பாகிஸ்தான், வங்கதேசத்தை விட பின்தங்கியது உலக பட்டினி குறியீடு 94ம் இடத்தில் இந்தியா
2020-10-18@ 00:47:37

புதுடெல்லி: உலக பட்டினி குறியீடு பட்டியலில், அதிக மக்கள் பட்டினியால் வாடும் நாடுகளில் இந்தியா 94வது இடத்தில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒரு குழந்தைக்கு தேவையான சத்துள்ள சரிவிகித உணவு, 5 வயதுக்குட்பட்ட குழந்தைகள் உயரத்துக்கு ஏற்ற எடை, 5 வயதுக்கு கீழ் உள்ள குழந்தைகள் வயதுக்கேற்ற உயரம், குழந்தைகள் இறப்பு விகிதம் ஆகிய 4 காரணிகளின் அடிப்படையில் உலக பட்டினி குறியீடு பட்டியல் தயாரிக்கப்படுகிறது.
இந்நிலையில், உலக உணவு தினத்தையொட்டி, உலக பட்டினிக் குறியீடு பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. இதில் கடந்தாண்டு 102வது இடத்தில் இருந்த இந்தியா 8 இடங்கள் முன்னேறி, பட்டியலில் உள்ள 107 நாடுகளில், 94வது இடத்தை பிடித்துள்ளது. அண்டை நாடுகளான இலங்கை கடந்தாண்டை விட 2 இடங்கள் முன்னேறி 64, நேபாளம் அதே 73வது இடத்திலும், வங்கதேசம் 13 இடங்கள் முன்னேறி 75, பாகிஸ்தான் 6 இடங்கள் முன்னேறி 88வது இடத்தை பிடித்து இந்தியாவை விட மிகவும் முன்னிலை பெற்றுள்ளன.
பசியை போக்க உதவுங்கள்
இந்தாண்டுக்கான அமைதிக்கான நோபல் பரிசு, ஐநா.வின் உலக உணவு திட்ட அமைப்புக்கு வழங்கப்பட்டது. இதன் நிர்வாகத் தலைவர் டேவிட் பீஸ்லி நேற்று கூறுகையில், உலக பணக்காரர்களில் 2,200 பேரின் சொத்து, கடந்த ஏப்ரல் முதல் ஜூலை வரையிலான காலாண்டில், கொரோனா தொற்றின் போதும் கூட, 148 லட்சம் கோடி உயர்ந்து, 754.8 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது. பட்டினியால் சாவின் விளிம்பை நோக்கி சென்று கொண்டிருப்பவர்களுக்கு, இந்த பணக்காரர்கள் உதவ வேண்டும். இவர்கள் ஆதரவு அளித்தால், ஏழைகளின் பஞ்சம், பட்டினி தவிர்க்கப்படும்,’’ என்றார்.
மேலும் செய்திகள்
லாரி பள்ளத்தில் விழுந்து 12 பேர் பரிதாப பலி: உத்தரபிரதேசத்தில் சோகம்
மகாபாரத தொடரில் நடித்த மூத்த நடிகர் கொரோனாவால் மரணம்
தடுப்பூசி போடும் போது போனில் பேசிய நர்ஸ் சஸ்பெண்ட்
தடுப்பூசி போட்டவங்களுக்கு கொரோனா எப்படி வருது?.. 4 கேள்விகளை நச்சுனு கேட்ட அகிலேஷ்
கொரோனா சிகிச்சைக்கு அளிக்கப்படும் ரெம்டிசிவிர் மருந்து ஏற்றுமதிக்கு தடை : மத்திய அரசு அதிரடி உத்தரவு
கேரளாவில் ஷிகெல்லா எனும் வைரஸ் நோய்க்கு 6 வயது சிறுமி பலி: மக்கள் பீதி
11-04-2021 இன்றைய சிறப்பு படங்கள்
புகழ்பெற்ற கும்பமேளா திருவிழா : கொரோனாவுக்கு மத்தியில் ஹரித்வாரில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம்!!
சொல்வதைக் கேட்டு நடக்கும் சீனாவின் ரோபோ நாய் : அட்டகாசமான புகைப்படங்கள்!!
09-04-2021 இன்றைய சிறப்பு படங்கள்
எங்கும் மரண ஓலம்.. கதிகலங்கும் பிரேசில்!: ஒரு நாளில் 4,195 பேர் கொரோனா கொல்லுயிரிக்கு பலி..!!