SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஒரே நாளில் மேலும் 2 அடி அதிகரிப்பு பாபநாசம் அணை நீர்மட்டம் 108 அடியானது: விநாடிக்கு 1901 கன அடி நீர்வரத்து

2020-10-18@ 12:38:42

நெல்லை: மேற்குத்தொடர்ச்சி மலையின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் இருந்து அணைகளுக்கு நீர்வரத்து உள்ளதால், பாபநாசம் அணை நீர்மட்டம் 108 அடியாக உயர்ந்துள்ளது. ஒரே நாளில் நீர்மட்டம் மேலும் 2 அடி உயர்ந்துள்ளது. அணைக்கு விநாடிக்கு 1901 கன அடி நீர்வரத்து உள்ளது. நெல்லை, தென்காசி, தூத்துக்குடி ஆகிய 3 மாவட்டங்களில் விவசாயம் மற்றும் குடிநீர் தேவையை பூர்த்தி செய்வது பாபநாசம் அணையாகும். இந்த அணையின் மூலம் நெல்லை, தென்காசி மாவட்டங்களில் 40 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்களும், தூத்துக்குடி மாவட்டத்தில் 46 ஆயிரத்து 107 ஏக்கர் விவசாய நிலங்களும் என மொத்தம் 86 ஆயிரத்து 107 ஏக்கர் விவசாய நிலங்கள் பயன்பெறுகின்றன.

பாபநாசம் அணைக்கு வடகிழக்கு பருவமழை காலத்தில்தான் நீர்வரத்து அதிகமாக இருக்கும். இதனால் நவம்பர், டிசம்பர் மாதங்களில் பாபநாசம் அணை நிரம்பி விடுவது வழக்கம். இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை இன்னும் துவங்கவில்லை. எனினும் மேற்குத் தொடர்ச்சி மலையின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் மழை பெய்து வந்ததால் கடந்த 2 நாட்களாக பாபநாசம் அணைக்கு நீர்வரத்து உள்ளது. இதனால் 105.90 அடியாக இருந்த நீர்மட்டம் பாபநாசம் அணை நீர்மட்டம், ஒரே நாளில் 2 அடி உயர்ந்து 108.30 அடியானது. சேர்வலாறு அணை நீர்மட்டம் ஒரு அடி உயர்ந்து 126.38 அடியானது.

இரு அணைகளுக்கும் விநாடிக்கு 1901 கன அடி நீர்வரத்து உள்ளது. அணையில் இருந்து விநாடிக்கு 304 கன அடி நீர் திறக்கப்படுகிறது. மணிமுத்தாறு அணையில் 72.80 அடியாக இருந்த நீர்மட்டம் மேலும் ஒரு அடி உயர்ந்து 73.80 அடியானது.   அணைக்கு விநாடிக்கு 741 கன அடி நீர்வரத்து உள்ளது. அணை மூடப்பட்டுள்ளது. வழக்கமாக அக்.18ம் தேதிக்கு பிறகு வடகிழக்கு பருவமழை தொடங்கி விடும். மழையை பொறுத்து பாபநாசம் அணை பிசான பருவ நெல் சாகுபடிக்காக திறக்கப்படுவது வழக்கம். அதன்படி நவ.1ம் தேதிக்கு முன்பாக பாபநாசம் அணையை திறக்க நெல்லை மாவட்ட நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • pakisthan21

    ஆப்கானிஸ்தானில் உள்ள பாகிஸ்தான் தூதரகத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி பெண்கள் உள்பட 15 பேர் பலி!: புகைப்படங்கள்

  • kasirangaa21

    கொரோனா தொற்றால் மூடப்பட்டிருந்த அசாம் காசிரங்கா தேசியப்பூங்கா, உயிரியல் பூங்காக்கள் சுற்றுலாப் பயணிகள் பார்வைக்காக மீண்டும் திறப்பு!: புகைப்படங்கள்

  • kamaladance21

    அமெரிக்க தேர்தல் 2020: அனல் பறக்கும் பிரச்சாரத்திற்கு இடையே குடையுடன் கூல் நடனமாடிய கமலா ஹாரிஸ்.. வைரலாகும் புகைப்படங்கள்

  • thirupati21

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நவராத்திரி பிரம்மோற்சவ விழா: கருட வாகனத்தில் மலையப்ப சுவாமி எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி..!!

  • police21

    காவலர் வீர வணக்க நாள்: நாட்டைப் பாதுகாப்பதற்காக, வீரதீர செயல்களில் ஈடுபட்டு உயிர் தியாகம் செய்த காவலர்களின் நினைவு சின்னத்தில் உயரதிகாரிகள் மலர்த்தூவி மரியாதை..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்