SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

இலை ஜெயிக்கிற தொகுதியை கேட்கும் அல்வா மாவட்ட மாஜி மந்திரி பற்றி சொல்கிறார்: wiki யானந்தா

2020-10-18@ 00:27:39

‘‘தாமரை கட்சியில் இருக்கும் மாஜி மந்திரி கடிகாரத்தின் பெண்டுலம் போல... தொகுதி மாறிக்கிட்டே இருப்பதாக அவங்க கட்சிக்காரங்களே பேசிக்கிறாங்களே... ஏன் இந்த திணறல்...’’ என்றார் பீட்டர் மாமா.
‘‘இலை கட்சியை கை கழுவி விட்டு தாமரையின் மணத்தில் ஐக்கியமான மாஜி மந்திரி எப்டியாவது சட்டமன்றத்துக்குள் சென்றே ஆக வேண்டும் என்ற வேட்கையில் இருக்கிறாராம்... அதற்காக எந்த தொகுதியில் டெபாசிட் வாங்க முடியும்... எந்த தொகுதியில் ஜெயிக்கும் வாய்ப்பு உள்ளது என்று லேட்டஸ்ட் சர்வே எடுத்தாராம். அதுல அல்வா மாவட்டத்துல ஏற்கனவே ஜெயித்த தொகுதி இனி கை கொடுக்காது என்ற முடிவுக்கு வந்துள்ளாராம். எனவே, இப்போது அந்த தொகுதிக்கு அல்வா கொடுத்துட்டு வேறு தொகுதிக்கு செல்ல முடிவு செய்து இருக்காராம்.

இதனால் அவர் நாங்குநேரி தொகுதி மீது கண் வைத்துள்ளாராம். இலை கூட்டணியில் இடம்பெற்றுள்ள தாமரை கட்சி மாவட்டத்துக்கு ஒரு தொகுதியில் நிச்சயம் போட்டியிட வேண்டும் என்ற திட்டம் வகுத்துள்ளதாம். அந்த வகையில் மாஜி அமைச்சர் தனக்கு நாங்குநேரி தொகுதியை எப்படியாவது கேட்டுப் பெற்று விட வேண்டும் என்ற முடிவுக்கு வந்துள்ளாராம். இதற்காக அடிக்கடி தலைநகருக்கும் விசிட் அடிக்கும் அவர் கட்சிகளின் முக்கிய கூட்டங்களிலும் கலந்து கொள்கிறாராம். இலை கட்சியில் இருந்தது போல் தேசிய கட்சியிலும் பவருக்கு வர வேண்டும் என்ற திட்டத்துடன் காய் நகர்த்தி வருகிறாராம்...’’ என்றார் விக்கியானந்தா.

‘‘ரெய்டு பீதிக்கிடையிலேயும் கல்லா கட்டும் பெண் சார்பதிவாளர் பற்றி சொல்லுங்களேன்...’’ என்றார் பீட்டர் மாமா.
‘‘ கோவை மாநகரில் உள்ள சார்-பதிவாளர்களில், ஒரு பெண் சார்-பதிவாளர் எல்லா விஷயத்திலும் உச்சத்தில் உள்ளார். பத்திரப்பதிவு, பவர் பத்திரங்கள் பதிவுசெய்தல், விடுதலை பத்திரங்கள் மூலம் பத்திரம் பதிவுசெய்தல், வில்லங்க சான்றிதழ் விநியோகம் போன்ற பல்வேறு பதிவுகள் மூலம் இவர், அன்றாடம் பல லட்சம் சுருட்டுகிறார். இவர், தனது கலெக்‌ஷனுக்காக, இரண்டு உதவியாளர்கள் மற்றும் சில புரோக்கர்களை கைவசம் வைத்துள்ளார். பார்ட்டிகளிடமிருந்து, நேரடியாக மாமூல் வாங்கினால் விஜிலென்ஸ் வசம் சிக்கிக்கொள்வோம் என்பதால், புரோக்கர்கள் மூலமாகவே கரன்சி குவிக்கிறார்... பலமுறை ரெய்டுக்கு வந்த விஜிலென்ஸ் ஒன்றுமே சிக்கலையே என்று கையை பிசைந்தபடி போனாங்களாம்... அந்த பெண்மணியே சொத்துக்களாக வாங்கி குவிக்கிறாங்களாம்...’’ என்றார் விக்கியானந்தா.

‘‘ஒரு வாரம் தாங்காத அளவுக்கு நம்ம ஊர் தர பரிசோதனை அதிகாரிகள் இருக்காங்க...’’ என்று நொந்து கொண்டார் பீட்டர் மாமா.
 ‘‘முதல்வர் வருகைக்காக போடப்பட்ட பந்தல் கூட இன்னும் பிரிக்காத நிலையில், கலெக்டர் அலுவலக வளாகத்தில் ரோடுகள் பெயர்ந்து வருவது , மக்கள் பிரதிநிதிகளையும் அதிர்ச்சி அடைய செய்துள்ளது. தினமும் மாவட்ட ஆட்சியர் வந்து செல்லும் வளாகத்திலேயே இப்படி மோசமாக ரோடு போட்டார்கள் என்றால், மற்ற இடங்களில் எப்படி இருக்கும் என்று பொதுமக்கள் கேள்வி எழுப்ப, எதிர்கட்சி மக்கள் பிரதிநிதிகள் இரண்டு பேர் நேரடியாக கலெக்டர் ஆபீசுக்கு போய் கையால் ரோட்டை பெயர்த்து ஜல்லியை அள்ளி காட்டினர். இப்போது இந்த விவகாரத்தில் கான்ட்ராக்டருக்கு எப்படி பில் போடப்படும் என்ற எதிர்பார்ப்பு உள்ள நிலையில், மீண்டும் முதலமைச்சர் வந்தால் யாரை வைத்து ரோடு போட சொல்வது என்ற யோசனையும் அதிகாரிகள் மட்டத்தில் உள்ளதாம்... இந்த ரோடு சூப்பராக இருக்கு என்று சான்று கொடுத்த தரப்பரிசோதனை அதிகாரிகளை மக்களும், மாவட்ட உயரதிகாரியும் வலைவீசி தேடுறாங்களாம்...’’ என்றார் விக்கியானந்தா.

‘‘விருதுநகர்ல விழுந்து விழுந்து கல்லா கட்றாங்களாமே காக்கிகள்..’’ என்றார் பீட்டர் மாமா.
‘‘ஆறு மாதங்களா கொரோனாவால் வீட்டினுள் அடங்கிப் போயிருந்த மக்கள், தற்போது வெளியே சகஜமாக போக ஆரம்பிச்சுட்டாங்க... இதைப் பயன்படுத்தி, விருதுநகர் மாவட்டம், சாத்தூர் பகுதியில் உள்ள காக்கிகள் கையிலெடுத்த முதல் விஷயம் ‘வாகன வசூல்வேட்டை’. ஊர்ல எந்த பக்கம் போனாலும், திடீரென டூவீலர்களை மறித்து, எதையாவது சொல்லி ‘அபராதம்’ போடுகின்றனராம்... முறையான ஆவணங்களைக் காட்டினாலும், ஹெல்மெட் சரியில்லை... மாஸ்க் இல்லை... ஓவர் ஸ்பீடு என எதையாவது ஒரு காரணத்தை கூறி வசூலை தீட்டி விடுகின்றனராம்... இதற்கு ரசீதும் தருவதில்லையாம்... இந்த அதிரடி நடவடிக்கைகளால், காக்கிகளை கண்டு பொதுமக்கள் மிரண்டு ஓடும் நிலை இருக்கிறதாம்... சென்னை உட்பட எங்கிருந்து வாகனங்கள் வந்தாலும், நிறுத்தி அபராதம் வசூலிக்காமல் விடுவதில்லையாம்... ஊரடங்கு தளர்வுல ஏதோ வேலைக்குப் போய், கிடைக்கிற 100, 200ஐயும் இப்படி காக்கிகளிடம் அழ வேண்டியிருக்கிறதே என தொழிலாளர்கள் புலம்புகின்றனராம்...’’ என்றார் விக்கியானந்தா.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • rainpurevi111

  தமிழகத்தை மிரட்டும் புரெவி புயல்... கொட்டும் மழை; கொந்தளிக்கும் கடல் : சாலைகளில் சூழ்ந்த வெள்ளம்!!

 • radish3

  புவியீர்ப்பு சக்தியில்லாத சர்வதேச விண்வெளி நிலையத்தில் முள்ளங்கியை வெற்றிகரமாக வளர்த்த நாசா விஞ்ஞானிகள்!: புகைப்படங்கள்

 • farmers_proteeee11

  மத்திய அரசின் சட்டங்களை எதிர்த்து வீறுகொண்டெழுந்த விவசாயிகள்... டெல்லியில் 8வது நாளாக ஆவேச கோஷங்களை எழுப்பி போராட்டம்!!

 • 03-12-2020

  03-12-2020 இன்றைய சிறப்பு படங்கள்

 • 300kg11

  பிரான்சில் 300 கிலோ எடையுள்ள நபரை, வீட்டினை உடைத்து கிரேன் மூலமாக மீட்ட மீட்புப் படையினர்!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்