விவசாயிகளுக்கான கிசான் திட்ட முறைகேடு விவகாரம் 1,000 ஊழியர்கள் இடமாற்றத்துக்கு உயர் நீதிமன்றம் இடைக்கால தடை
2020-10-07@ 00:50:36

சென்னை: விவசாயிகளுக்கு உதவும் வகையில் வருடம் தோறும் ரூ.6 ஆயிரம் நிதி உதவியை பிரதம மந்திரி கிசான் திட்டத்தின் கீழ் மத்திய அரசு வழங்கி வருகிறது. இந்த தொகை அவர்களின் வங்கி கணக்கில் செலுத்தப்படும். இந்த நிதி விவசாயிகளுக்கு கிடைக்கும் வகையில் வேளாண்துறையின் கீழ் செயல்பட்டு வரும் அட்மா திட்டத்தின் வட்டார வேளாண் தொழில்நுட்ப மேலாளர்கள் மற்றும் உதவி மேலாளர்கள் என தமிழகம் முழுவதும் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பணியாற்றி வருகிறார்கள்.
இந்நிலையில் கிசான் திட்டத்தில் விவசாயிகள் அல்லாத தனிநபர்களும் நிதியை பெறும் வகையில் கோடிக்கணக்கில் முறைகேடு நடந்திருப்பது வெளியானது. பல முக்கிய அதிகாரிகள் இந்த முறைகேட்டில் ஈடுபட்டுள்ளதும் தெரியவந்தது. இதையடுத்து, இந்த முறைகேடு தொடர்பாக சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது. விசாரணையின் அடிப்படையில் முறைகேடு நடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து, அட்மா திட்டத்தின் வட்டார வேளாண் தொழில்நுட்ப மேலாளர்கள் மற்றும் உதவி மேலாளர்கள் என 30க்கும் மேற்பட்டோரை பணி நீக்கம் செய்தும், பலரை பணியிடமாற்றம் செய்தும் தமிழக அரசின் வேளாண்மை துறையின் இயக்குனர் கடந்த செப்டம்பர் 24ம் தேதி உத்தரவு பிறப்பித்தார்.
இந்த உத்தரவுக்கு தடை விதிக்க கோரி தமிழ்நாடு அரசு வேளாண் தொழில்நுட்ப மேலாண்மை முகமை அதிகாரிகள் சங்கத்தின் தலைவர் சங்கர், உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். அவர் தாக்கல் செய்த மனுவில், எங்கள் சங்கத்தில் உள்ள 1000 உறுப்பினர்களை எந்த விளக்கமும் கேட்காமல் வேறு இடங்களுக்கு பணி மாற்றம் செய்தது விதிகளுக்கு முரணானது என்று கோரியிருந்தார். இந்த வழக்கு நீதிபதி பார்த்திபன் முன்பு விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதி, வேளாண் துறையின் அட்மா திட்டத்தின் கீழ் பணிபுரிந்து வரும் ஊழியர்களை பணியிடமாற்றம் செய்த அரசின் நடவடிக்கைக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டார். மேலும், இந்த வழக்கு தொடர்பாக வேளாண் துறையின் முதன்மை செயலாளர், வேளாண்துறை இயக்குனர் ஆகியோர் பதிலளிக்குமாறு உத்தரவிட்ட நீதிபதி, வழக்கை அக்டோபர் 29ம் தேதிக்கு தள்ளி வைத்தார்.
Tags:
Kisan scheme abuse case for farmers 1 000 employees relocation High Court interim injunction விவசாயிகளுக்கான கிசான் திட்ட முறைகேடு விவகாரம் 1 000 ஊழியர்கள் இடமாற்றத்துக்கு உயர் நீதிமன்றம் இடைக்கால தடைமேலும் செய்திகள்
தேசிய தொழிலாளர் பாதுகாப்பு தினம் இன்று : தொழிலாளர்களின் உரிமைகளை பாதுகாக்க வேண்டும் என ஸ்டாலின், கமல் வலியுறுத்தல்
தேர்வு மையங்களுக்கு பாதிப்பு இல்லை..! திட்டமிட்டபடி வரும் மே 3-ம் தேதி 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு நடைபெறும்: தேர்வுத்துறை தகவல்
தற்போது கொரோனா இல்லை என்ற எண்ணம் யாருக்கும் இருக்க வேண்டாம்: சுகாதாரத்துறை செயலாளர் எச்சரிக்கை...!
கடசுருக்குமடி வலை மூலம் மீன்பிடிக்க அனுமதி கோரி வழக்கு
தேர்தல் அதிகாரிகள் தொடர்பான விவரங்கள் பொதுத்துறை இணைய தளத்தில் வெளியானது: ஐகோர்ட்டில் தேர்தல் ஆணையம் தகவல்
தேர்தல் நடைமுறை அமலாக்கத்தில் வணிகர்களுக்கு பாதுகாப்பு தேவை: விக்கிரமராஜா கோரிக்கை
தங்கும் அறை, தியேட்டர், பார் என சகல வசதிகளுடன் விண்வெளியில் கட்டப்பட்டு வரும் பிரமாண்ட ஹோட்டல்..!
04-03-2021 இன்றைய சிறப்பு படங்கள்
நைஜீரியாவில் பயங்கரவாதிகளால் கடத்தப்பட்ட பள்ளி மாணவிகள் 279 பேர் விடுவிப்பு!: புகைப்படங்கள்
ஆராய்ச்சியாளர்களையே மிரள வைத்த டைனோசர் புதைப்படிவம்!: அர்ஜெண்டினாவில் கண்டெடுப்பு..!!
03-03-2021 இன்றைய சிறப்பு படங்கள்