வட்டாட்சியர் அலுவலகத்தில் இரண்டு சர்வேயர்கள் கட்டிபுரண்டு சண்டை
2020-10-10@ 01:03:06

தாம்பரம்: தாம்பரம் வட்டாட்சியர் அலுவலக நில அளவையர் பிரிவில் வட்ட துணை ஆய்வாளராக பணியாற்றி வருபவர் சந்தோஷ். தாம்பரம் டவுன் சர்வே அலுவலகத்தில் சார்-ஆய்வாளராக பணியாற்றி வருபவர் முத்துக்குமார். இவர்களுடன் குறுவட்ட அளவையராக அனுராதா பணியாற்றி வருகிறார். நேற்று நில அளவை பிரிவில் சந்தோஷ் மற்றும் முத்துக்குமார் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. சிறிது நேரத்தில் ஒருவரை ஒருவர் சரமாரியாக தாக்கி கொண்டனர். அனுராதா அவர்களை தடுக்க முயன்றார். ஆனாலும், இருவரும் சரமாரியாக தாக்கிக் கொண்டனர்.
இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இது தொடர்பாக, சந்தோஷ், முத்துக்குமார் இருவரும் மேல் அதிகாரிகளிடம் புகார் தெரிவித்துள்ளனர். நில அளவை பிரிவில் உள்ள பெண் ஊழியருடன் நெருங்கி பழகுவது தொடர்பாக சந்தோஷ், முத்துக்குமார் ஆகிய இருவருக்கும் தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது.
மேலும் செய்திகள்
பாஜக - அதிமுக கூட்டணியை ஆயிரம் குருமூர்த்திகள் வந்தாலும் காப்பாற்ற முடியாது: கே.எஸ்.அழகிரி
அதானி குழுமத்தின் பேராதிக்கத்துக்கு தோள் கொடுத்து வரும் பிரதமர் மோடி அரசு :தொல்.திருமாவளவன் கடும் கண்டனம்
பேருந்தில் கடத்திய 15 கிலோ கஞ்சா பறிமுதல்
கோயில் பூசாரி தற்கொலை
தாம்பரம் - மதுரவாயல் புறவழிச்சாலையில் வெட்டு காயங்களுடன் உயிருக்கு போராடிய வாலிபரால் பரபரப்பு
புளியந்தோப்பு சாஸ்திரி நகரில் தாழ்வாக தொங்கும் மின் வயர்களால் விபத்து அபாயம்: கண்டுகொள்ளாத அதிகாரிகள்
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியை முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ பன்னீர் செல்வம் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்
மாட்டு வண்டியை ஒட்டிய மு.க.ஸ்டாலின்... மக்களுடன் அமர்ந்து உணவு சாப்பிட்ட முதல்வர் பழனிசாமி, ராகுல் காந்தி!!
16-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
14-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
9 மாதங்களுக்கு பிறகு தியேட்டரில் ‘மாஸ்டர்’ ரிலீஸ்!: விஜய் ரசிகர்கள் கொண்டாட்டம்..புகைப்படங்கள்