SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பீட்டர் மாமா: மாற்றுத்திறனாளிகள் நிதியை சுருட்டும் பெண் அதிகாரி பற்றி சொல்கிறார் wiki யானந்தா

2020-10-12@ 00:29:05

‘‘மக்கள் பணத்தை சுருட்டுவதில் மட்டும் ஆண், பெண் பாகுபாடு இல்லை என்பதை தூங்கா நகர மாவட்ட பெண் அதிகாரி நிரூபிச்சு இருக்கார் போல...’’ என்றார் பீட்டர் மாமா. ‘‘தூங்கா நகரத்துல இருக்கிற ஒரு ‘பெண் அதிகாரி’, முன்பு ‘வெயில் மாவட்டத்தில்’ வேலை செய்தபோது, மாற்றுத்திறனாளிகள் தினத்தை நடத்த, அரசு ஒதுக்கிய ரூ.50 ஆயிரத்தை போலி பில் மூலம் வாரிச் சுருட்டி பிரச்னை விஜிலென்ஸ் வரை  போயிருக்காம்... ஆனால் அதைப் பற்றியெல்லாம் அவர் கவலைப்படுவதே இல்லையாம். அப்புறம் தூங்கா நகர மாவட்டத்துக்கு வந்த பிறகு மத்திய அரசு வழங்கிய ரூ.25 லட்சம் மதிப்புள்ள மாற்றுத்திறனாளிகளுக்கான உபகரணங்களை  வழங்காமல், அரசு பள்ளியிலும், தொண்டு நிறுவன குடோன்களிலும் பதுக்கி வைத்துள்ளாராம்...

 உண்மையில் அவர் அவ்வளவு பணத்துக்கும் வாங்கினாரா... அல்லது பாதி பணத்தை சுருட்டி விட்டாரா என்றே தெரியவில்லையாம்... அந்த  பொருட்களும் தரமாக இல்லையாம்.. இதனால தான் உபகரணங்களை மாற்றுத்திறனாளிகளுக்கு கொடுக்காமல் பதுக்கி வைத்து இருப்பதாகவும் ஒரு பேச்சு ஓடுகிறது. முறைகேட்டிலும் கொடுமையான விஷயம் என்ன தெரியுமா... மனநலம்  பாதித்தோருக்கான நிதியிலும் மனசாட்சியே இல்லாமல் கொள்ளையடித்து இருக்கிறாராம்.. இதற்காக என்றே டுபாக்கூர் தொண்டு நிறுவனங்களுடன் கை கோர்த்து அவர்களின் பெயரில் எல்லா தில்லுமுல்லுகளையும் செய்கிறாராம்... இதனால  பல்வேறு அமைப்புகள், தனி நபர்கள் என்று மாவட்ட, மாநில அளவில் புகார்களை அனுப்பி அலற வைத்து இருக்கிறார்களாம். இந்த முறைகேடு குறித்து யாராவது கேட்டால்... எனக்கு அரசியல்ல அவரைத் தெரியும்... இவரைத்தெரியும் என்று  வார்த்தையாலேயே வடை சுடுகிறாராம்... இதை பார்த்த மற்றவர்கள் இந்த பெண் அதிகாரியை பற்றி பேசவே பயப்படுகிறார்களாம்...’’ என்றார் விக்கியானந்தா.

‘‘கோவையில டாஸ்மாக் சரியா ஓடாதே.. ஏதாவது வில்லங்கம் வந்து கொண்டே இருக்குமே... இந்த வாரம் என்ன வில்லங்கம்...’’ என்றார் பீட்டர் மாமா. ‘‘கோவை புறநகர் பகுதிகளில் கள்ள மார்க்கெட்டில் மது விற்பனை படுஜோராக நடக்குதாம். இதுல மதுவிலக்கு அமல்பிரிவு போலீசார் மற்றும் அந்தந்த பகுதி உள்ளூர் இன்ஸ்பெக்டர்கள், கூட்டணி வைத்து கொண்டு செயல்படுவதால்... ‘சில்லிங்  பார்’ என்ற பெயரில் இந்த கள்ள மார்க்கெட் மது விற்பனை ெதாடர்கிறது. சந்து, பொந்துகள் அல்லாமல், தனியார் ஓட்டல், ஆடம்பர ரெஸ்டாரென்ட், ரோட்டோரா தாபா உள்ளிட்ட பல்வேறு இடங்களில் விதம்விதமாக இவை விற்பனை  செய்யப்படுகிறது. குறிப்பாக, மேட்டுப்பாளையம், சிறுமுகை, பெத்திக்குட்டை, சத்தி ரோடு செல்லும் பகுதிகளில் உச்சக்கட்டத்தில் உள்ளது.

இத்தொழிலை காப்பாற்றுவதில், சமீபத்தில் உணவு கடத்தல் தடுப்பு பிரிவில் இருந்து இடம்மாறி, கோவை  புறநகர் காவல்துறைக்கு வந்த காவல் ஆய்வாளர் ஒருவர்தான் உச்சத்தில் இருக்கிறாராம். காக்கிகள் உடந்தையாக இருக்கும் வரை எங்களை ஒன்றும் செய்யமுடியாது என்கிறார்கள் சட்டவிரோத மது விற்பனையாளர்கள்... காக்கிகள் துணை  இருந்தால் லட்சாதிபதி கூட கோட்டீஸ்வரனாகும் காலம் இது...’’ என்றார் விக்கியானந்தா.   ‘‘தொகுதி மேம்பாட்டு நிதியை வாங்குவதை விடுத்து பிடிவாதம் பிடித்தால் பாதிக்கப்படுவது மக்கள் என்று ஒரு மாவட்ட உயரதிகாரிக்கு தெரியாமல் போனது வருத்தமாக உள்ளதாக மக்கள் சொல்றாங்களே...’’ என்றார் பீட்டர் மாமா.

‘‘கிரிவலம் மாவட்டத்துல உள்ள வாசி நகராட்சியில, திமுக எம்எல்ஏ தொகுதி மேம்பாட்டு நிதியில 6 மாசத்துக்கு முன்னாடி 3 ரேஷன் கடைகள் கட்டினாங்க. ஆனால், பல மாசமாகியும் ரேஷன் கடை கட்டிடங்களுக்கு மின் இணைப்பு வழங்கவே  இல்லையாம். காரணம் திமுக எம்எல்ஏ தொகுதி நிதியில வளர்ச்சிப்பணிகள் மேற்கொள்ளப்படுவதை தடுக்கவே இப்படி செய்றாங்களாம். அதேபோல வாசி நகராட்சி நிர்வாகம் மின்வாரியத்துக்கு செலுத்த வேண்டிய மின் கட்டண பாக்கி  உள்ளதாம். இதை காரணம் காட்டி, ரேஷன் கடைகளுக்கு மின் இணைப்பு வழங்கப்படலையாம். ஆளும் கட்சியினருடன் சேர்ந்து அதிகாரிகள் இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டு வர்றதா மக்கள் பேசிக்கிறாங்க...

மக்கள் வரிப்பணத்துல கட்டிமுடிச்ச  ரேஷன் கடைகளுக்கு மின் இணைப்பு வழங்காததால், புதிய கட்டிடம் பாழடைஞ்சி வருதேன்னு மக்கள் புலம்பி வர்றாங்க. மின் இணைப்பு கொடுக்க எம்எல்ஏவும் சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பலமுறை கூறியும் நடவடிக்கை இல்லையாம்.  இப்படி திமுக எம்எல்ஏக்களின் தொகுதி வளர்ச்சிபணிகளுக்கு இலை தரப்பு தான் பிரஷர் கொடுக்கிறாங்க என்றால்... மாவட்ட உயரதிகாரியாவது அதில் தலையிட்டு சரி செய்யாமல் இலை தரப்புக்கு தலையாட்டினால் எப்படி என்று கேட்கின்றனர்  பொதுமக்கள்...’’ என்றார் விக்கியானந்தா.

‘‘காக்கி ஆபீசர்ஸ் சேதி ஏதும் இருக்கா...’’ என்றார் பீட்டர் மாமா. ‘‘மாங்கனி மாநகர காக்கிகளுக்கு 6 இடங்களில் காவலர் குடியிருப்புகள் கட்டிக்கொடுக்கப்பட்டுள்ளது. புதிய வீடுகளாக இருந்தாலும் போதிய வசதிகள் இல்லையாம். 7 மாடிக்கு ஏறி போக முடியாத நிலையும் இருக்குதாம். அதே நேரத்துல  குழந்தைகள் பெரியவர்களானதால், அந்த வீடுகளை காலி செய்துவிட்டு, வாடகை வீடுகளுக்கு செல்வதில் அதிக ஆர்வம் காட்டுறாங்களாம். ஆனால் முக்கிய அதிகாரி ஒருவர், யாரும் வீட்டை காலி செய்ய அனுமதி கிடையாதுன்னு  சொல்லிட்டாராம். இதனால் சிறிய வீடுகளில் தங்கியிருக்கும் ஏட்டுகள் பெரும் சிரமத்துக்கு ஆளாகியிருக்காங்களாம். வீடு இல்லாதவர்களுக்கு வீட்டு வாடகை படியும் கொடுப்பது கடந்த 7 மாத அளவில் சரியா போய் சேரலையாம். இதனால  காக்கிகள் கடும் அதிருப்தியில இருக்காங்களாம். தம்மா துண்டு வீட்டுல எத்தனை பேர் ஒருத்தரை இன்னொருத்தர் இடித்துக் கொண்டே படுக்க முடியும்... அதிகாரிக்கு இதெல்லாம் தெரியாதா...’’ என்று கோபத்தில் கண்கள் சிவக்க ேகட்கின்றனர்  காக்கிகள்...’ என்றார் விக்கியானந்தா.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • rainpurevi111

  தமிழகத்தை மிரட்டும் புரெவி புயல்... கொட்டும் மழை; கொந்தளிக்கும் கடல் : சாலைகளில் சூழ்ந்த வெள்ளம்!!

 • radish3

  புவியீர்ப்பு சக்தியில்லாத சர்வதேச விண்வெளி நிலையத்தில் முள்ளங்கியை வெற்றிகரமாக வளர்த்த நாசா விஞ்ஞானிகள்!: புகைப்படங்கள்

 • farmers_proteeee11

  மத்திய அரசின் சட்டங்களை எதிர்த்து வீறுகொண்டெழுந்த விவசாயிகள்... டெல்லியில் 8வது நாளாக ஆவேச கோஷங்களை எழுப்பி போராட்டம்!!

 • 03-12-2020

  03-12-2020 இன்றைய சிறப்பு படங்கள்

 • 300kg11

  பிரான்சில் 300 கிலோ எடையுள்ள நபரை, வீட்டினை உடைத்து கிரேன் மூலமாக மீட்ட மீட்புப் படையினர்!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்