கூட்டணி குறித்த பொன்.ராதாகிருஷ்ணன் பேட்டி விஸ்வரூபம் தமிழக பாஜ தலைவர் திடீர் டெல்லி பயணம்: ஜெ.பி.நட்டாவை சந்தித்து பேசுகிறார்
2020-10-11@ 01:21:30

சென்னை: தமிழக பாஜ தலைவர் முருகன், அதிமுகவுடன் தான் கூட்டணி என்று கூறி வரும் நிலையில், அண்மையில் முன்னாள் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் அளித்த பேட்டி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. ‘‘சட்டசபை தேர்தலில் யாருடன் வேண்டுமானாலும் கூட்டணி இருக்கலாம். அது அதிமுக அல்லது திமுகவாக கூட இருக்கலாம்’’ என கூறியிருந்தார். இது அதிமுக கூட்டணியில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது. நேற்று முன்தினம் சென்னையில் முதல்வர் எடப்பாடியை எல்.முருகன் சந்தித்து பேசினார். இந்த நிலையில் எல்.முருகன் நேற்று திடீரென டெல்லி புறப்பட்டு சென்றார்.
அவர் டெல்லியில் உள்ள உறவினர் வீட்டிற்கு வந்ததாக முதலில் கூறப்பட்டது. ஆனால், அவர் டெல்லியில் பாஜ தேசிய தலைவர் ஜெ.பி.நட்டாவை சந்தித்து பேச தான் வந்துள்ளதாக ஒரு தகவல் வெளியானது. ஜெ.பி.நட்டாவை சந்திக்க அனுமதி கேட்டிருந்தார். அதற்கு அனுமதியும் வழங்கப்பட்டது. நேற்று பீகார் தேர்தல் தொடர்பாக பிரதமர் மோடி ஆலோசனை நடத்தினார். இதில் ஜெ.பி.நட்டா உள்ளிட்ட தலைவர்கள் கலந்து கொண்டார். இதனால், எல்.முருகன் ஜெ.பி.நட்டாவை சந்திக்க முடியாத நிலை ஏற்பட்டது. இந்த நிலையில் இன்று அல்லது நாளை அவர் ஜெ.பி.நட்டாவை சந்திக்கிறார். அப்போது பொன்.ராதாகிருஷ்ணன் பேசியது குறித்து புகார் அளிப்பார் என்று கூறப்படுகிறது.
மேலும் செய்திகள்
தமிழகத்தில் பல்வேறு சம்பவங்களில் உயிரிழந்த 55 காவலர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.3 லட்சம் வழங்க முதல்வர் பழனிசாமி உத்தரவு!!
தா. பாண்டியனின் வாழ்க்கையும், அனுபவங்களும் இளம் தலைமுறையினருக்கு ஒரு பாடமாக அமையும் : முதல்வர் பழனிசாமி புகழஞ்சலி!!
அரசியல் களத்தில் மனதில் பட்டதை துணிச்சலாக பேசியும்,செயல்பட்டும் வந்தவர் தா.பாண்டியன்: ஓபிஎஸ், கமல், தினகரன் உள்ளிட்டோர் புகழாரம்!!
ஆஸ்கர் பந்தயத்தில் முன்னேறும் சூரரைப் போற்று... சிறந்த படம், நடிகர், நடிகை ஆகிய 3 பிரிவுகளில் பரிந்துரை: படக்குழுவினர் மகிழ்ச்சி!!
புடம் போட்ட தங்கம் போல் வாழ்ந்த பொதுவுடைமைப் போராளி இன்று நம்மை விட்டுப் பிரிந்து விட்டார்: தா.பாண்டியன் மறைவுக்கு ஸ்டாலின் இரங்கல்
CM Helpline '1100' வாயிலாக 24 மணிநேரமும் மக்கள் தங்கள் குறைகளை பதிவு செய்யலாம் : ஆர்.பி.உதயக்குமார் தகவல்!!
26-02-2021 இன்றைய சிறப்பு படங்கள்
புதுச்சேரியில் பிரதமர் மோடி : கருப்பு பலூன்கள் பறக்கவிட்டு மக்கள் எதிர்ப்பு.. #மோடியே திரும்பி போ ஹேஷ்டேக்கால் அலறிய ட்விட்டர்!!
பெட்ரோல், டீசல் விலையேற்றம்; எலக்ட்ரிக் ஸ்கூட்டருக்கு மாறிய மம்தா பானர்ஜி!
3 சிறைகள்...38,000 கைதிகள்!: தொடர் சங்கலியாக வெடித்த கலவரத்தில் 80 கைதிகள் பலி..கதறும் குடும்பத்தினர்..!!
ரோமத்தின் எடை மட்டும் 35 கிலோ... 5 வருடங்களாக தவித்த செம்மறி ஆட்டுக்கு கிடைத்த மறுவாழ்வு..!!