SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

இந்தியாவில் கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் விகிதம் 88.03% ஆக உயர்வு: பாதிப்பு 74.94 லட்சத்தை தாண்டியது; 65.97 லட்சம் பேர் குணம்.!!!

2020-10-18@ 09:47:14

புதுடெல்லி: நாட்டில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 1.14 லட்சத்தை தாண்டியது. அதே போல், பாதிப்பு 74.94 லட்சத்தை தாண்டியது. இன்று காலை 8 மணியுடன் முடிந்த 24 மணி நேரத்தில், நாட்டில் கொரோனாவால் புதிதாக பாதித்தவர்கள், குணமடைந்தோர், பலியானோர், இறப்பு விகித நிலவரம் குறித்து மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:

* புதிதாக 61,871 பேர் பாதித்துள்ளனர்.
* இதன் மூலம், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 7494551 ஆக உயர்ந்தது.
* புதிதாக 1033 பேர் இறந்துள்ளனர்.
* இதனால், நாட்டின் மொத்த உயிரிழந்தோர் எண்ணிக்கை  1,14,031 ஆக உயர்ந்தது.

* தொற்றில் இருந்து ஒரே நாளில் 72,614 பேர் குணமடைந்துள்ளனர்.
* இதனால் குணமடைதோர் எண்ணிக்கை 65,97,209 ஆக உயர்ந்துள்ளது.

* இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 7,83,311  பேருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.
* குணமடைந்தோர் விகிதம் 88.03% ஆக உயர்ந்துள்ளது. உயிரிழந்தோர் விகிதம் 1.52% ஆக குறைந்துள்ளது.
* சிகிச்சை பெறுவோர் விகிதம் 10.45% ஆக குறைந்துள்ளது.

* இந்தியாவில் ஒரே நாளில் 9,70,173 கொரோனா மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன.
* இதுவரை 9,42,24,190 கொரோனா மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தெரிவித்துள்ளது.

*கொரோனா பாதித்தோர் அதிகம் உள்ள மாநிலங்களில் மகாராஷ்டிரா முதல் இடத்திலும், ஆந்திரா 2-வது இடத்திலும், கர்நாடகா 3-வது இடத்திலும், தமிழ்நாடு 4-வது இடத்திலும் இருந்து வருகிறது.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • pakisthan21

    ஆப்கானிஸ்தானில் உள்ள பாகிஸ்தான் தூதரகத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி பெண்கள் உள்பட 15 பேர் பலி!: புகைப்படங்கள்

  • kasirangaa21

    கொரோனா தொற்றால் மூடப்பட்டிருந்த அசாம் காசிரங்கா தேசியப்பூங்கா, உயிரியல் பூங்காக்கள் சுற்றுலாப் பயணிகள் பார்வைக்காக மீண்டும் திறப்பு!: புகைப்படங்கள்

  • kamaladance21

    அமெரிக்க தேர்தல் 2020: அனல் பறக்கும் பிரச்சாரத்திற்கு இடையே குடையுடன் கூல் நடனமாடிய கமலா ஹாரிஸ்.. வைரலாகும் புகைப்படங்கள்

  • thirupati21

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நவராத்திரி பிரம்மோற்சவ விழா: கருட வாகனத்தில் மலையப்ப சுவாமி எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி..!!

  • police21

    காவலர் வீர வணக்க நாள்: நாட்டைப் பாதுகாப்பதற்காக, வீரதீர செயல்களில் ஈடுபட்டு உயிர் தியாகம் செய்த காவலர்களின் நினைவு சின்னத்தில் உயரதிகாரிகள் மலர்த்தூவி மரியாதை..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்