பாஜ அரசின் சாதனை: ராகுல் கிண்டல்
2020-10-15@ 01:23:03

புதுடெல்லி: ‘இந்தியாவின் தனி நபர் வருவாய் குறித்த சர்வதேச நிதியத்தின் கணிப்பு, பாஜ.வின் 6 ஆண்டு கால வெறுப்பு நிறைந்த கலாசார தேசியவாதத்தின் சாதனையாகும்,’ என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். இந்தியாவின் பொருளாதாரம் கொரோனா தொற்றினால் மிக மோசமாக பாதிகப்பட்டு உள்ளதாகவும், நடப்பாண்டில் இது 10.3 சதவீதத்துக்கு சரியும் என்றும் சர்வதேச நிதியம் நேற்று முன்தினம் வெளியிட்ட `உலகப் பொருளாதார கண்ணோட்டம்’ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், நடப்பு நிதியாண்டில், தனிநபர் வருவாயில் இந்தியாவை வங்கதேசம் நெருங்கி உள்ளதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது. இது பற்றி காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி நேற்று வெளியிட்ட டிவிட்டர் பதிவில், `தனிநபர் வருவாயில் வங்கதேசம் இந்தியாவை மிஞ்ச இருக்கிறது. இது பாஜ.வின் 6 ஆண்டு கால வெறுப்பு நிறைந்த கலாசார தேசியவாதத்தின் சாதனையாகும்,’ என்று கூறி மத்திய அரசை கிண்டல் செய்யும் வகையில், கைதட்டும் படத்துடன் சர்வதேச நிதியத்தின் கணிப்பு வரைபடத்தையும் இணைத்துள்ளார்.
மேலும் செய்திகள்
சொல்லிட்டாங்க...
ஐ.நா மனித உரிமை ஆணைய 46வது கூட்டம் இலங்கை தமிழர் கோரிக்கை நிறைவேறுவதை இந்தியா உறுதி செய்ய வேண்டும்: பிரதமர் மோடிக்கு, மு.க.ஸ்டாலின் கடிதம்
அதிமுக.வை மீட்பதே தாரக மந்திரம்: டிடிவி தினகரன் உறுதி
31ம் தேதிக்குள் உள்ஒதுக்கீடு வழங்காவிட்டால் பொதுக்குழுவில் கூட்டணி முடிவு: ராமதாஸ் அதிரடி
டெல்லி விவசாயிகளுக்கு ஆதரவாக தமிழகத்தில் பேரணி நடத்திய விவசாயிகள் கைது: அரசியல் கட்சித்தலைவர்கள் கண்டனம்
ஊழல் வழக்கில் தண்டனை பெற்றவருக்கு நினைவிடம் இறப்பு மர்மம் குறித்து விசாரணை கேட்ட ஓபிஎஸ் விசாரணைக்கு ஆஜராகவில்லை: மு.க.ஸ்டாலின் பேச்சு
28-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிற்கு ரூ.80 கோடி செலவில் பீனிக்ஸ் பறவை வடிவில் நினைவிடம்
27-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
குடியரசு தின விழாவில் பாரம்பரியத்தை பறைசாற்றும் கண்கவர் நிகழ்ச்சிகள் :மாமல்லபுரம் கடற்கரை கோவில், ராமர் கோவில் அலங்கார ஊர்திகள் பங்கேற்பு!!
சாலைகளில் படுத்து மறியல்... மாட்டு வண்டி, டிராக்டர்கள், ஆட்டோக்களில் பேரணி : விவசாயிகளுக்கு ஆதரவாக தமிழர்கள் ஆவேசப் போராட்டம்!!