SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

மெத்தனம்

2020-10-15@ 00:49:12

தமிழகத்தில் மருத்துவ படிப்பில் ஓபிசி மாணவர்களுக்கு 50 சதவீத இடஒதுக்கீட்டை இந்த ஆண்டு முதல் அமல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையை அரசு இன்னும் முன்வைக்கவில்லை என்று உச்ச நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ள தகவல் மிகவும் அதிர்ச்சி அளிக்கிறது. இதற்கான போராட்டம், வழக்கு உள்ளிட்டவைகளில் முழுவெற்றி பெற்றும் அதன் பயன் மாணவர்களுக்கு, அடுத்த தலைமுறைக்கு கிடைக்கவிடாமல் எடப்பாடி அரசு மெத்தனம் காட்டுவது மிகவும் வேதனைக்குரியது.

தமிழகத்தில் மட்டும் உள்ள அரசு மருத்துவ கல்லூரிகளில் 3650 மருத்துவ சீட்டுகள் உள்ளன. இதில் 15 சதவீதம் அகில இந்திய ஒதுக்கீட்டிற்கு தரப்படுகிறது. அதேபோல் மருத்துவ மேல்படிப்பில் 1758 இடங்கள் உள்ளன. இதில் 879 இடங்கள் அகில இந்திய ஒதுக்கீட்டிற்கு வழங்கப்படுகிறது. இந்த இடங்களில் 50 சதவீத இடங்களை ஓபிசி பிரிவினருக்கு வழங்கக்கோரி நடத்தப்பட்ட திமுக உள்ளிட்ட அரசியல் கட்சிகளின் சட்ட போராட்டத்தின் அடிப்படையில் சென்னை உயர் நீதிமன்றம் அகில இந்திய ஒதுக்கீட்டில் 50 சதவீத இடங்களை ஓபிசி பிரிவினருக்கு வழங்கும்படி உத்தரவிட்டது.

இந்த ஆண்டே இந்த ஒதுக்கீட்டை வழங்க கேட்டு வழக்கு மீண்டும் உச்ச நீதிமன்றத்திற்கு சென்றபோது இந்திய மருத்துவ கவுன்சில்,’ இதில் எங்கள் வேலை எதுவும் இல்லை. மத்திய அரசு சொன்னால் அப்படியே கேட்கிறோம்’ என்று பதில் தெரிவித்தது. மத்திய அரசு சார்பில் பதில் தெரிவிக்கும் போது,’ மத்திய அரசு நடத்திய ஆலோசனை கூட்டத்தில் இந்த ஆண்டு பற்றி தமிழக அரசு எதுவும் பேசவில்லை. 2021ம் ஆண்டில் அமல்படுத்துவது பற்றித்தான் கேட்டது. தமிழக அரசின் சார்பில் ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொண்ட பிரதிநிதி இதுபற்றி எங்களிடம் ஆலோசிக்கவோ அல்லது வலியுறுத்தவோ இல்லை’ என்று பட்டவர்த்தனமாக போட்டு உடைத்துவிட்டார்.

தமிழக அரசின் முழு மெத்தனத்தால் மருத்துவ படிப்புகளில் அகில இந்திய ஒதுக்கீட்டில் ஓபிசி மாணவர்களுக்கு கிடைக்க வேண்டிய 50 சதவீத இடஒதுக்கீடு திரிசங்கு நிலையில் உள்ளது. அதனால் 27 சதவீதமாவது ஒதுக்க முடியுமா என்று மத்திய அரசிடம் ஆலோசனை கேட்டு இருக்கிறது உச்ச நீதிமன்றம். தமிழக மாணவர்களின் நலனில் தமிழக அரசு கொண்டுள்ள அக்கறைக்கு ஒரு எடுத்துக்காட்டுதான் இது. அனைத்து துறைகளிலும் தமிழகத்தின் உரிமையை அடகு வைக்கிற ஒரு அரசாகத்தான் தமிழக அரசு உள்ளது. மத்திய அரசிடம் போராடி கேட்கத்தான் முடியவில்லை, போராடி பெற்ற உரிமைகளையாவது தக்கவைக்கிறதா என்றால் அதுவும் இல்லை. இது மாணவர்களின் உரிமை போர். இதில் கூடவா அலட்சியம்?

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • jaipourelephant20

    ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் கோட்டையில் மீண்டும் யானை சவாரிக்கு அனுமதி!..

  • delhiformer20

    வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஹரியானா, பஞ்சாப்பில் இருந்து டெல்லி நோக்கி விவசாயிகள் பேரணி - கண்ணீர்புகை, தண்ணீர் பீய்ச்சி விரட்டியடிப்பு

  • nivarpondyvilupuram20

    நிவர் புயல் கரையை கடந்த நிலையில் புதுச்சேரி, விழுப்புரம் மற்றும் கடலூர் மாவட்டத்தில் சேதமடைந்த இடங்கள் ! புகைப்படங்கள்

  • nivarkadaloorcmvisit20

    நிவர் புயலால் பாதிக்கப்பட்ட கடலூர் மாவட்ட மக்களை பார்வையிட்டு நிவாரண பொருட்களை வழங்கினார் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.எடப்பாடி கே.பழனிசாமி!..

  • nivarthirvannamali20

    திருவண்ணாமலை மற்றும் திருப்பத்தூரில் நிவர் புயலின் தாக்கம் !... புகைப்படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்