செல்போன் கதிர்வீச்சை தடுக்கும் எனக்கூறி மாட்டுச் சாணத்தால் உருவாக்கப்பட்ட 'சிப்' ஒன்றை வெளியிட்டுள்ளது ராஷ்டிரிய காமதேனு ஆயோக்
2020-10-13@ 15:30:44

டெல்லி: மாட்டு சாணம், கதிர்வீச்சு தடுப்பாற்றல் கொண்டது என்பது அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளதாக ராஷ்ட்ரிய காமதேனு ஆயோக்கின் தலைவரின் வல்லபாய் கதிரியா தெரிவித்துள்ளார். பால் பொருட்களைத் தவிர்த்து பசு மாட்டுச் சாணம் மற்றும் பசு மாட்டு சிறுநீர் போன்றவற்றையும் சந்தைப்படுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. அதன் ஒரு பகுதியாக மத்திய அரசின் மீன்வள, கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை அமைச்சகத்தின் கீழ் வரும் ராஷ்ட்ரிய காமதேனு ஆயோக், பசுக்களை பேணுதல், பாதுகாப்பு மற்றும் மேம்பாடுத்துவதை நோக்கமாக கொண்டுள்ளது.
இதன் தலைவராக வல்லாப் கத்திரியா உள்ளார். 2019ம் ஆண்டு உருவாக்கப்பட்ட இந்த ஆயோக், பண்டிகைகளின் போது மாட்டு சாணம் சார்ந்த பொருட்களைப் பயன்படுத்துவதை ஊக்குவிக்கும் வகையில் நாடு தழுவிய பிரசாரத்தைத் தொடங்கியுள்ளது. இந்நிலையில் வல்லபாய் கத்திரியா மாட்டு சாணத்தால் செய்யப்பட்ட சிப் ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த சிப் செல்போன்களில் இருந்து வெளிப்படும் கதிர்வீச்சை குறைக்கும் என்றும் நோய்களை எதிர்கொள்ளும் திறன் வாய்ந்தது என்பது அறிவியல்பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது என்றும் வல்லபாய் கத்திரியா தெரிவித்துள்ளார்.
இது குறித்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர்; கதிர்வீச்சினால் ஏற்படும் ஆபத்தில் இருந்து ஒருவர் தன்னை பாதுகாத்துக் கொள்ள வேண்டுமானால் இந்த சிப்பை பயன்படுத்துங்கள் என்று கத்திரியா கேட்டுக் கொண்டுள்ளார். இந்த சிப்பை குஜராத்தில் இருக்கும் ஒரு பசு மாட்டுப் பண்ணை உருவாக்கியுள்ளது. மாட்டுச் சாணம் ஒவ்வொருவரையும் காப்பாற்றும். வீட்டில் இந்த மாட்டுச் சாணத்தை வைத்தால், கதிர்வீச்சில் இருந்து பாதுகாத்துக் கொள்ளலாம். செல்போனில் இருந்து வெளியாகும் கதிர்வீச்சு மனிதரை தாக்காமல் இந்த மாட்டுச் சாணத்தால் செய்யப்பட்ட சிப் பாதுகாக்கும்.
இந்த சிப்பை செல்போன்களில் பயன்படுத்தலாம். இது நோய் எதிர்ப்பு சக்தியைக் கொடுக்கும். மாட்டுச் சாணத்தால் ஆன இந்த சிப்புக்கு ''கவ்சத்வ கவாச்'' என்று பெயரிடப்பட்டுள்ளது என கூறினார்.
மேலும் செய்திகள்
பிரதமர் மோடிக்கு கொரோனா தடுப்பூசி..! நாட்டு மக்கள் தயக்கத்தில் இருந்து வெளிவர உதவும்: எய்ம்ஸ் இயக்குனர் பேட்டி
மேற்கு வங்கத்தில் 8 கட்டங்களாக தேர்தல் நடத்துவதற்கு தேர்தல் ஆணையத்துக்குத் தடை விதிக்க கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்கு...!
தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றும் பீகார் அரசு: மாநிலத்தில் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி இலவசம்....முதல்வர் நிதிஷ்குமார் அறிவிப்பு.!!!
ஆளுங்கட்சியின் முறைகேடு, அராஜகங்களை கண்டித்து திருப்பதி விமான நிலையத்தில் சந்திரபாபு நாயுடு தர்ணா!: போலீசாரிடம் ஆவேசம்..!!
“தடுப்பூசி போட்ட வலியே தெரியவில்லை”... புதுச்சேரி செவிலியரை புன்னகையுடன் பாராட்டிய பிரதமர் மோடி...!..
பக்க விளைவுகள் மிகக் குறைவு: எம்.பி., எம்.எல்.ஏக்கள், எதிர்க்கட்சியினரும் கொரோனா தடுப்பூசி போட்டுகங்க: மத்திய சுகாதார அமைச்சர் வேண்டுகோள்
கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்ட பிரதமர் நரேந்திர மோடி!: புகைப்படங்கள்
மியான்மரில் ராணுவ ஆட்சிக்கு எதிராக மக்கள் கிளர்ச்சி!: போராட்டக்காரர்கள் மீதான துப்பாக்கி சூட்டில் 18 பேர் பலி...உச்சக்கட்ட பதற்றம்..!!
இத்தாலியில் 2,000 ஆண்டுகள் பழமையான தேர் எரிமலை சாம்பலில் கிடைத்தது
01-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
28-02-2021 இன்றைய சிறப்பு படங்கள்