காவிரி - கோதாவரி இணைப்பு தொடர்பாக முதல்வர்கள் மாநாட்டை நடத்த வேண்டும்: மத்திய அரசுக்கு ராமதாஸ் கோரிக்கை
2020-10-11@ 00:41:51

சென்னை: பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கை: காவிரி - கோதாவரி இணைப்புத் திட்டத்திற்கான ஆயத்தப் பணிகளில் பெரும் தொய்வு ஏற்பட்டிருக்கிறது. காவிரி - கோதாவரி இணைப்புக்கான விரிவான வரைவு திட்ட அறிக்கை ஓராண்டுக்கு முன்பே தயாரிக்கப்பட்டு விட்டது. இத்திட்டத்தில் பயன் பெறும் மாநிலங்கள் வரைவு திட்ட அறிக்கைக்கு ஒப்புதல் அளித்து விட்டால், அதை இறுதி செய்து, திட்டத்திற்கான நிதி ஒதுக்கீடு உள்ளிட்ட அடுத்த கட்டத்திற்கு நகர முடியும். ஆனால், ஓராண்டில் சொல்லிக்கொள்ளும்படியாக எந்த நகர்வும் இல்லை.
எனவே, இணைப்புத் திட்டம் குறித்து விவாதிப்பதற்காக மராட்டியம், சட்டீஸ்கர், ஒடிசா, தெலங்கானா, கர்நாடகம், ஆந்திரா, தமிழ்நாடு ஆகிய மாநிலங்களின் முதலமைச்சர்கள் மாநாட்டை பிரதமர் தலைமையில் நடத்த ஏற்பாடு செய்ய வேண்டும். அந்த மாநாட்டில் வரைவு திட்ட அறிக்கைக்கு ஒப்புதல் அளித்து, நிதி ஒதுக்கீடு உள்ளிட்ட அடுத்தக்கட்ட பணிகளை நோக்கி நகர வேண்டும். அடுத்த ஓராண்டுக்குள்ளாகவாவது காவிரி - கோதாவரி ஆறுகள் இணைப்புத் திட்டப் பணிகள் தொடங்கப்படுவதை மத்திய, மாநில அரசுகள் உறுதி செய்ய வேண்டும்.
மேலும் செய்திகள்
குஜராத்தில் கலவரத்தை ஏற்படுத்தி பல ஆயிரம் பேரை கொன்று குவித்த மோடிக்கு திமுகவை பற்றி பேச உரிமையில்லை : மு.க.ஸ்டாலின் விளாசல்
அதிமுக அரசு பழைய திட்டங்களுக்கு பச்சை பெயிண்ட் அடித்து புதிய திட்டங்கள் போல் துவக்குகிறது: ஸ்டாலின் விமர்சனம்
தலைசிறந்த மாநிலமாக புதுச்சேரியை மாற்றுவோம்: பிரதமர் மோடி தேர்தல் வாக்குறுதி
கலைஞர் வழியில் திமுக அரசை அமைக்க உறுதியேற்று மக்களின் பேராதரவுடன் வெற்றி பெறுவோம்: ‘செயல் வீரர்’ செயலி அறிமுக விழாவில் மு.க.ஸ்டாலின் பேச்சு
சொல்லிட்டாங்க...
எங்களுக்கு தலா 2 எம்எல்ஏ சீட் பார்சல்: அதிமுக மாவட்ட செயலாளர்கள் திடீர் கெத்து
26-02-2021 இன்றைய சிறப்பு படங்கள்
புதுச்சேரியில் பிரதமர் மோடி : கருப்பு பலூன்கள் பறக்கவிட்டு மக்கள் எதிர்ப்பு.. #மோடியே திரும்பி போ ஹேஷ்டேக்கால் அலறிய ட்விட்டர்!!
பெட்ரோல், டீசல் விலையேற்றம்; எலக்ட்ரிக் ஸ்கூட்டருக்கு மாறிய மம்தா பானர்ஜி!
3 சிறைகள்...38,000 கைதிகள்!: தொடர் சங்கலியாக வெடித்த கலவரத்தில் 80 கைதிகள் பலி..கதறும் குடும்பத்தினர்..!!
ரோமத்தின் எடை மட்டும் 35 கிலோ... 5 வருடங்களாக தவித்த செம்மறி ஆட்டுக்கு கிடைத்த மறுவாழ்வு..!!