SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

தாமரையின் தங்க தலைவர் கப்சிப் ஆன கதையை சொல்கிறார்: wiki யானந்தா

2020-10-13@ 02:33:55

‘‘இந்த கையில காசு... அந்த கையில தோசை என்று அரசு பணியை அளந்து செய்பவர்களால் அப்பாவி பொதுமக்கள் அவஸ்தை படறாங்களாமே, உண்மையா...’’ என்றார் பீட்டர் மாமா.
‘‘கோவையில் உள்ள வருவாய் வட்டாட்சியர் அலுவலகத்தின் கீழ் உள்ள நில அளவை பிரிவில் பணிபுரியும் நில அளவையர்கள் காட்டில் தற்போது கரன்சி மழை வெகுவாக பெய்கிறது. நில அளவீடு செய்து தரக்கோரி விண்ணப்பதாரர்கள், அரசு கருவூலத்தில் பணம் செலுத்தியவுடன், நில அளவையாளர்கள், சம்பந்தப்பட்ட இடத்துக்கு நேரில் சென்று, வரையறுக்கபட்ட காலக்கெடுவிற்குள் நில அளவீடு செய்து கொடுக்க வேண்டும். ஆனால், சம்திங் கொடுத்தால்தான் நில அளவீடு நடக்கிறது. இல்லையேல், மிக கடுமையாக அலைக்கழிக்கின்றனர்.

ஒரு குறிப்பிட்ட தொகையை பெற்றுக்கொண்ட பின்னரே நில அளவீடு பணிகளை மேற்கொள்கின்றனர். சாதாரண நபர்களை தவிர்த்து, நில விற்பனை இடைத்தரகர்கள் மற்றும் வீட்டுமனைகளாக விற்கப்படுகின்ற நிலங்களை அளவீடு செய்ய இவர்கள் ஓடோடி செல்கின்றனர். காரணம், அங்குதான் பெரும்தொகை ஒரே ைடமில் செட்டில் செய்யப்படுகிறதாம். அதனால் தான் அந்த வேகமாம்... கரன்சி கொள்கையாக கோவை வடக்கு, சூலூர், அன்னூர், மதுக்கரை, பேரூர் உள்ளிட்ட தாலுகா அலுவலகங்களில் விண்ணப்பங்கள் பெருமளவில் தேங்கி இருக்காம். மாவட்ட உயரதிகாரி நடவடிக்கை எடுத்து நேர்மையாக விண்ணப்பித்துள்ளவர்களுக்கு நிலத்தை உடனே அளந்து தர வேண்டும் என்கிறார்கள் பாதிக்கப்பட்டவர்கள்...’’ என்றார் விக்கியானந்தா.

‘‘வாட்ஸ் வம்புக்கு அளவே இல்லாம போச்சு போல...’’
‘‘தமிழகத்துல தற்காலிகமோ, நிரந்தரமோ எந்த பணி நியமனமா இருந்தாலும், அதன் மூலம் கல்லா கட்ட ஒரு குரூப் கிளம்பிட்டு வருது. சமீபத்தில் 2,423 கெஸ்ட் லெக்சரர் போஸ்டிங் போட அனுமதி கொடுத்தாங்க. அடுத்த கணமே இதற்கான ஆள்பிடிப்பு படலம் ஆரம்பமாகிருச்சு. இதுல விவிஐபி மாவட்டத்துல அண்ணாவோட காலேஜ்ல இருக்குற தமிழ் வாத்தியாரு முன்னணியில இருக்காராம். இத எப்படியோ மோப்பம் புடிச்ச வாத்தியாரு ஒருத்தரு, இத தடுத்து நிறுத்த வாங்கனு வாட்ஸ் அப்ல அறைகூவல் விடுத்துருக்காரு... அதை படித்த கல்லா கட்டும் நபர்.. இவருக்கு விருப்பம் இல்லையென்றால் ஒதுங்க வேண்டியது தானே... எதுக்கு ஊரை கூட்டுறாரு...’’ என்று கொந்தளிக்கிறாராம்...’’ என்றார் விக்கியானந்தா.
‘‘தப்பை வாட்ஸ் அப் மூலம் கேட்டா என்ன... வாயால கேட்டா என்ன... அதைவிடு, தாமரை தலைவரின் அந்தர் பல்டியை பற்றி சொல்லுங்களேன்...’’ என்றார் பீட்டர் மாமா.

‘‘இலை கட்சியில் முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டதும்... தாமரை கட்சியில் ஓரங்கட்டப்பட்டுள்ள தங்கத்தின் பெயரை சுருக்கமாக கொண்டவர் முதல்வர் வேட்பாளர் விஷயத்தில் முரண்டு பிடித்தார். இதனால் அடுத்த நொடியே தமிழக அரசியலில் லைம்லெட்டுக்கு வந்துட்டார். இது இலை தரப்பில் கொந்தளிப்பை ஏற்படுத்தியதாம்... அதே கொந்தளிப்பு தி.நகர் தாமரை மாளிகையிலும் காணப்பட்டதாம். சொந்த தொகுதியில் செல்வாக்கு இழந்ததால், தங்கம் குழம்பி போய் உள்ளது என்று இலை தரப்பு கடும் தாக்கு தாக்கியது. இலையின் அதிருப்தியை சரிகட்ட தாமரை தலைவரு...

முதல்வர் வேட்பாளரை சந்தித்து அவரு இப்போதைக்கு பேசியதை பெரிதாக எடுத்து கொள்ள வேண்டாம்... அவருக்கு டெல்லியில் வாய்ஸ் இல்லை... நான் எல்லாவற்றையும் பார்த்துக் கொள்கிறேன்னு சமாதானம் செய்தாராம். டெல்லியும் தங்கத்தை அழைத்து தலைவர் பதவி கிடைக்கவில்லை என்று பிரச்னை செய்கிறீர்களா.. அடக்கி வாசிங்க என்று டோஸ் விட்டதாம்.... இதனால அரண்டு போன தாமரையின் முன்னாள் தலைவரு... இலைதான் தான் எங்கள் கூட்டணிக்கு தலைமை. சேலம்காரர் தான் முதல்வர் வேட்பாளர்... நான் கூட்டணியை முடிவு செய்ய முடியாது... நான் சொன்னதை ஊடகங்கள் குழப்பிட்டாங்கனு அந்தர் பல்டி அடித்தாராம்...’’ என்றார் விக்கியானந்தா.

‘‘ காக்கி அதிகாரிக்கு அரை லகரம் காணிக்கை செலுத்தினால்... ஐம்பது லகரம் சம்பாதிக்கலாம்னு சொல்றாங்க... உண்மையா...’’ என்றார் பீட்டர் மாமா.
‘‘கடற்கரை மாவட்டமான நாகை மாவட்டத்தில் டவுன், வெளிப்பாளையம், நாகூர், திட்டச்சேரி, திருகண்ணபுரம், வேளாங்கண்ணி, கீழ்வேளூர், கீழையூர், வலிவலம் ஆகிய 9 காவல் நிலையங்கள் டிவிஷன் உயரதிகாரி கன்ட்ரோலில் இருக்காம். இந்த பகுதிகளில் அதிக அளவில் மணல்குவாரிகள் உள்ளதால் மணல் கடத்தல் சகஜம். அதே போல் புதுச்சேரி மாநிலத்தில் இருந்து நாகை மாவட்டத்திற்கு மதுபானம், சாராயம் கடத்தலும் தொடர்ந்து நடக்குதாம். மணல், சாராயம் கடத்தலில் ஈடுபடுவோர் பழனிமுருகனின் பெயர் கொண்ட காக்கி அதிகாரிக்கு வாரம் ரூ.50 ஆயிரம் மாமூலாக காணிக்கையாக செலுத்தவேண்டுமாம்..

காணிக்கை செலுத்தாத மணல் புரோக்கர், சாராயம் கடத்துவோர் மீது சம்பந்தப்பட்ட காவல் நிலையங்களுக்கு தகவல் தெரிவித்து தங்களது காவல் நிலைய எல்லையில் மணல், சாராயம் கடத்தல் சம்பவங்கள் தொடர்ச்சியாக நடக்கிறது. இது குறித்து உயர் அதிகாரிகள் என்னிடம் கேள்வி கேட்கிறார்கள். எனவே உடனே வழக்குப்பதிந்து சம்பந்தப்பட்டவர்களை கைது செய்து தனக்கு ரிப்போர்ட் அனுப்பி வைக்க வேண்டும் என்று அந்த காக்கி அதிகாரி அதிரடியாக உத்தரவிடுவாராம்.. காணிக்கை செலுத்தி விட்டால் புகார்கள் வந்தால் கூட அதை கண்டு கொள்ளாமல் அந்த காக்கி அதிகாரி இருப்பாராம்..

தகவல் தெரிந்த மணல், சாராயம் கடத்துபவர்கள் மீது சம்பந்தப்பட்ட காவல் நிலைய இன்ஸ்பெக்டர்கள் வழக்குபதிவு செய்தால், ஏன் அவர்கள் மீது நடவடிக்கை எடுத்தீர்கள். உயர் அதிகாரி நான் இருக்கும் போது என்னிடம் கேட்கமாட்டீங்களா என்று கேள்விகளை கேட்டு இன்ஸ்பெக்டர்களை வறுத்து எடுத்து விடுவாராம்.. உயர் அதிகாரியே நேரடியாக மணல் கடத்துவோர்களிடம் காணிக்கை பெறுவதால் அவருக்கு கீழ் உள்ள அதிகாரிகளுக்கு காணிக்கை கிடைப்பது இல்லை என்று சக காக்கிகள் புலம்புகின்றார்களாம்...’’ என்றார் விக்கியானந்தா.     

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • rainpurevi111

  தமிழகத்தை மிரட்டும் புரெவி புயல்... கொட்டும் மழை; கொந்தளிக்கும் கடல் : சாலைகளில் சூழ்ந்த வெள்ளம்!!

 • radish3

  புவியீர்ப்பு சக்தியில்லாத சர்வதேச விண்வெளி நிலையத்தில் முள்ளங்கியை வெற்றிகரமாக வளர்த்த நாசா விஞ்ஞானிகள்!: புகைப்படங்கள்

 • farmers_proteeee11

  மத்திய அரசின் சட்டங்களை எதிர்த்து வீறுகொண்டெழுந்த விவசாயிகள்... டெல்லியில் 8வது நாளாக ஆவேச கோஷங்களை எழுப்பி போராட்டம்!!

 • 03-12-2020

  03-12-2020 இன்றைய சிறப்பு படங்கள்

 • 300kg11

  பிரான்சில் 300 கிலோ எடையுள்ள நபரை, வீட்டினை உடைத்து கிரேன் மூலமாக மீட்ட மீட்புப் படையினர்!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்