SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

சிகிச்சை பெற்று வந்த நிலையில் மா.சுப்பிரமணியன் எம்எல்ஏ மகன் கொரோனாவுக்கு உயிரிழப்பு: மு.க.ஸ்டாலின் இரங்கல்

2020-10-18@ 00:57:42

சென்னை: கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த மா.சுப்பிரமணியன் எம்எல்ஏ மகன் மரணமடைந்தார்.  சென்னை மாநகராட்சி முன்னாள் மேயரும், சைதாப்பேட்டை தொகுதி திமுக எம்எல்ஏவும், சென்னை தெற்கு மாவட்ட திமுக செயலாளருமான மா.சுப்பிரமணியன் மற்றும் அவரது மனைவி காஞ்சனா ஆகியோருக்கு கடந்த செப்டம்பர் 28ம் தேதி கொரோனா தொற்று ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து இருவரும் வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொண்டனர்.   
இந்த நிலையில் மா.சுப்பிரமணியனின் இளைய மகன் அன்பழகனுக்கு (34) கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. சென்னை கிங் இன்ஸ்டிடியூட்டில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. கொரோனா நெகட்டிவ் ஆனது. இந்நிலையில் நேற்று அவர் திடீரென மரணம் அடைந்தார்.

மா.சுப்பிரமணியத்துக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். மூத்த மகன் இளஞ்செழியன். டாக்டரான இவர் லண்டனில் வேலை பார்த்து வருகிறார். இளைய மகன் தான் அன்பழகன். இவர் சிறப்பு குழந்தை. இறந்த அன்பழகனின் உடல் கிண்டியில் உள்ள அவரது இல்லத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு அவரது உடலுக்கு அரசியல் கட்சியினர், பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினர். சிறிது நேரத்திற்கு அங்கிருந்து அன்பழகன் உடல் எடுத்து செல்லப்பட்டு அருளம்பேட்டை இடுகாட்டில் அடக்கம் செய்யப்பட்டது. திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், ‘‘அன்பழகனை- மா.சுப்பிரமணியனும், அவரது துணைவியார் காஞ்சனா சுப்பிரமணியனும், கண்ணின் மணி போல் இத்தனை ஆண்டுகள் காத்து வந்ததை கொரோனா வந்து பறித்துச் சென்று விட்டது.

ஊரார்க்கு ஒன்று என்றால், உடனே ஓடோடிப் போய் நிற்கும் மா.சு.வுக்கு, இப்படி ஒரு சோதனையா?. செல்வன் அன்பழகன் மறைவுக்கு எனது ஆழ்ந்த இரங்கல்கள்’’ என கூறியுள்ளார். முதல்வர் ஆறுதல்:  முதல்வர் எடப்பாடி கே.பழனிச்சாமி, மா.சுப்பிரமணியத்தை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார். மகன் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து, அவருக்கு ஆறுதல் கூறினார்.

34 ஆண்டுகள் மகனை பராமரிப்பதில் முழு கவனம்
34 ஆண்டுகளுக்கு முன்பு தான்பெற்ற குழந்தை ஒரு மாற்றுத்திறனாளியாய் பிறந்தும், அக்குழந்தை மாற்றுத்திறனாளி குழந்தை என்ற எண்ணம், மா.சுப்பிரமணியத்தின் மனைவி எண்ணத்திலும் சரி, மா.சுப்பிரமணியன் சிந்தனையிலும் சரி, கடுகின் கால்முனையளவு கூட இருந்ததில்லை. அம்மா, அப்பா என்று அழைத்தல் இதை மட்டுமே செய்யக்கூடியவர் அன்பழகன். ஆகையால் அவரை காலை 6 மணி தொடங்கி  குளிப்பாட்டுதல், புத்தாடை அணிவித்தல், மூன்று வேளையும் உணவு, தேவையான மருந்து மாத்திரைகளை வழங்குதல், பிசியோதெரபி பயிற்சி செய்ய வைத்தல், தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை கண்டுகளிக்க வைத்தல் போன்ற பணிவிடைகளை செய்து முடித்து படுக்கைக்கு மா.சுப்பிரமணியன் செல்லவே இரவு 11 மணியாகி விடுமாம். வெளிப்பயணங்களை அறவே ஒதுக்கி வைத்துவிட்டு தமது மகனை பராமரிப்பதிலேயே  முழு கவனத்தையும் செலுத்தி, தமது நேரத்தை செலவிட்டவர் மா.சுப்பிரமணியன்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • pakisthan21

  ஆப்கானிஸ்தானில் உள்ள பாகிஸ்தான் தூதரகத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி பெண்கள் உள்பட 15 பேர் பலி!: புகைப்படங்கள்

 • kasirangaa21

  கொரோனா தொற்றால் மூடப்பட்டிருந்த அசாம் காசிரங்கா தேசியப்பூங்கா, உயிரியல் பூங்காக்கள் சுற்றுலாப் பயணிகள் பார்வைக்காக மீண்டும் திறப்பு!: புகைப்படங்கள்

 • kamaladance21

  அமெரிக்க தேர்தல் 2020: அனல் பறக்கும் பிரச்சாரத்திற்கு இடையே குடையுடன் கூல் நடனமாடிய கமலா ஹாரிஸ்.. வைரலாகும் புகைப்படங்கள்

 • thirupati21

  திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நவராத்திரி பிரம்மோற்சவ விழா: கருட வாகனத்தில் மலையப்ப சுவாமி எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி..!!

 • police21

  காவலர் வீர வணக்க நாள்: நாட்டைப் பாதுகாப்பதற்காக, வீரதீர செயல்களில் ஈடுபட்டு உயிர் தியாகம் செய்த காவலர்களின் நினைவு சின்னத்தில் உயரதிகாரிகள் மலர்த்தூவி மரியாதை..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்