SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

சொந்த வீடு கட்ட திருட்டு மணல் கோஷ்டியின் உதவியைப் பெற்று சிக்கலில் மாட்டிய காக்கி அதிகாரியை பற்றி சொல்கிறார்: wiki யானந்தா

2020-10-11@ 01:07:37

‘‘சொந்த வீடு கட்ட திருட்டு மணல் கோஷ்டியிடம் உதவி கேட்டு இப்போ சிக்கலில் இருக்காராமே ஒரு காக்கி அதிகாரி.. அது என்னா விவரம்..’’ என்று  ஆர்வத்தோடு கேட்டார் பீட்டர் மாமா.  ‘‘மலைக்கோட்டை மாநகரில் முக்கிய விஜபிக்கள், பொதுமக்கள், பக்தர்கள் வந்து செல்லும் பகுதியில் உள்ள காவல்நிலையத்தில் உள்ள சட்டம்,  ஒழுங்கு இன்ஸ்பெக்டர் ஒருவரின் சொந்த ஊர் குமரி மாவட்டத்தில் உள்ளது. இவர், அங்கு சொந்த வீடு கட்டி வருகிறார். இதற்காக, மலைக்கோட்டை  மாநகரில் இருந்து 8 யூனிட்டை திம்மராயசமுத்திரத்தை சேர்ந்த திருட்டு மணல் வியாபாரியின் மகன் ஒருவர் மிகவும் சேப்டியாக கொண்டு  சேர்த்தாராம்... திருட்டு மணல் வியாபாரியை சமீபத்தில் கமிஷனரின் தனிப்படை கைது செய்து சிறையில் அடைத்தது. வியாபாரி மீது குண்டர் சட்டத்தின் கீழ் கைது  செய்ய நடவடிக்கை எடுக்க கமிஷனர் பரிந்துரைத்ததால் கலங்கிப்போன அந்த இன்ஸ்பெக்டர் விடுப்பில் சென்றவர் மீண்டும் பணிக்கு திரும்பி  உள்ளாராம்.. தற்போது தென் மண்டலத்திற்கு பணி மாற்றம் வாங்கி புறப்பட தயாராகவும் உள்ளாராம்.. மாற்று இன்ஸ்பெக்டர் வந்த பின், விடு ஜூட்  என கிளம்பிவிடுவார்.

ஏற்கனவே பழைய இடத்தில் பணியில் இருந்தபோது விஜிலென்ஸ் பிடியில் இருந்து தப்பியவர்தான் இவர். இப்போது மீண்டும்  தப்பிவிட்டதாக சக காக்கிகள் பெருமூச்சு விடுகின்றனர். இது ஒருபுறம் என்றால் சட்டம், ஒழுங்கு காவல் நிலையம் வேண்டாம் என கூறி பொருளாதார  குற்றப்பிரிவுக்கு மாற்றம் வாங்கி புறப்பட தயாராக உள்ளாராம் மற்றொரு இன்ஸ்பெக்டர். என்ன ஆச்சு மலைக்கோட்டை மாநகர காவல்துறைக்கு என சக காக்கிகளே கேள்வி எழுப்புகின்றனர்.‘‘ஸ்லீப்பிங் மோடில் இருந்த புதுச்சேரி புல்லட் சாமி, தேர்தல் நெருங்குவதால் மெல்ல வெளியே வர்றாராமே...’’‘‘ஆளும் கட்சிக்கு எதிராகவும், துணை நிலை ஆளுநரின் செயல்பாடுகளுக்கும் இதுவரை வாயே திறக்காதவர், முதல்முறையாக அறிக்கை விட்டதை  பார்த்து ஆச்சரியப்படுகிறார்களாம். அதோடு அதிமுகவுடன் கூட்டணியை தொடர வேண்டுமென்ற தன்னுடைய விருப்பத்தை மறைமுகமாக அதில்  தெரிவித்திருக்கிறாராம். தமிழகத்தில் முதல்வர் வேட்பாளராக பழனிசாமியை அறிவித்தவுடன், அவருக்கு வாழ்த்து சொல்லி அறிக்கை வெளியிட்டவர்,  ஒருபடி மேலே போய் சிறந்த நிர்வாக திறமையை வெளிப்படுத்துவதாகவும் தெரிவித்து தனது மகிழ்ச்சியை தெரிவித்தாராம். இதற்கு அதிமுக தரப்பில்  இருந்தும் கிரீன் சிக்னல் வந்துவிட்டதாம். தாமரை கூட கூட்டணி தொடருமா என்பதற்கு புல்லட் சாமியிடம் இப்போதைக்கு பதில் இல்லையாம்.  தேர்தல் வரட்டும் பார்க்கலாம் என்ற மூடில் இருக்கிறாராம்’’ என்றார் விக்கியானந்தா.

  ‘‘அல்வா மாவட்ட கனிம வளத்துறை அலுவலகம் கதிகலங்கிக் கிடக்காமே..’’ ‘‘மழை விட்டாலும் தூவானம் விடாது போலிருக்கிறது. நெல்லை மாவட்டத்தில் கல்லிடைக்குறிச்சி, பொட்டல் கிராமத்தில் மணல் கொள்ளை  நடக்கிறது என்ற மனு ஐகோர்ட் கதவுகளை தட்டிய பிறகே அரசு நிர்வாகம் விழித்து எழுந்தது. ஐகோர்ட் கிளை, அதிகாரிகளுக்கு கடும் கண்டனம்  தெரிவிக்க எம் சாண்ட் குவாரியில் சேரன்மகாதேவி சப்-கலெக்டர் ஆய்வு செய்து ஒரேயடியாக ₹9.50 கோடி அபராதத்தை தீட்டி விட்டார். இதையே  நடவடிக்கையாக ஐகோர்ட் கிளையில் அதிகாரிகள் தெரிவிக்க ₹9.50 கோடி அபராதம் விதிக்கும் அளவுக்கு நடந்த மணல் கொள்ளையை ஏன்  அதிகாரிகள் கண்டு கொள்ளவில்லை என பதில் கேள்வி எழுப்பியது. இதனால் மணல் கொள்ளையில் ஈடுபட்ட அதிகாரிகள் பட்டியல் தயாரிக்கப்பட்டது.  அல்வா மாவட்ட கனிம வள அதிகாரி பக்கத்து மாவட்டத்துக்கு தூக்கி அடிக்கப்பட்டார்.

இந்நிலையில் அடுத்த பூகம்பம் தற்போது கிளம்பியுள்ளது. சீவலப்பேரி அருகே ஒரு கிராமத்தில் மணல் கொள்ளைக்கு இறந்தவர்கள் பெயரில் போலி  ஆவணங்களை சமர்ப்பித்து அனுமதி பெற்றனராம். இந்த ஆவணங்களை பரிசீலிக்காமலேயே பச்சைக்கொடி காட்டி மணல் கொள்ளைக்கு சிவப்பு  கம்பளம் விரித்தார்களாம் கனிமவளத்துறை அதிகாரிகள். இந்த விவகாரமும் தற்போது ஐகோர்ட் கதவை தட்டியுள்ளது. இவ்வாறாக அல்வா மாவட்ட  கனிம வளத்துறை அலுவலகத்தை புயல் சுழன்று அடித்து வருகிறது’’ என்றார் விக்கியானந்தா.‘‘முதல்வரின் தனிப்பிரிவு அலுவலகத்துக்கு புகார்கள் பறக்குதாமே.. அந்த விஷயத்தை சொல்லுங்க..’’ என்று கேட்டார் பீட்டர் மாமா.  ‘‘கோவை மாநகர காவல்துறையில் பணிபுரியும் காவலர்களிடமிருந்து சமீப காலமாக தமிழக முதல்வரின் தனிப்பிரிவு மற்றும் டி.ஜி.பி. அலுவலகத்துக்கு புகார் மனுக்கள்  பறந்துகொண்டே இருக்கின்றன. குறிப்பாக, சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்கள் மற்றும் சப்-இன்ஸ்பெக்டர்களுக்கு கீழ்நிலையில் பணிபுரியும்  காவலர்களிடமிருந்து அதிகளவில் புகார் மனுக்கள் செல்கின்றன.

அதாவது, கோவை மாநகர காவல்துறையில் ஒரே இடத்தில் ஐந்து ஆண்டுகளுக்கு  மேல் பணிபுரிந்தவர்களுக்கு இடமாறுதல் வழங்க, அதிகாரிகளிடமிருந்து விருப்ப மனு பெறப்பட்டது. ஆனால், விருப்ப மனுக்களுக்கு மாறாக, பலருக்கு  இடமாறுதல் உத்தரவு வழங்கப்பட்டுள்ளது. இதனால், காவலர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். அதேநேரம், மாநகர உளவுப்பிரிவில் பணிபுரியும்  காவலர்களுக்கு இடமாறுதல் வழங்கப்படவில்லை. இவர்களில் பலர், ஒரே இடத்தில் பத்து ஆண்டுகளுக்கும் மேலாக பணிபுரிகின்றனர். இந்த பாரபட்சம்  ஏன்? நாங்கள் எல்லாம் உளவுப்பிரிவில் பணியாற்ற தகுதியற்றவர்களா என புகார் மனுவில் குறிப்பிட்டுள்ளனர். கொரோனா காலத்தில் உயிரை  பணயம் வைத்து பணிபுரியும் காவலர்களுக்கு மன அழுத்தம் போக்க ஒரு பக்கம் பயிற்சி அளிக்கப்படுகிறது. ஆனால், இன்னொரு பக்கம் கூடுதல் மன  அழுத்தம் உருவாக்கப்படுகிறது. இப்படியே போனால், எங்கே போய் முடியுமோ தெரியல... ஒரு கண்ணுக்கு வெண்ணெய், இன்னொரு கண்ணுக்கு  சுண்ணாம்பு..என்ற போக்கை அதிகாரிகள் கைவிட வேண்டும் என பொரிந்து தள்ளுகின்றனர்’’ என்றார் விக்கியானந்தா.             

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • rainpurevi111

  தமிழகத்தை மிரட்டும் புரெவி புயல்... கொட்டும் மழை; கொந்தளிக்கும் கடல் : சாலைகளில் சூழ்ந்த வெள்ளம்!!

 • radish3

  புவியீர்ப்பு சக்தியில்லாத சர்வதேச விண்வெளி நிலையத்தில் முள்ளங்கியை வெற்றிகரமாக வளர்த்த நாசா விஞ்ஞானிகள்!: புகைப்படங்கள்

 • farmers_proteeee11

  மத்திய அரசின் சட்டங்களை எதிர்த்து வீறுகொண்டெழுந்த விவசாயிகள்... டெல்லியில் 8வது நாளாக ஆவேச கோஷங்களை எழுப்பி போராட்டம்!!

 • 03-12-2020

  03-12-2020 இன்றைய சிறப்பு படங்கள்

 • 300kg11

  பிரான்சில் 300 கிலோ எடையுள்ள நபரை, வீட்டினை உடைத்து கிரேன் மூலமாக மீட்ட மீட்புப் படையினர்!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்