SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

உலக சர்வதேச பட்டினி நாடுகள் பட்டியலில் வங்காள தேசம், நேபாளம், பாகிஸ்தான் போன்ற அண்டை நாடுகளை விட இந்தியாவை பின்தங்கியிருப்பதால் அதிர்ச்சி..!!

2020-10-17@ 19:20:20

டெல்லி: உலக சர்வதேச பட்டினி நாடுகள் பட்டியலில் வங்காள தேசம், நேபாளம், பாகிஸ்தான் போன்ற அண்டை நாடுகளை விட இந்தியாவை பின்தங்கியிருப்பது கவலையை அளிக்கிறது. உலகளவில் பட்டினியால் வாடும் மக்கள் நாடுகள் ஊட்டச்சத்துக் குறைந்த மக்களின் எண்ணிக்கையை அடிப்படையாக வைத்து  பட்டியல் தயாரிக்கப்படுகிறது.இந்த பட்டியலை  வெல்த்தங்கெர்ஹைல்ஃப் மற்றும் கன்சர்ன் வேர்ல்ட்வைட் இணைந்து வெளியிட்டடு உள்ளது. இந்த பட்டியலில் நேபாளம் 73வது இடத்திலும், வங்காள தேசம் 75 மற்றும் பாகிஸ்தான் 88-வது இடத்திலும் உள்ளன. இந்தியா 94 வது இடத்தில் உள்ளது. இந்த பட்டியலில், இந்தியாவில் பட்டினியாக வாழும் மக்களின் விகிதம் மிகவும் கவலைதரும் வகையில் உள்ளது. அதாவது 27.2 ஆக இருப்பதாக அந்தப் பட்டியல் மூலம் தகவல் வெளியாகி உள்ளது.

மேலும், 132 நாடுகளில் பட்டினியால் வாடும் மக்களின் விவரங்களைக் கணக்கெடுத்த இந்த ஆய்வில், வெறும் 107 நாடுகளின் புள்ளி விவரங்கள் மட்டுமே வெளியிடப்பட்டுள்ளது. இது ஏற்கனவே பதிவான புள்ளி விவரங்கள் என்றும், கொரோனா ஊரடங்கு காரணமாக ஏற்பட்ட தாக்கம் இதில் பதிவாகவில்லை என்றும் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து தெரிவிக்கையில்' இந்த பட்டியல் மூன்று அடிப்படை விஷயங்களைக் கொண்டு தயாரிக்கப்படுகிறது. ஊட்டச்சத்துக் குறைந்த மக்களின் எண்ணிக்கை, 5 வயதுக்கு உள்பட்ட குழந்தைகளின் பலி விகிதம் உள்ளிட்டவை இதில் முக்கியமாக எடுத்துக் கொள்ளப்படுகிறது. கடந்த ஆண்டு 102வது இடத்திலிருந்த இந்தியா தற்போது 8 இடங்கள் முன்னேறி 94வது இடத்தைப் பிடித்தாலும், வங்காள தேசம், நேபாளம், பாகிஸ்தான் போன்ற அண்டை நாடுகளை விட இந்தியாவை பின்தங்கியிருப்பது கவலையை அளிக்கிறது.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • pakisthan21

    ஆப்கானிஸ்தானில் உள்ள பாகிஸ்தான் தூதரகத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி பெண்கள் உள்பட 15 பேர் பலி!: புகைப்படங்கள்

  • kasirangaa21

    கொரோனா தொற்றால் மூடப்பட்டிருந்த அசாம் காசிரங்கா தேசியப்பூங்கா, உயிரியல் பூங்காக்கள் சுற்றுலாப் பயணிகள் பார்வைக்காக மீண்டும் திறப்பு!: புகைப்படங்கள்

  • kamaladance21

    அமெரிக்க தேர்தல் 2020: அனல் பறக்கும் பிரச்சாரத்திற்கு இடையே குடையுடன் கூல் நடனமாடிய கமலா ஹாரிஸ்.. வைரலாகும் புகைப்படங்கள்

  • thirupati21

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நவராத்திரி பிரம்மோற்சவ விழா: கருட வாகனத்தில் மலையப்ப சுவாமி எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி..!!

  • police21

    காவலர் வீர வணக்க நாள்: நாட்டைப் பாதுகாப்பதற்காக, வீரதீர செயல்களில் ஈடுபட்டு உயிர் தியாகம் செய்த காவலர்களின் நினைவு சின்னத்தில் உயரதிகாரிகள் மலர்த்தூவி மரியாதை..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்