தமிழக முதல்வர் வருகையால் பொலிவு பெறும் ஊட்டி நகரம்
2020-10-11@ 14:40:19

ஊட்டி: தமிழக முதலமைச்சர் நீலகிரிக்கு வருவதாக கூறப்படும் நிலையில், ஊட்டி நகரில் உள்ள அனைத்து நடைபாதைகளில் உள்ள அலங்கார தடுப்புகளுக்கு வர்ணம் பூசும் பணி ஜோராக நடக்கிறது. தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கொரோனா ஆய்வு பணிக்காக விரைவில் நீலகிரி மாவட்டத்திற்கு வரவுள்ளதாக தகவல்கள் வெளியாகின. இதனால், ஊட்டி நகரை அழகுப்படுத்தும் பணியில் மாவட்ட நிர்வாகம் மற்றும் நகராட்சி நிர்வாகம் ஈடுபட்டுள்ளன. தற்போது சேரிங்கிராஸ் முதல் மாவட்ட கலெக்டர் அலுவலகம் வரையும் நடைபாைத ஓரங்களில் அலங்கார தடுப்புகள் அமைக்கும் பணிகள், தடுப்புச்சுவர்களில் ஓவியங்கள் வரையும் பணிகள்,
அலங்கார தடுப்புகளுக்கு வர்ணம் பூசும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி பூங்காவிற்கு செல்ல வாய்ப்புள்ளதால், தாவரவியல் பூங்கா செல்லும் சாலையோரங்களில் உள்ள அலங்கார தடுப்புக்களில் தற்போது வர்ணம் பூசும் பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது. எனினும், முதல்வர் எப்போது வருகிறார் என்பது இதுவரை உறுதி செய்யப்படவில்லை.
மேலும் செய்திகள்
ஓட்டுக்கு பணம் வாங்கவில்லை என வாக்காளர்களிடம் சத்திய பிரமாணம் வாங்க தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட முடியாது: உயர்நீதிமன்றம்
27 மணி நேரம்..195 நாடு!: பென்சில் முனையில் உலக நாடுகளின் பெயர், தலைநகரங்களை செதுக்கி கல்லூரி மாணவி சாதனை..!!
பவானியில் செல்லியாண்டி அம்மன் கோவில் திருவிழா: பக்தர்களே கருவறைக்கு சென்று அம்மனுக்கு அபிஷேகம் செய்யும் நிகழ்வு
தேர்தல் பறக்கும்படை அதிரடி!: கடலூரில் உரிய ஆவணம் இன்றி கொண்டு வரப்பட்ட ரூ.51 லட்சம் பறிமுதல்..!!
மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் அரசு மருத்துவமனையில் பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரம்: மாவட்ட செயலாளர் க.சுந்தர் வழங்கினார்
பைக் விபத்தில் போலீஸ்காரர் பலி
02-03-2021 இன்றைய சிறப்பு படங்கள்
கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்ட பிரதமர் நரேந்திர மோடி!: புகைப்படங்கள்
மியான்மரில் ராணுவ ஆட்சிக்கு எதிராக மக்கள் கிளர்ச்சி!: போராட்டக்காரர்கள் மீதான துப்பாக்கி சூட்டில் 18 பேர் பலி...உச்சக்கட்ட பதற்றம்..!!
இத்தாலியில் 2,000 ஆண்டுகள் பழமையான தேர் எரிமலை சாம்பலில் கிடைத்தது
01-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்