SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

அழகின் மறு பெயர் கொண்ட மாஜி அமைச்சர் வேறு கட்சிக்கு செல்வதை தடுக்க இலை கட்சி முயற்சிப்பதை சொல்கிறார்: wiki யானந்தா

2020-10-14@ 00:49:50

‘‘சொந்தகட்சிக்காரங்க லட்சத்தை பிடுங்கிட்டாங்க... அரசுக்கு கோடியை கொட்டி கொடுத்தும் தொழிலை தொடங்க முடியலைன்னு ஏன் இலைக்கட்சிக்காரர் புலம்புறார்...’’ என்றார் பீட்டர் மாமா.
‘‘மாங்கனி மாநகராட்சியில் தற்காலிக பஸ் ஸ்டாண்ட் அருகே பூ, காய்கறி வியாபாரத்திற்காக சுமார் 300 கடைகளை கட்டினாங்க. இந்த கடைகளை அதிகபட்சமாக ரூ.6.75 கோடி கொட்டி கொடுத்து தனியார் குத்தகைக்கு எடுத்தாங்க. இதை கேள்விப்பட்ட இலையின் சிறு தலைகள் முதல் பெரிய தலைகள் வரை பலா பழத்தை ஈ மொய்ப்பதை போல... தங்களுக்கு 2 அல்லது 3 கடைகளை ஒதுக்கி கொடுக்க வேணுமுன்னு கொடி புடிச்சாங்களாம்.

உடனே விஐபி சொன்னதன் பேரில், ஒவ்வொரு வார்டு நிர்வாகிக்கும் தலா 30 ஆயிரம் கொடுத்து, வாயை அடைச்சிருக்காங்க. பகுதி நிர்வாகிகளுக்கெல்லாம் 2 லகரம் கொடுத்தாங்களாம். ஒரு வழியா பணத்தை கொடுத்து செட்டில் பண்ணிட்டோம். இனிமேல பிரச்னை வராதுனு நினைச்சிருந்த நிலையில, ஒருவர் போட்ட பொதுநல வழக்கால், விஜிலென்ஸ் தனி விசாரணையை தொடங்கியிருக்காம். இது உள்ளூர் இலை கட்சியினரிடையே ஒரு புயலை கிளப்பியிருக்காம்... முதல் போட்டவரோ இப்படி போனால் தலையில் துண்டு போட்டுட்டு போக வேண்டியதுதான்...’’ என்று புலம்பி வர்றாராம்...’’ என்றார் விக்கியானந்தா.

‘‘நினைவஞ்சலி நிகழ்ச்சியை கேலி கூத்தாக்கிய முழம் குமார் பற்றிச் சொல்லுங்களேன்...’’ என்றார் பீட்டர் மாமா.
‘‘புதுச்சேரியில் எல்லாம் தெரிஞ்ச ஏகாம்பரம் போல எம்எல்ஏவின் செயல்பாடு இருந்து கொண்டே இருக்கிறது. இவர், கிரிக்கெட் போட்டியை துவக்கி வைக்க போனால் பேடு கட்டிக்கொண்டு இரண்டு ஓவர் கிரிக்கெட் விளையாடி விட்டு துவக்கி வைப்பார். சமீபத்தில் கொரோனாவுக்கு பயப்படாதீங்க, அரைமணி நேரமும் வெயிலில் நில்லுங்க, கொடுக்காபுளி சாப்பிடுங்க,, கொரோனா இருக்கும் இடத்திலே செத்துடும் என்று சொன்ன அவரது வீடியோ அப்போது வைரலானது... தற்போது மறைந்த பாடகர் எஸ்பிபி நினைவஞ்சலிக்கு இசைக்குழு ஒரு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தது. அதில் கலந்துகொண்ட முழம்குமார், திடீரென மைக் பிடித்து பாடல் பாட ஆரம்பித்துவிட்டார்.

சச.. நிசச... என ஸ்வரம் பாடி அனைவரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தினார். ஒன்ஸ்மோர் என எல்லோரும் கோரசாக கேட்க, பின்னர் மீண்டும் வண்ணம் கொண்ட வெண்ணிலவே பாடலை பாடி தெறிக்க விட்டார். ஆனால் இதையெல்லாவற்றையும் வீடியோ எடுத்தவர், அவரிடம் போய் அண்ணே.. எஸ்பிபி இன்னும் சாகவில்லை. உங்கள் வடிவில் வாழ்கிறார் என வாங்கிய காசுக்கு ஏற்றவாறு கூவினார். இது சமூக வலைதளங்களில் வைரலானது. எனினும் இந்த வீடியோவை பார்த்த பொதுஜனங்கள்... நினைவஞ்சலி செலுத்துறேன்னு போய்... நிகழ்ச்சியை கேலி கூத்தாக்கிட்டாரேன்னு வேதனையை தெரிவிக்கிறாங்க...’’ என்றார் விக்கியானந்தா.

‘‘இலையின் மாஜி அமைச்சர் ஒருத்தர் தன்னை ஓரங்கட்டின கட்சிக்கு பாடம் புகட்ட... வேறு கட்சிக்கு தாவப்போறாராமே, அப்டியா...’’ என்றார் பீட்டர் மாமா.
‘‘ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி எம்எல்ஏவாக 3 முறை தேர்வான அழகின் மறுபெயர் கொண்ட மாஜி அமைச்சர், இலை கட்சி ஆட்சியில் விளையாட்டு மற்றும் இளைஞர் நலத்துறை அமைச்சராக இருந்தாரு... 2016 சட்டமன்ற தேர்தலில் இவருக்கு சீட் கொடுக்கல. அமைச்சராக இருந்தபோது, இவரை சுற்றி வந்த ஆதரவாளர்கள் தங்கள் பதவியை காப்பாற்றிக் கொள்ள அவரை விட்டு எஸ்கேப் ஆகிட்டாங்க... கட்சி கூட்ட அழைப்பிதழ்களில் கூட இவரது பெயரை போடுவதில்லையாம்...

இதனால் தனது காரில் இருந்த கட்சிக்கொடியை கழற்றி விட்டு மருத்துவ பணியை செய்து வருகிறாராம்... இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு, இலையின் முன்னாள் அமைச்சராக இருந்த பிராமிஸ், கிங் ஆகியோருடன் தன் எதிர்கால அரசியல் குறித்து ஆலோசித்தாராம். இதையடுத்து மாஜி அமைச்சர், மாற்று கட்சிக்கு செல்லலாம் என பரபரப்பாக பேசப்பட்டு வருகிறதாம்... இதையடுத்து இவரை கண்டுகொள்ளாமல் இருந்த இலையின் தலைகள், இப்போது மெல்ல வந்து பேச்சுவார்த்தை நடத்துகிறார்களாம்... ஆனாலும், தனது ஆதரவாளர்களுடன் மாற்று கட்சியில் இணைவதற்காக, முன்னாள் அமைச்சர் முடிவெடுத்து காய் நகர்த்தி வருகிறார்...’’ என்றார் விக்கியானந்தா.

‘‘போலி பில் மூலம் சானிடைசர் வாங்கியதாக கணக்கு காட்டி கோடிக்கணக்கில் மோசடி செய்ய முயற்சி நடக்குதாமே, உண்மையா...’’ என்று ஆச்சர்யமாக கேட்டார் பீட்டர் மாமா. ‘‘தகடு அடித்து லட்சங்களை சுருட்டுவது தடைபட்டுபோனதால் கொரோனா காலம் முடிவதற்கு முன்பாக வேறு என்ன ரூட்டில் பணத்தை சுருட்டலாம் என்று அதிகாரிகள் வர்க்கம் யோசித்து வருகிறதாம். அதற்காக மருத்துவ மனைகளுக்கு சானிடைசர் சப்ளை செய்ததாக போலியாக கணக்கு காட்டி பல கோடிகளை சுருட்டும் முயற்சிகள் நடந்து வருகிறதாம். அதாவது, தமிழக அரசு மருத்துவமனைகளில் கொரோனா வார்டுகள் அமைக்கப்பட்டன. இதில் 247 மருத்துவமனைகளில் 200 படுக்கைகள் வரையும், 47 மருத்துவமனைகளில் 300 படுக்கைகள் வரையும், 48 மருத்துவமனைகளில் 500 படுக்கைகள் வரையும் போடப்பட்டுள்ளது.

கடந்த 6 மாதங்களில் ஒவ்வொரு மருத்துவமனைக்கும் சுமார் 500 மில்லி லிட்டர் அளவுள்ள தலா 50 பாட்டில்கள் சானிடைசர் மட்டுமே வழங்கப்பட்டதாம். ஆனால் தற்போது ஒவ்வொரு மருத்துவமனைக்கும் தினமும் 6 லிட்டர் சானிடைசர் வழங்கப்பட்டதாக கணக்கு தயாராகி வருகிறதாம். இதற்கான தொகையை ‘பிஎம் கேர் பண்டு’ திட்டத்தில் இருந்து பெற விண்ணப்பிக்க உள்ளார்களாம். பிஎம் கேர் பண்டுக்கு கணக்கு வழக்குகள் கிடையாது என்பதால் தைரியமாக அதிகாரிகள் கை வைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்களாம்.

ஏற்கனவே பிரதமரின் கிசான் திட்டத்தில் கைவைத்துவிட்டு மாட்டிக்கொண்டதும் தப்பிக்க முடியாமல் வேளாண்துறை அதிகாரிகள் கதிகலங்கி உள்ளனர். ஆனாலும் இதில் அடிமட்ட ஊழியர்களையும், தற்காலிக ஊழியர்களையும் சிக்க வைத்துவிட்டனர். தற்போது சானிடைசர் வாங்கியதற்கான பணம் மத்திய அரசிடமிருந்து ஒதுக்கீடு செய்யப்பட்ட பிறகு, விசாரணை வந்துவிட்டால், மருத்துவத் துறையில் உள்ளவர்களில் அடிமட்ட ஊழியர்கள், தற்காலிக ஊழியர்களை மட்டுமே சிக்க வைத்து அதிகாரிகள் தப்பித்து விடுவார்களோ என்று நேர்மையான அதிகாரிகள் வேதனையோடு சொல்கிறார்கள்...’’ என்றார் விக்கியானந்தா.   

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • kalingar-pic-3

  காலம் பொன் போன்றது... கடமை கண் போன்றது!: தமிழக சட்டப்பேரவைவில் கலைஞர் கருணாநிதியின் திருவுருவப்படம் திறப்பு..புகைப்படங்கள்..!!

 • turkey-fire-3

  துருக்கியில் அதிதீவிரமாக பரவி வரும் காட்டுத்தீயால் ஒரு நகரமே கருகியது!: ஆயிரக்கணக்கானோர் வீடுகளை இழந்து பரிதவிப்பு..!!

 • jammu-flood-29

  ஜம்மு காஷ்மீர் மற்றும் இமாச்சலில் மேக வெடிப்பால் பெருவெள்ளம், நிலச்சரிவு!: 22 பேர் உயிரிழப்பு..பலர் மாயம்..!!

 • u.p.lorry-bus-acc

  உ.பி.யில் கோர விபத்து!: பேருந்து மீது லாரி மோதியதில் சாலையில் தூங்கிய 18 தொழிலாளர்கள் உடல் நசுங்கி பலி..!!

 • sand-storm-china

  அடுத்தடுத்து தாக்கும் இயற்கை பேரிடர்களால் ஸ்தம்பிக்கும் சீனா!: 350 அடி உயரத்திற்கு வீசிய மணல் புயலால் மக்கள் அவதி..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்