2021ல் தமிழகத்தில் அமையும் ஆட்சியில் பாஜ அங்கம் வகிக்கும்: பொன். ராதாகிருஷ்ணன் தடாலடி
2020-10-12@ 00:18:19

நாகர்கோவில் : தமிழகத்தில் 2021ல் அமையும் ஆட்சியில் பாஜ அங்கம் வகிக்கும் என்று பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். முன்னாள் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் நாகர்கோவிலில் நேற்று அளித்த பேட்டி: தேர்தலில் எப்படி வேண்டுமென்றாலும் கூட்டணி அமையும் என நான் கூறியதை தவறாக புரிந்து கொண்டு விட்டனர். தமிழகத்தை பொறுத்தவரை அதிமுக தலைமையிலான கூட்டணியில் பா.ஜ. அங்கம் வகிக்கிறது. கூட்டணியில் வேறு கட்சிகள் வரலாமா? என்பதை கூட்டணிக்கு தலைமை வகிக்கும் அதிமுக தான் முடிவு செய்யும். பாரதிய ஜனதாவை பொறுத்தவரை அகில இந்திய கட்சி. கூட்டணி முடிவுகளை அகில இந்திய தலைமை தான் எடுக்கும்.
அமைச்சர் கடம்பூர் ராஜூ, சொந்த தொகுதியில் நான் செல்வாக்கு இழந்து உள்ளதாக கூறி இருக்கிறார். யார், யாருக்கு எங்கெங்கு செல்வாக்கு உள்ளது என்பது, அவரவர்களுக்கே தெரியும். முதல்வர் எடப்பாடி பழனிசாமியை, பா.ஜ. மாநில தலைவர் முருகன் சந்தித்தது மரியாதை நிமித்தமாக இருக்கலாம். தமிழகத்தில் பா.ஜ. தலைமையில் கூட்டணி என்பதை காலம் முடிவு செய்யும். 2021ல் தமிழகத்தில் அமையும் ஆட்சியில் பா.ஜ. அங்கம் வகிக்கும். 60 தொகுதிகளில் பா.ஜ. வெற்றி பெறும் என்று, பா.ஜ. மாநில தலைவர் முருகன் கூறி உள்ளார். இது புதிய நம்பிக்கையை ஏற்படுத்தி உள்ளது. எடப்பாடி பழனிசாமியை, முதல்வர் வேட்பாளராக ஏற்கும் கட்சியுடன் தான் கூட்டணி என, அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் முனுசாமி கூறி உள்ளார். அதில் தவறு ஒன்றும் இல்லை. அவர்களின் கட்சி நிலைப்பாட்டை அவர் கூறுகிறார். இவ்வாறு அவர் கூறினார்.
கூட்டணி தர்மம் கடைபிடித்தால் அதிமுக அணியில் தமாகா தொடரும் ஜி.கே.வாசன் எச்சரிக்கை
தமாகா மாநில மேல் முறையீட்டு குழு தலைவர் ஏ.எம்.வேலு, கடந்த ஆகஸ்ட் 13ம் தேதி உடல் நலக்குறைவால் இறந்தார். ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கரில் உள்ள வேலுவின் இல்லத்திற்கு தமாகா தலைவர் ஜி.கே.வாசன் நேற்று சென்று அவரது உருவ படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். பின்னர், நிருபர்களிடம் அவர் கூறுகையில், ‘தமிழகத்தில், நெசவாளர் காப்பீட்டு திட்டத்தை மீண்டும் செயல்படுத்த வேண்டும். 2021 தேர்தலில் கூட்டணி தர்மத்தை கடைபிடித்தால்தான் அதிமுக கூட்டணியில் த.மா.கா. தொடரும். இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் செய்திகள்
தமிழக சட்டமன்ற தேர்தலில் போட்டியிட விருப்ப மனு தாக்கல் செய்தார் தேமுதிக பொருளாளர் பிரேமலதா!!
நெருங்கி வரும் சட்டமன்ற தேர்தல்!: கூட்டம் கூட்டமாக அமரவைத்து நேர்காணல் நடத்துகிறது அதிமுக..!!
வேட்பாளராக யார் அறிவிக்கப்பட்டாலும் அதிமுக தொண்டர்கள் ஒருங்கிணைந்து பணியாற்ற வேண்டும்..! முதல்வர் பழனிசாமி வேண்டுகோள்
சசிகலா அரசியலில் இருந்து ஒதுங்கியதை முழுமனதோடு வரவேற்கிறேன் : எல். முருகன்
அதிமுக ஆட்சியில் ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் இன்னல்களை மட்டுமே அனுபவித்தோம்
திருப்போரூர் தொகுதி பாமகவுக்கு: அதிமுகவினர் எதிர்ப்பு
தங்கும் அறை, தியேட்டர், பார் என சகல வசதிகளுடன் விண்வெளியில் கட்டப்பட்டு வரும் பிரமாண்ட ஹோட்டல்..!
04-03-2021 இன்றைய சிறப்பு படங்கள்
நைஜீரியாவில் பயங்கரவாதிகளால் கடத்தப்பட்ட பள்ளி மாணவிகள் 279 பேர் விடுவிப்பு!: புகைப்படங்கள்
ஆராய்ச்சியாளர்களையே மிரள வைத்த டைனோசர் புதைப்படிவம்!: அர்ஜெண்டினாவில் கண்டெடுப்பு..!!
03-03-2021 இன்றைய சிறப்பு படங்கள்