

(சென்டிமீட்டரில்), பெருங்களூர் (புதுக்கோட்டை), வல்லம்  (தஞ்சாவூர்) தலா 13,  கீழ்பென்னாத்தூர்  (திருவண்ணாமலை) 11,  தஞ்சாவூர் (தஞ்சாவூர்) 9, காரியாபட்டி (விருதுநகர்), சமயபுரம் (திருச்சி), அரிமளம் (புதுக்கோட்டை), லால்குடி (திருச்சி) தலா 8, வானுர்  (விழுப்புரம்), இலுப்பூர்  (புதுக்கோட்டை), தண்டராம்பேட்டை (திருவண்ணாமலை), குடவாசல் (திருவாரூர்), திருமனுர் (அரியலூர்), செட்டிகுளம் (பெரம்பலூர்) தலா 7,  பெருந்துறை  (ஈரோடு), அறந்தாங்கி  (புதுக்கோட்டை), பவானி (ஈரோடு), கிராண்ட் அணைகட்டு  (தஞ்சாவூர்), விராலிமலை (புதுக்கோட்டை), தஞ்சாவூர்,  திருக்காட்டுப்பள்ளி  (தஞ்சாவூர்)  தலா 6,  மஞ்சளாறு (தஞ்சாவூர்), ஜெயன்கொண்டம்  (அரியலூர்), பூதலூர் (தஞ்சாவூர்), செங்கம் (திருவண்ணாமலை), கீரனுர் (புதுக்கோட்டை), மிளம் (விழுப்புரம்), தொழுதூர்  (கூடலூர்), திருவண்ணாமலை, ஈரோடு,  பரமக்குடி (ராமநாதபுரம்), மானாமதுரை (சிவகங்கை), திருக்கோவிலூர்  (கள்ளக்குறிச்சி)  தலா 5.

நாளை மத்திய வங்க கடல் பகுதிகளில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக கூடும். இது மேலும் அடுத்த 24 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலு பெறக்கூடும். இதன் காரணமாக

அக்டோபர் 19 தேதி மத்திய கிழக்கு வங்க கடல், அதனை ஒட்டிய ஆந்திர கடலோர பகுதிகள் மற்றும் அந்தமான் கடல் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 45-55 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.

அக்டோபர் 20ம் தேதி மத்திய மேற்கு வங்க கடல், அதனை ஒட்டிய ஆந்திர கடலோர பகுதிகள் மற்றும் அந்தமான் கடல் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 45-55 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.

அக்டோபர் 21ம் தேதி மத்திய மேற்கு வங்க கடல் மற்றும் அதனை ஒட்டிய ஆந்திர கடலோர பகுதிகளில்    சூறாவளி காற்று மணிக்கு 45-55 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்லவேண்டாம் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • pakisthan21

    ஆப்கானிஸ்தானில் உள்ள பாகிஸ்தான் தூதரகத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி பெண்கள் உள்பட 15 பேர் பலி!: புகைப்படங்கள்

  • kasirangaa21

    கொரோனா தொற்றால் மூடப்பட்டிருந்த அசாம் காசிரங்கா தேசியப்பூங்கா, உயிரியல் பூங்காக்கள் சுற்றுலாப் பயணிகள் பார்வைக்காக மீண்டும் திறப்பு!: புகைப்படங்கள்

  • kamaladance21

    அமெரிக்க தேர்தல் 2020: அனல் பறக்கும் பிரச்சாரத்திற்கு இடையே குடையுடன் கூல் நடனமாடிய கமலா ஹாரிஸ்.. வைரலாகும் புகைப்படங்கள்

  • thirupati21

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நவராத்திரி பிரம்மோற்சவ விழா: கருட வாகனத்தில் மலையப்ப சுவாமி எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி..!!

  • police21

    காவலர் வீர வணக்க நாள்: நாட்டைப் பாதுகாப்பதற்காக, வீரதீர செயல்களில் ஈடுபட்டு உயிர் தியாகம் செய்த காவலர்களின் நினைவு சின்னத்தில் உயரதிகாரிகள் மலர்த்தூவி மரியாதை..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்