SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

உரிமை மீட்பு போராட்டம்

2020-10-14@ 02:24:27

நாடு முழுவதும் உயர்கல்வி நிறுவனங்களை மேம்படுத்த ‘உயர் சிறப்பு கல்வி நிறுவனம்’ (இன்ஸ்டிடியூசன்ஸ் ஆப் எமினென்ஸ்) திட்டத்தை மத்திய அரசு கடந்த 2017-ம் ஆண்டு கொண்டு வந்தது. இத்திட்டத்தின்கீழ் தேர்வாகும் உயர்கல்வி நிறுவனங்களின் மேம்பாட்டுக்கு ரூ.1,000 கோடி நிதியுதவி மற்றும் பல்வேறு சலுகைகள் தரப்படும் எனவும் மத்திய அரசு அறிவித்தது. அதன்படி தமிழகத்தில் அண்ணா பல்கலைக்கழகம் சிறப்பு அந்தஸ்து பெற தேர்வானது. ஆனால், சிறப்பு அந்தஸ்து வழங்கப்பட்டால், தமிழகத்தில் இன்ஜினீயரிங் மாணவர் சேர்க்கையில், அமலில் உள்ள 69 சதவீத இடஒதுக்கீடு பறிபோய்விடும், பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்கள் படிப்பதற்கு ஏற்ற கட்டண முறையும் இருக்காது. ஒட்டு மொத்த பல்கலைக்கழகத்தின் இயக்கத்தையும் மத்திய அரசு  தனது கட்டுப்பாட்டில் கொண்டு வந்துவிடும்.

இந்த பேராபத்தை உணர்ந்து, இந்த அந்தஸ்தை ஏற்க தமிழக அரசின் உயர்கல்வி துறை மறுத்துவிட்டது. அத்துடன், மத்திய அரசின் நிதி தேவையில்லை, மாநில அரசே நிதி தேவையை பூர்த்தி செய்துகொள்ளும் எனவும் தமிழக அரசு அறிவித்தது. இச்சூழ்நிலையில், அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா, இடஒதுக்கீடு மற்றும் மாநில நிதி உரிமைக்கு எதிராக குரல் எழுப்பியுள்ளார். அதாவது, மாநில அரசுடன் கலந்து ஆலோசிக்காமல், தன்னிச்சையாக மத்திய அரசுக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில், அண்ணா பல்கலைக்கழகத்துக்கு மாநில அரசின் நிதி தேவையில்லை. மத்திய அரசு, உயர் சிறப்பு அந்தஸ்து வழங்கி, நிதியுதவி அளிக்கவேண்டும் என பகிரங்கமாக குறிப்பிட்டுள்ளார்.

இதன்மூலம், 69 சதவீத இன்ஜினீயரிங் இட ஒதுக்கீட்டுக்கு பேராபத்தை உருவாக்கியுள்ளார். இது, தமிழக அரசின் உயர்கல்வி துறைக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. மாநில அரசை மீறி, தன்னிச்சையாக முடிவெடுத்து, மத்திய அரசுக்கு கடிதம் எழுதி சர்ச்சையை கிளப்பும் சூரப்பாவை, டிஸ்மிஸ் செய்யவேண்டும் என கல்வியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். துணை வேந்தர் சூரப்பா கர்நாடகாவை சேர்ந்தவர். சென்னை அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தர் நியமனத்தில் கடந்த 2018ம் ஆண்டு இழுபறி நீடித்தது.

அப்போது, தமிழகத்தை சேர்ந்த இரு முக்கிய கல்வியாளர்களை புறம்தள்ளி, இவரை துணை வேந்தராக நியமித்தது ஆளுனர் மாளிகை. இதன்மூலம், அண்ணா பல்கலைக்கழகத்தை காவிமயமாக்க முயற்சி நடக்கிறது. ஆளுநர்- துணைவேந்தர் ரகசிய கூட்டணி உருவாக்குகிறார்கள் என அப்போதே தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் கட்சி தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர். தமிழகத்தின் உயர்கல்வி அடையாளங்களில் முக்கியமானதாக திகழும் அண்ணா பல்கலைக்கழகத்திற்கு உயர் அந்தஸ்து வழங்கும் விஷயத்தில் துணை வேந்தர் சூரப்பாவின் போக்கு கவலையளிக்கிறது.

சிறப்பு வாய்ந்த இப்பல்கலைக்கழகத்தை மத்திய அரசு கபளீகரம் செய்யும் முயற்சியில், முதல்படியை தற்போது எடுத்து வைத்துள்ளது. ஏற்கனவே, ‘’நீட்’’ தேர்வு மூலம் தமிழக மாணவர்களின் மருத்துவ கனவை மத்திய அரசு பாழாக்கியது. தற்போது, இன்ஜினீயரிங் மாணவர் சேர்க்கையிலும் மத்திய அரசு கைவைக்கிறது. இது, தேன்கூட்டில் கை வைப்பதற்கு சமமாகும். எல்லா விஷயத்திலும் மத்திய அரசுக்கு வளைந்து கொடுப்பதுபோல், இந்த விஷயத்திலும் தமிழக அரசு வளைந்து கொடுக்காமல், உரத்த குரல் எழுப்பவேண்டும். நம் மாணவர்களின் உரிமை மீட்பு போராட்டத்தில் இருந்து பின்வாங்கக் கூடாது.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • jaipourelephant20

  ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் கோட்டையில் மீண்டும் யானை சவாரிக்கு அனுமதி!..

 • delhiformer20

  வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஹரியானா, பஞ்சாப்பில் இருந்து டெல்லி நோக்கி விவசாயிகள் பேரணி - கண்ணீர்புகை, தண்ணீர் பீய்ச்சி விரட்டியடிப்பு

 • nivarpondyvilupuram20

  நிவர் புயல் கரையை கடந்த நிலையில் புதுச்சேரி, விழுப்புரம் மற்றும் கடலூர் மாவட்டத்தில் சேதமடைந்த இடங்கள் ! புகைப்படங்கள்

 • nivarkadaloorcmvisit20

  நிவர் புயலால் பாதிக்கப்பட்ட கடலூர் மாவட்ட மக்களை பார்வையிட்டு நிவாரண பொருட்களை வழங்கினார் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.எடப்பாடி கே.பழனிசாமி!..

 • nivarthirvannamali20

  திருவண்ணாமலை மற்றும் திருப்பத்தூரில் நிவர் புயலின் தாக்கம் !... புகைப்படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்