SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

Sound Notification: கூகுள் அறிமுகம் செய்யும் அட்டகாசமான வசதி..!!

2020-10-12@ 15:03:20

கூகுள் நிறுவனம் தனது இயங்குதளமான அன்ரோயிட்டில் இயங்கும் மொபைல் சாதனங்களில் புதிய வசதி ஒன்றினை அறிமுகம் செய்துள்ளது. Sound Notification எனப்படும் இவ்வசதியின் ஊடாக சில ஒலிகளை கைப்பேசிகள் அறிந்து அதற்கு ஏற்றவாறு துலங்கலை பயன்பாட்டாளர்களுக்கு வழங்கும். அதாவது நாய் குரைத்தல், நீர் ஓடும் சத்தம் உட்பட பல ஒலிகளை கண்டறியக் கூடியதாக இத் தொழில்நுட்பம் உருவாக்கப்பட்டுள்ளது. உதாதரணமாக மொபைல் பாவனையாளர் ஒருவர் காதில் ஹெட்செட் மாட்டி பாட்டுக் கேட்டுக்கொண்டிருக்கும்போது வேறு நபர்கள் வீட்டிற்கு வந்து கதவை தட்டும்போது எந்தவிதமான சத்தத்தினையும் கேட்ட முடியாது.

ஆனால் அன்ரோயிட் கைப்பேசியானது குறித்த கதவு தட்டும் சத்தத்தினை அறிந்து ஹெட் செட்டின் ஊடாக பயன்பாட்டாளருக்கு செய்தியை தெரிவிக்கும். தற்போது இவ்வாறான 10 ஒலிகளை கண்டறியக்கூடியதாக காணப்படுகின்றது. அதாவது புகை மற்றும் தீ அலாத்தின் சத்தம், குழந்தைகளின் ஒலி, அம்புலன்சின் சைரன் ஒலி, டோர் பெல் சத்தம், கதவு தட்டும் சத்தம், குரைக்கும் நாயின் சந்தம், வீட்டு உபகரணங்களின் பீப் சத்தம், நீர் ஓடும் சத்தம் மற்றும் நிலையான தொலைபேசிகளுக்கு அழைப்பு வரும்போதான சத்தம் என்பவற்றினை அறிந்து துலங்கலை காண்பிக்கும்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • twins22

    தலை ஒட்டிப் பிறந்த இரட்டை சகோதரிகள் இனி தனித்தனியே!: அறுவை சிகிச்சைக்கு பின் சந்தோஷமாக நாடு திரும்பினர்..!!

  • mumbaitrain22

    7 மாதத்திற்கு பிறகு மும்பை மின்சார ரயிலில் பெண்கள் உற்சாக பயணம்!: 4 மகளிர் சிறப்பு ரயில்களும் இயக்கம்..!!

  • dinosauregg22

    பெரம்பலூரில் தோண்ட தோண்ட கிடைத்த ‘டைனோசர்’ முட்டைகள்!: ஒன்னு இல்ல ரெண்டு இல்ல.. ‘மிரள’ வைத்த எண்ணிக்கை..வியப்பில் பொதுமக்கள்..!!

  • locusts22

    எத்தியோப்பியாவில் வெட்டுக்கிளிகள் அட்டகாசம்!: 25 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு உணவு பயிர்கள் நாசம்..விவசாயிகள் வேதனை..!!

  • rainbowtree22

    உலக பொறியாளர்களின் கவனத்தை ஈர்த்த பிலிப்பைன்ஸ் ரெயின்போ ட்ரீ டவர்!: கண்கவரும் புகைப்படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்