கொரோனா சிகிச்சைக்கு அதிக கட்டணம் 26 தனியார் மருத்துவமனைகள் மீது சுகாதாரத்துறை நடவடிக்கை
2020-10-15@ 01:50:25

சென்னை: கொரோனா சிகிச்சைக்கு அதிக கட்டணம் வசூலித்த 26 தனியார் மருத்துவமனைகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர். கொரோனா தொற்றுக்கு சிகிச்சை அளிக்க 300 க்கும் மேற்ப்பட்ட தனியார் மருத்துவமனைகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதேவேளையில், அதற்கான கட்டண வரம்பையும் அரசு நிர்ணயித்துள்ளது. அதன்படி, லேசான அறிகுறிகள் உள்ளவர்களுக்கு நாளொன்றுக்கு அதிகபட்சமாக ரூ.7,500 வரையும், தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு ரூ.15 ஆயிரம் வரையிலுமே வசூலிக்க வேண்டும் என அரசாணை வெளியிடப்பட்டது.
ஆனால், பல தனியார் மருத்துவமனைகள் பல லட்ச ரூபாய் கட்டணம் வசூலிக்கின்றன. இதனைத் தொடர்ந்து புகார்களின் அடிப்படையில் தமிழகம் முழுவதும் நடத்தப்பட்ட ஆய்வில் கூடுதலாக கட்டணம் வசூலித்த 26 மருத்துவமனைகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதில் 8 மருத்துவமனைகளின் உரிமம் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டது. 18 மருத்துவமனைகள் நோயாளிகளிடம் இருந்து கூடுதலாக பெற்ற கட்டணத்தை திருப்பிச் செலுத்துமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. கொரோனா சிகிச்சை வழங்கும் தனியார் மருத்துவமனைகளில் அரசால் அங்கீகரிக்கப்பட்ட கட்டண விவரத்தை தெளிவாக பொதுமக்கள் பார்வைக்கு வைக்க வேண்டும் என சுகாதாரத்துறையால் தொடர்ந்து அறிவுறுத்தப்பட்டு வருகிறது.
Tags:
Corona treatment high fees 26 private hospitals health activity கொரோனா சிகிச்சை அதிக கட்டணம் 26 தனியார் மருத்துவமனைகள் சுகாதாரத்துறை நடவடிக்கைமேலும் செய்திகள்
ஆதாரங்களுடன் ரூ.50,000 மேல் பணத்தை எடுத்துச் செல்லலாம்: ஆதாரமில்லாததை ஆணையம் பறிமுதல் செய்யலாம்...ஐகோர்ட் உத்தரவு.!!!
ஐபிஎஸ் அதிகாரிக்கே இந்த நிலை என்றால் சாதாரண பெண் காவலர்களின் நிலை என்ன? : டிஜிபி ராஜேஷ் தாஸ் மீது பாலியல் வழக்கில் நீதிபதிகள் கேள்வி!!
சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ் மீது பாலியல் புகார் கூறிய பெண் ஐபிஎஸ் அதிகாரிக்கு அச்சுறுத்தல் அதிகரிப்பது வெட்கக்கேடானது : தமிழக எம்.பி.க்கள் ஆவேசம்!!
மத்திய அரசு உடனடியாக சமையல் எரிவாயு விலை உயர்வை ரத்து செய்ய வேண்டும்...! வைகோ வலியுறுத்தல்
மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் விழா!: சென்னை அண்ணா சாலையில் உள்ள மாற்றுத் திறனாளி குழந்தைகள் பாடல் பாடி வாழ்த்து..!!
அரசு கல்வி நிறுவனங்களில் அனைத்து ஆவணங்களையும் தமிழ் மொழியில் மட்டுமே கையாள வேண்டும்...! உயர்கல்வித் துறை உத்தரவு
கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்ட பிரதமர் நரேந்திர மோடி!: புகைப்படங்கள்
மியான்மரில் ராணுவ ஆட்சிக்கு எதிராக மக்கள் கிளர்ச்சி!: போராட்டக்காரர்கள் மீதான துப்பாக்கி சூட்டில் 18 பேர் பலி...உச்சக்கட்ட பதற்றம்..!!
இத்தாலியில் 2,000 ஆண்டுகள் பழமையான தேர் எரிமலை சாம்பலில் கிடைத்தது
01-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
28-02-2021 இன்றைய சிறப்பு படங்கள்