வீட்டை காலி செய்ய வைத்ததால் ஆத்திரம் ஒர்க்ஷாப்புக்கு தீ மெக்கானிக் பலி: வெறிச்செயலில் ஈடுபட்ட வெல்டர் கைது
2020-10-14@ 00:28:47

தூத்துக்குடி: வீட்டை காலி செய்ய வைத்ததால் நள்ளிரவில் ஒர்க் ஷாப்பிற்கு வெல்டர் தீவைத்தார். இதில் மெக்கானிக் கருகி பலியானார். தூத்துக்குடி, காட்டன் ரோடு, 25 வீடு காம்பவுண்ட்டில் வசித்தவர் அண்ணாமலை (42). மாடியில் குடியிருந்து, கீழ்ப்பகுதியில் டூ வீலர் மெக்கானிக் ஷாப் நடத்தி வந்தார். அதே காம்பவுண்டில் பக்கத்து வீட்டில் வசித்த வெல்டரான மரிய அந்தோணி தினேஷ் மெண்டிஸ் (45) என்பவர் தினமும் போதையில் தகராறு செய்து வந்தார்.
அண்ணாமலை மற்றும் அங்குள்ளவர்கள் வலியுறுத்தியதன் பேரில் அந்த வீட்டின் உரிமையாளர் தினேஷை காலி செய்ய வைத்தார். இதனால் அவர் அருகில் உள்ள தெருவில் குடியேறினார்.
வீட்டை காலி செய்ய வைத்துவிட்டாரே என்ற ஆத்திரத்தில் நேற்று முன்தினம் நள்ளிரவு அண்ணாமலையின் ஒர்க் ஷாப்பிற்கு வெளியே நிறுத்தியிருந்த பைக்குகளுக்கு தினேஷ் தீ வைத்து விட்டு தப்பினார். ஒர்க் ஷாப்பில் பிடித்த தீ, அறைக்கதவு மூலம் மாடிக்கும் பரவியது. மாடியில் படுத்திருந்த அண்ணாமலை, மனைவி கெங்காதேவி (38), இளைய மகன் நிகில் (4) ஆகியோரை மீட்டு பக்கத்து வீட்டு மாடி வழியாக அனுப்பினார். மூத்தமகன் நித்தினும் (8), அண்ணாமலையும் வீட்டுக்குள்ளேயே மயங்கிக் கிடந்தனர். தீயணைப்பு துறையினர் வந்து தீயை அணைத்தபோது அண்ணாமலை வீட்டிற்குள்ளேயே இறந்து கிடந்தார். போலீசார் தினேஷை கைது செய்தனர்.
Tags:
Home evacuation rage workshop fire mechanic killed hysteria welder arrested வீட்டை காலி ஆத்திரம் ஒர்க்ஷாப்பு தீ மெக்கானிக் பலி வெறிச்செயல் வெல்டர் கைதுமேலும் செய்திகள்
வாணியம்பாடியில் கடனை திருப்பி தராததால் தோல் வியாபாரி கடத்தல்!: 4 பேரை கைது செய்து போலீசார் நடவடிக்கை..!!
திருச்சி விமான நிலையத்தில் 1.5 கிலோ தங்கம் பறிமுதல்
காரில் எடுத்து வந்த 176 பவுன் நகை பறிமுதல்
திருநின்றவூரில் போலி ஆவணம் மூலம் ரூ.1 கோடி மதிப்புள்ள காலி நிலம் அபகரிப்பு: 3 பேர் கைது போலீசார் நடவடிக்கை
தியானம் செய்த வீட்டை விற்றதால் ஆத்திரம் கிரைண்டர் கல்லை தலையில் போட்டு மூதாட்டி படுகொலை: சித்த மருத்துவர் போலீசில் சரண்
கஞ்சா விற்றவர்கள் கைது
கொல்கத்தாவில் அடுக்குமாடி குடியிருப்பில் பயங்கர தீ விபத்து : லிப்டில் சிக்கி 4 தீயணைப்பு வீரர்கள் உட்பட 9 பேர் பலி
இன்றுடன் நிறைவடைகிறது சென்னை புத்தக கண்காட்சி!: 9 லட்சம் பேர் வருகை...ஆர்வமுடன் புத்தகங்களை வாங்கி செல்லும் மக்கள்.!!
சுற்றுச்சூழலை வலியுறுத்தி ரஷ்யாவில் உறைந்த ஏரியில் ஹாக்கி போட்டி!: முன்னணி வீரர்கள் பங்கேற்று குதூகலம்..!!
09-03-2021 இன்றைய சிறப்பு படங்கள்
ஆஸ்திரேலியாவில் உழைப்பாளர் தின கொண்டாட்டம்!: வானில் பறக்கவிடப்பட்ட பிரம்மாண்ட ராட்சத பலூன்கள்..!!