SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

இரண்டு சாவியை வைத்துக் கொண்டு ஒரு பூட்டை திறக்க நினைக்கும் இலை கட்சி தலைகள் பற்றி சொல்கிறார்: wiki யானந்தா

2020-10-17@ 01:39:04

‘‘ஒரு பூட்டுக்கு ஒரு சாவி இருந்தாலே நம்ம ஆளுக சற்று திணறி தான் திறப்பாங்க... இரண்டு சாவி இருந்தா என்ன நடக்கும்...’’ என்றார் பீட்டர் மாமா. ‘‘இது பூட்டு மாவட்டத்துக்கு தான் பொருந்தும்... அங்கே நடப்பதை லைவ்வா சொல்றேன் கேளு... இங்க இலை கட்சிக்கு ஒரே மாவட்ட செயலாளர் இருந்தாங்க... சலசலப்பு இருந்தாலும், பிரச்னை பெரிய அளவில் வெடிக்காம பார்த்துட்டாங்க... சமீபத்துல பூட்டு மாவட்டத்தை கிழக்கு, மேற்கு என இரண்டாக பிரிச்சதும் தலைவலி ஆரம்பமானது. பூட்டு மாவட்ட கிழக்கிற்கு நத்தமும், மேற்குக்கு சீனியும் மாவட்ட செயலாளர்களாக நியமிச்சாங்க.  இதேபோல், ஒன்றியமும் பிரிக்கப்பட்டதாம்... பூட்டு மாவட்டம் கிழக்கு ஒன்றியத்துக்கு நத்தம், தனது ஆதரவாளர் ஒருவரை நியமிக்கச் சொன்னாராம்... ஆனால், கட்சி மேலிடமோ 30 ஆண்டுகளுக்கும் மேலாக கட்சியில் இருப்பதைக் கூறி ஜெயமானரை கிழக்கு ஒன்றிய செயலாளராக போட்டு விட்டதாம்.... ஆனால், சீனியானவரின் ஆதரவாளரான ‘கிங்’ பெயரை மேற்கு ஒன்றிய செயலாளராக நியமிச்சிருக்காங்களாம்... தனது ஆதரவாளரை போடாததால ‘நத்தம்’ டென்ஷன்ல இருக்காராம்... இதனால் கட்சி சார்பில் கிழக்கு ஒன்றியத்துல பணிகள் ‘நத்தை வேகத்தில்’ நகர்கிறதாம்... இதுல ஒன்றிய நிர்வாகிகள் தரப்பும் அதிருப்தியில் இருக்காங்களாம்... நத்தம் அணி தாவியதால் இவரது ஆதரவாளரை திட்டமிட்டு நியமிக்காததற்கு இதுவும் ஒரு காரணமாக இருக்கலாம்னு இலை தரப்பில் ேபச்சு ஓடுது... இதை தான் பூட்டு என்ற ஒரு மாவட்டத்துக்கு ‘பவர்’ புல்லான 2 சாவிகள் இருப்பதால் கட்சி பணி என்ற பூட்டு திறக்கவே போராட வேண்டியிருக்கிறதாம்...’’ என்றார் விக்கியானந்தா. ‘‘வளமான வாழ்க்கைக்கு கோவை மாநகராட்சி பணிக்கு வாங்கனு ேபார்டு மாட்டாத குறையாக இருப்பதாக நேர்மையான ஊழியர்கள் புலம்பறாங்களாமே, அப்டியா...’’ என்றார் பீட்டர் மாமா. ‘‘கோவை மாநகராட்சியில் ஐந்து மண்டலங்களில் உயர் பொறுப்பில் இருக்கும் அதிகாரிகளுக்கு பண கஷ்டம் என்றால் என்னவென்றே தெரியாதாம்... ஊரே கொரோனா முடக்கத்தில் மாநகராட்சியை சிக்கி திணறும்போது கூட இவர்கள் காட்டில் எப்போதும்போல் கரன்சி மழைதானாம். தகர ஷீட் வாடகைக்கு எடுத்தல், பினாயில், டெட்டால், கிருமிநாசினி மருந்து கொள்முதல், உணவு, தெளிப்பான் கருவி, கையுறை வாங்குதல் என அனைத்து விவகாரத்திலும் தங்களது வேலையை காட்டிட்டாங்களாம். இதுமட்டுமின்றி, கட்டிட அப்ரூவல், சொத்து வரி விதிப்பு, குடிநீர் இணைப்பு என பல வகையான விண்ணப்பதாரர்களிடம் இருந்தும் அன்றாடம் வசூல் மழையில் குளிக்கிறாங்களாம். இந்த விஷயத்தில், விண்ணப்பதாரர்கள் யாரேனும் சட்டம் பேசினால், அவர்களது விண்ணப்பம் டேபிளுக்கு அடியில் சென்று விடுகிறது. இதை தேடி எடுக்க, பல ஆண்டு ஆகிவிடுகிறது. அதனால், 99 சதவீத விண்ணப்பதாரர்கள், போனால் போகட்டும்... எனக்கருதி, கேட்கும் தொகையை கொடுத்து விடுகின்றனர்... இந்த வசூல் வேட்டையில் தெற்கே உள்ள ஒரு அதிகாரிதான் உச்சத்தில் இருக்கிறாராம். அவர், நேரடியாக யாரிடமும் கமிட்மென்ட் வைப்பதில்லை. மாறாக, கடைநிலை ஊழியர் ஒருவரை கைக்குள் வைத்துள்ளார். இவர்தான், ஆல்-இன்-ஆல் அழகுராஜா. இவரது மனைவியும் மாநகராட்சி அலுவலகத்தில்தான் பணிபுரிகிறார். அன்றாடம் இவரை அலுவலகத்தில் இறக்கிவிட்டு, முழுநேரமும் வசூல் ஒன்றுதான் டியூட்டி.
இவரிடம் யாராவது சம்திங் தொடர்பாக டெலிபோனில் பேசினால், ‘‘ஆடியோ ரெக்கார்டிங்’’’’ விஷயத்தில் சிக்கி விடக்கூடாது என உஷாராக இருக்கிறார். விஜிலென்ஸ் ரெய்டில் இருந்து நழுவி விடுவதிலும் கில்லாடியாம். ஊரையே உளையில் போட்டு சம்பாதிக்கும் பணம் எப்டி நிலைக்கும் என்று சகஊழியர்களே திட்டி தீர்க்கின்றனர்...’’ என்றார் விக்கியானந்தா.‘‘கலெக்டரை மிரட்டும் அமைச்சர் பற்றி சொல்லுங்களேன்...’’ என்றார் பீட்டர் மாமா. ‘‘நெற்களஞ்சிய மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உள்ள “முருகப்பெருமான்” பெயரை கொண்ட மாவட்ட அளவிலான 2 உயரதிகாரிகள் தங்கள் மேலதிகாரியையே போட்டு பார்க்கிறார்களாம்... சமீபத்தில் பிடிஓ ரேங்கில் உள்ள சூப்பிரண்டு ஒருவரை, வேறு இடத்திற்கு மாற்றச் சொல்லி 2 அதிகாரிகளும் உயரதிகாரியை அணுக முயன்ற போது அவர் மறுத்துவிட்டாராம்... இதையடுத்து 2 அதிகாரிகளும் துறையின் அமைச்சரை சந்தித்து கலெக்டருக்கு அழுத்தம் கொடுக்க அந்த பிடிஓ மாற்றப்பட்டாராம்... பிடிஓ மாற்றத்திற்கு இவ்வளவு சிரமத்தை எடுத்த 2 அதிகாரிகளும் கொரோனாவுக்காக ஊராட்சிகளுக்கு செலவு செய்ததாக ₹1.80 கோடி வரை பில் பாஸ் செய்துள்ளனர். இதற்கு முறையான ரசீதுகள் இல்லை என்பதும் அந்த துறையிலும், ஊராட்சிகளிலும் பெரும் புகைச்சலை ஏற்படுத்தியுள்ளதாம்.. இந்த விஷயம் வெளியே கசிந்ததற்கு அந்த பிடிஓ தான் காரணம் என்பதால் தான் மாவட்ட உயரதிகாரியையே ஓவர்டேக் செய்தார்களாம். ரூ.1.80 கோடியில் ஒரு பெருந்தொகைக்கான காசோலை பணம் இல்லை என திரும்பிவிட்ட நிலையில் எப்படி திரும்பவும் உயரதிகாரியிடம் முறையிட்டு கையெழுத்து பெறுவது என 2 அதிகாரிகளும் விழிபிதுங்கி உள்ளதாக துறை அலுவலர்களுக்குள் பேசிக்கிறாங்களாம்... இதை பார்த்த கீழ்நிலை ஊழியர்கள் மோசடி அதிகாரிகளின் பேச்சை கேட்டு அமைச்சர் அழுத்தம் கொடுத்ததை மிரட்டலாகவே பார்க்க முடிகிறது என்று ேபசிக் கொள்கிறார்கள்...’’ என்றார் விக்கியானந்தா.     

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • rainpurevi111

  தமிழகத்தை மிரட்டும் புரெவி புயல்... கொட்டும் மழை; கொந்தளிக்கும் கடல் : சாலைகளில் சூழ்ந்த வெள்ளம்!!

 • radish3

  புவியீர்ப்பு சக்தியில்லாத சர்வதேச விண்வெளி நிலையத்தில் முள்ளங்கியை வெற்றிகரமாக வளர்த்த நாசா விஞ்ஞானிகள்!: புகைப்படங்கள்

 • farmers_proteeee11

  மத்திய அரசின் சட்டங்களை எதிர்த்து வீறுகொண்டெழுந்த விவசாயிகள்... டெல்லியில் 8வது நாளாக ஆவேச கோஷங்களை எழுப்பி போராட்டம்!!

 • 03-12-2020

  03-12-2020 இன்றைய சிறப்பு படங்கள்

 • 300kg11

  பிரான்சில் 300 கிலோ எடையுள்ள நபரை, வீட்டினை உடைத்து கிரேன் மூலமாக மீட்ட மீட்புப் படையினர்!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்