SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

இலையின் செல்வாக்கை தாமரை தலைமை உரசி பார்க்க நினைக்கும் விஷயத்தை சொல்கிறார்: wiki யானந்தா

2020-10-16@ 05:27:08

‘‘முட்டைக்கு பேமசான ஊரில் தாமரை கட்சி கோஷ்டி மோதல் நாளுக்கு நாள் வெடிக்குதாமே..’’ என்று கேட்டார் பீட்டர் மாமா.
 ‘‘இங்க மாவட்ட தலைவராக இருப்பவர் யாரும் கட்சியில் தலை தூக்கி விடக்கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறாராம். இதில் மாவட்ட  செயலாளராக இருந்து, பம்பரம் போல் சுற்றிய பாளையத்துகாரரை கட்சி பொறுப்பில் இருந்து கட்டம் கட்டி வைத்திருப்பது, தாமரை விசுவாசிகளிடம் கடும் அதிருப்தியை ஏற்படுத்தி இருக்காம். பாரம்பரியம் மிக்க குடும்பத்தில் இருந்து நம்ம கட்சிக்கு இது போன்றவர்கள் வருவதே பெரிய விஷயம். ஆனால் அப்படிப்பட்டவரை ஏன் ஒதுக்கி வைத்தார்கள் என்ற கேள்வியை மாவட்ட தாமரை நிர்வாகிகள் எழுப்பி இருக்கிறார்களாம். அதற்கு பின்னால் இருக்கும் உள்குத்து குறித்து தெரிந்ததும் கொதித்து போனார்களாம்... அதாவது, தாமரை நிர்வாகிகள் சிலர். சம்பந்தப்பட்ட பாளையம் தொகுதி மக்கள் பிரதிநிதியாக இருக்கும் தமிழக விஐபி ஒருவருக்கு, பாரம்பரிய குடும்பத்திலிருந்து வந்தவரின் அரசியல் வளர்ச்சி அடைவது பிடிக்கலையாம்... அவரை வளரவிட்டால் தேவையில்லாமல் மாவட்டத்தில் சீட் பிரச்னை... கட்சியை வளர்ப்பதில் பிரச்னை... தேவையில்லாமல் உள்ளூர் விஷயத்தில் தலையிடும் பிரச்னைகள் வரும் என்பதால்... அவரை மட்டம் தட்டி வைக்க அன்பான வேண்டுகோள் விடுத்தாங்களாம்... இதையடுத்தே கூட்டணியில் இருக்கும் தாமரையின் மாவட்ட தலைவர் வழியாக வைக்கப்பட்ட செக் மூலம் பாரம்பரிய குடும்பத்தை சேர்ந்தவரை மாவட்ட தலைமை ஒதுக்கி வைத்து இருக்கிறதாம்...’’ என்றார் விக்கியானந்தா.
‘‘குமரி தொகுதி தாமரைக்கு கை கொடுக்குமா....’’ என்றார் பீட்டர் மாமா.
‘‘கன்னியாகுமரி எம்பி வசந்தகுமார் மறைவையொட்டி தொகுதி காலியாக உள்ளது. இதனால் அடுத்த எம்.பி.யை தேர்வு செய்தாக வேண்டும் என்பதில் அரசியல் கட்சியினரைவிட தேர்தல் ஆணையம் படு தீவிரமாக செயல்பட தொடங்கியுள்ளது. விருதுநகரில் இருந்தும், நெல்லையில் இருந்தும் கூடுதல் மின்னணு இயந்திரங்களை கொண்டு வந்து பெங்களூருவில் இருந்து பெல் நிறுவன பொறியாளர்களை அழைத்து வந்து சரிபார்த்து தயார் நிலையில் வைத்துள்ளது. கட்டுப்பாட்டு கருவிக்கான பேட்டரி, விவி பேட் இயந்திரத்தில் பொருத்த காகிதங்கள் லாரிகளில் வந்து சேர்ந்துள்ளன. வாக்குசாவடிகளையும் ஒரு முறை ஆய்வு செய்துவிட்டனர். எந்த நேரம் வேண்டுமானாலும் இடைத்தேர்தலுக்கான அறிவிப்பு வரலாம் என்கின்றனர். அதே வேளையில் அரசியல் கட்சியினரிடம்தான் எந்த பரபரப்பும் இல்லை. குமரி மாவட்டத்திற்கு காங்கிரஸ் தமிழக பார்வையாளர் வருகை, சேலம்காரரின் வருகை தள்ளிப்போயுள்ளது.
பெரும்பாலும் சேலம்காரர் வந்து, திட்டங்களை தொடக்கி வைத்தல், முடிந்த பணிகளை திறந்து வைத்தல், திட்ட அறிவிப்புகளுக்கு பின்னர் தேர்தல் தேதியும் அறிவிக்கப்படலாம் என்று ஒரு தரப்பும்... இல்லை... இல்லை... இலை கட்சியின் செல்வாக்கை உரசி பார்க்கவே தேர்தல் ஆணையம் மூலம் மேலிட தரப்பு பிரஷர் கொடுத்துள்ளதாக சொல்கின்றனர்... கன்னியாகுமரியில் தாமரை மலர்ந்தால்... இலையின் செல்வாக்கு மத்தியில் உயருமாம்... இல்லையென்றால் கேட்கும் சீட்டுகளை சட்டமன்ற தேர்தலில் கொடுத்துவிட்டு அவர்களுக்கும் சேர்த்து இலை தரப்பே வேலை பார்க்க வேண்டி இருக்குமாம்...’’ என்றார் விக்கியானந்தா.
 ‘‘காவல்துறை தகவல் ஏதுமிருக்கா..’’
 ‘‘சொல்றேனே..திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி காவல் நிலைய உட்கோட்ட எல்லைக்குட்பட்ட திருப்பாலைவனம் காவல் நிலையத்தில் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு  காவல் நிலைய அதிகாரியாக மூன்று பெயர்கள் கொண்ட பெண் அதிகாரி பொறுப்பேற்றார். பொறுப்பேற்ற மூன்று மாதங்களுக்குள் புகார் கொடுப்பவர் வருபவர்களிடம் தலா 2000 வசூலிப்பதை வழக்கமாக கொண்டுள்ளார். அவருக்கு வலதுகரமாக தலைமை காவலர் ஒருவர்,  ஜீப் டிரைவர், அரசு தடை விதித்த பிரண்ட்ஸ் ஆப் போலீஸ் ஒருவர் என ஒரு டீமை வைத்துக்கொண்டு மாமூல் வசூலித்து வருகிறாராம். ஆடு திருட்டு வழக்கில் குற்றவாளிகளை விடுவிக்க லஞ்சம். பனப்பாக்கம் ஏரியில் மணல் எடுப்பவர்களை வழக்கு போடாமலிருக்க லஞ்சம் என்று விளையாடுகிறார்.
கோளூர் கிராமத்தில் ஏரியில் பயிர் செய்ய நீதிமன்ற உத்தரவை கண்டுகொள்ளாத ஒரு தரப்பினரிடம் பெரிய தொகையை பெற்றுக்கொண்டு செயல்படுகிறார். திருப்பாலைவனம் பகுதியில் இறால் பணியால் பாதிக்கப்பட்டு பொதுமக்கள் போராட்டம் ஆர்ப்பாட்டம் நடத்தினர் இதனை எதிர்த்து இறால் பண்ணை உரிமையாளரிடம் பெரிய தொகை பெற்றுக்கொண்டு பொதுமக்களுக்கு எதிர்ப்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டது  ஊரடங்கு காலங்களில் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட அரசு மதுபான கடைகளில் கூடுதல் விலைக்கு மது பாட்டில்கள் விற்கும் நபர்களிடம் தினமும்  மாமூல் வாங்கி நடத்தி வருகிறார்.
பெண் அதிகாரி, விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த உறவுக்கார வாலிபருடன் திருப்பாலைவனம் காவல் நிலைய குடியிருப்பில் ஒன்றாக தங்கி, பொழுதை கழிப்பதாகவும், பொதுமக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர். திருப்பாலைவனம் காவல் நிலையத்தில் பெண் அதிகாரி அடிக்கும் கூத்து நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறதாம்’’ என்றார் விக்கியானந்தா.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • rainpurevi111

  தமிழகத்தை மிரட்டும் புரெவி புயல்... கொட்டும் மழை; கொந்தளிக்கும் கடல் : சாலைகளில் சூழ்ந்த வெள்ளம்!!

 • radish3

  புவியீர்ப்பு சக்தியில்லாத சர்வதேச விண்வெளி நிலையத்தில் முள்ளங்கியை வெற்றிகரமாக வளர்த்த நாசா விஞ்ஞானிகள்!: புகைப்படங்கள்

 • farmers_proteeee11

  மத்திய அரசின் சட்டங்களை எதிர்த்து வீறுகொண்டெழுந்த விவசாயிகள்... டெல்லியில் 8வது நாளாக ஆவேச கோஷங்களை எழுப்பி போராட்டம்!!

 • 03-12-2020

  03-12-2020 இன்றைய சிறப்பு படங்கள்

 • 300kg11

  பிரான்சில் 300 கிலோ எடையுள்ள நபரை, வீட்டினை உடைத்து கிரேன் மூலமாக மீட்ட மீட்புப் படையினர்!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்