SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

விதை பண்ணை விவசாயிகளை ஊக்கப்படுத்த விதை பெருக்கு திட்டம்: வேளாண் துறை தகவல்

2020-10-18@ 00:52:38

சென்னை: விதை பண்ணை விவசாயிகளை ஊக்கப்படுத்த விதை பெருக்கு திட்டம் மூலம் நெல் விதை உற்பத்தி செய்யும் விவசாயிகளுக்கு 75 சதவீத கொள்முதல் விலை வழங்கப்படுகிறது என்று வேளாண் துறை தெரிவித்துள்ளது.
 தமிழ்நாடு மாநில விதை மேம்பாட்டு முகமை மூலம் நெல், சிறுதானியங்கள், பயறு வகைகள், எண்ணெய் வித்துக்கள் மற்றம் பருத்தி பயிர்களுக்கான விதை பெருக்குத் திட்டம் மூலம் தரமான விதை உற்பத்தி செய்யும் விதை பண்ணை விவசாயிகளை ஊக்கப்படுத்த அவர்கள் உற்பத்தி செய்யும் அனைத்து விதைகளுக்கும் கொள்முதல் விலை வழங்கப்படுகிறது.  அதன்படி, விவசாயிகள் உற்பத்தி செய்யும் விதைகளான நெல்லுக்கு ஆதார விதை சன்ன ரகங்களுக்கு 75 சதவீதமும், மத்திய ரகங்கள் மற்றும் இதர ரகங்களுக்கு 75 சதவீதமும் சான்று விதை சன்ன ரகங்களுக்கு 60 சதவீதமும், மத்திய ரகங்கள் மற்றும் இதர ரகங்களுக்கு 60 சதவீதமும் கொள்முதல் விதை வழங்கப்படுகிறது.

 விவசாயிகளுக்கு விதைப்பண்ணைக்கு தேவையான விதைகள் வேளாண் விரிவாக்க மையங்கள் மூலம் விநியோகிக்கப்படும். விதைப் பண்ணையினை பராமரிப்பதற்காக களப்பணியாளர்கள் மற்றும் விதை சான்று அலுவலர்கள் அளிக்கும் வழிமுறைகளை விவசாயிகள் பின்பற்ற வேண்டும். இது குறித்த தகவல்களை விவசாயிகள் பெற வேண்டுமானால் கிராம அளவில் வேளாண் உதவி அலுவலர்களையும், வட்டார அளவில் உதவி விதை அலுவலர், வேளாண்மை அலுவலரையும், மாவட்ட அளவில் துணை வேளாண்மை இயக்குனர்( தமிழ்நாடு விதை மேம்பாட்டு முகமை) தொடர்பு கொள்ளலாம். இந்த தகவலை வேளாண்மை துறை அலுவலகம் தெரிவித்துள்ளது.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • twins22

    தலை ஒட்டிப் பிறந்த இரட்டை சகோதரிகள் இனி தனித்தனியே!: அறுவை சிகிச்சைக்கு பின் சந்தோஷமாக நாடு திரும்பினர்..!!

  • mumbaitrain22

    7 மாதத்திற்கு பிறகு மும்பை மின்சார ரயிலில் பெண்கள் உற்சாக பயணம்!: 4 மகளிர் சிறப்பு ரயில்களும் இயக்கம்..!!

  • dinosauregg22

    பெரம்பலூரில் தோண்ட தோண்ட கிடைத்த ‘டைனோசர்’ முட்டைகள்!: ஒன்னு இல்ல ரெண்டு இல்ல.. ‘மிரள’ வைத்த எண்ணிக்கை..வியப்பில் பொதுமக்கள்..!!

  • locusts22

    எத்தியோப்பியாவில் வெட்டுக்கிளிகள் அட்டகாசம்!: 25 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு உணவு பயிர்கள் நாசம்..விவசாயிகள் வேதனை..!!

  • rainbowtree22

    உலக பொறியாளர்களின் கவனத்தை ஈர்த்த பிலிப்பைன்ஸ் ரெயின்போ ட்ரீ டவர்!: கண்கவரும் புகைப்படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்