பஞ்சாப்பில் 16 முறை தீவிரவாதிகளுடன் போரிட்ட பல்வீந்தர் சுட்டுக் கொலை: சவுர்யா சக்ரா விருது பெற்றவர்
2020-10-17@ 01:15:41

அமிர்தசரஸ்: பஞ்சாபில் காலிஸ்தான் தீவிரவாதிகளுடன் 16 முறை குடும்பத்தினருடன் போரிட்ட பல்வீந்தர் சிங் சாந்து, மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். பஞ்சாப் மாநிலம், தரண் தரண் மாவட்டத்தை சேர்ந்தவர் பல்வீந்தர் சிங் சாந்து (62). இவர் 1990ம் ஆண்டுளில் காலிஸ்தான் தீவிரவாத அமைப்புக்கு எதிராக செயல்பட்டார். இதனால், காலிஸ்தான் தீவிரவாதிகள் இவரை பலமுறை கொல்ல முயன்றனர். இவரது குடும்பத்தின் மீது தீவிரவாதிகள் நடத்திய 16 தாக்குதல்களை இவர் வீரத்துடன் முறியடித்துள்ளார். கடந்த 1990ல், இவரது குடும்பத்தினர் மீது 200க்கும் மேற்பட்ட தீவிரவாதிகள் 5 மணி நேரம் தொடர்ந்து தாக்குதல் நடத்திய போது, தனது சகோதரர்கள், அவர்களின் மனைவிகளுடன் சேர்ந்து மிகவும் துணிச்சலாக எதிர் கொண்டார். இதனால், இவர் மிகவும் புகழ் பெற்றார்.
இந்நிலையில், பஞ்சாப்பில் காலிஸ்தான் தீவிரவாதிகள் ஒழிக்கப்பட்டதால், பல்வீந்தர் சிங் சொந்தமாக சிறிய பள்ளிக் கூடத்தை நடத்தி வந்தார். அவர் நேற்று தனது வீட்டில் உள்ள அலுவலகத்தில் இருந்த போது, இரு சக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் அவரை நோக்கி சரமாரியாக சுட்டனர். இதில், பலத்த காயமடைந்த அவர், மருத்துவமனை கொண்டு செல்லும் வழியிலேயே இறந்தார். இது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். இவர், கடந்த 1993ல் மத்திய அரசின் வீரதீரத்துக்கான ‘சவுர்யா சக்ரா’ விருது பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகள்
மேற்குவங்கம், கேரளா, அசாமில் ஆளுங்கட்சிக்கு மீண்டும் வாய்ப்பு தமிழகத்தில் திமுக ஆட்சியை பிடிக்கும்: ஐஏஎன்எஸ், சி-வோட்டர் கருத்துக்கணிப்பில் பரபரப்பு தகவல்
சிறுநீரக கோளாறு காரணமாக நடிகர் அமிதாப் பச்சன் மும்பையில் தனியார் மருத்துவமனையில் அனுமதி
மத்திய சுகாதாரத் துறை வழிகாட்டுதலின்படி நாளை முதல் 27 கோடி மூத்த குடிமக்களுக்கு தடுப்பூசி: தனியார் மருத்துவமனையில் ரூ.250 கட்டணம் வசூலிக்க அனுமதி
தமிழ் கற்பதில் தோல்வி அடைந்தேன் : மன்கிபாத்தில் பிரதமர் மோடி வருத்தம்
பிரிட்டிஷ் அரசை துரத்திய நமக்கு மோடி அரசை துரத்துவது கடினமான வேலை அல்ல: ராகுல்காந்தி எம்.பி. ஆவேசம்..!!
அமசோனியா-1 உள்ளிட்ட 19 செயற்கைகோள்களுடன் விண்ணில் பாய்ந்தது பி.எஸ்.எல்.வி சி-51 ராக்கெட்..!
28-02-2021 இன்றைய சிறப்பு படங்கள்
27-02-2021 இன்றைய சிறப்பு படங்கள்
26-02-2021 இன்றைய சிறப்பு படங்கள்
புதுச்சேரியில் பிரதமர் மோடி : கருப்பு பலூன்கள் பறக்கவிட்டு மக்கள் எதிர்ப்பு.. #மோடியே திரும்பி போ ஹேஷ்டேக்கால் அலறிய ட்விட்டர்!!
பெட்ரோல், டீசல் விலையேற்றம்; எலக்ட்ரிக் ஸ்கூட்டருக்கு மாறிய மம்தா பானர்ஜி!