கோவில்பட்டி பகுதியில் போதிய மழை பெய்யாததால் மக்காச்சோள பயிர்கள் கருகும் அபாயம்
2020-10-05@ 12:01:10

கோவில்பட்டி: கோவில்பட்டி பகுதியில் போதிய மழை பெய்யாததால் மக்காச்சோளம் பயிர்கள் கருகி வருகின்றன. இதனால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி, எட்டயபுரம், விளாத்திகுளம், கயத்தாறு, கழுகுமலை, ஓட்டப்பிடாரம், புதூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ராபி பருவத்தை முன்னிட்டு சுமார் 5 லட்சம் ஏக்கரில் உளுந்து, பாசி, மக்காச்சோளம், வெள்ளைச் சோளம், கம்பு, குதிரைவாலி, கொத்தமல்லி, மிளகாய், வெங்காயம் போன்றவைகளை பயிரிட விவசாயிகள் தங்கள் நிலங்களை தயார்படுத்தினர்.
முதல் கட்டமாக மக்காச்சோளம், வெள்ளைச் சோளம், பருத்தி போன்றவைகளை கடந்த இருபத்தைந்து நாட்களுக்கு முன்பு பயிரிட்டனர். ஏற்கனவே நிலத்தில் இருந்த ஈரப்பதம் காரணமாக விதைகள் சில இடங்களில் முளைத்தும், ஈரப்பதம் இல்லாத இடங்களில் முளைக்காமலும் காணப்பட்டன. தற்போது மக்காச்சோளம் சுமார் 60 ஆயிரம் ஏக்கரிலும், வெள்ளைச் சோளம் சுமார் 30 ஆயிரம் ஏக்கரிலும், பருத்தி 5 ஆயிரம் ஏக்கரிலும் பயிரிடப்பட்டுள்ளது. இந்நிலையில் கடந்த 25 நாட்களாக சித்திரை மாதம் போன்று அதிக வெயில் அடிப்பதாலும், தென்மேற்கு பருவக்காற்று தொடர்ந்து வீசுவதாலும், மழை பெய்யாமல் போக்கு காட்டுகிறது. இதனால் நிலங்களில் முளைத்த மக்காச்சோளம், வெள்ளைச் சோளம் போன்ற பயிர்கள் கருகி வருகின்றன. இதனை கண்டு விவசாயிகள் மனமுடைந்து காணப்படுகின்றனர்.
ஏற்கனவே கொரோனா தாக்கம் காரணமாக விவசாயிகள் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்து கடந்த ஆண்டு விதைத்த மகசூலை இன்னும் விலைக்கு விற்க முடியாமல் வீடுகளிலும், தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க குடோன்களிலும். ஒழுங்குமுறை விற்பனை கூடங்களிலும் இருப்பு வைத்துள்ளனர். இந்நிலையில் இந்த ஆண்டு பயிரிடப்பட்ட பயிர்கள் மழையின்றி கருகுவதால் விவசாயிகள் மேலும் கவலை அடைந்துள்ளனர். தற்போது உரம், விதை, உழவு ஆகியவற்றிற்கு ஏக்கருக்கு சுமார் ரூ.பத்தாயிரம் வீதம் செலவு செய்துள்ளனர். எனவே வறட்சி நிவாரணமாக அரசு ஏக்கருக்கு ரூ.15 ஆயிரம் வழங்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து கரிசல் பூமி விவசாய சங்கத்தலைவர் வரதராஜன் கூறுகையில், ‘கடந்த 5 மாத காலமாக கொரோனா ஊரடங்கால் விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். தற்போது கோவில்பட்டி பகுதியில் மக்காச்சோளம், வெள்ளைச் சோளம் ஆகியவை பல ஏக்கர் பரப்பளவில் பயிரிட்டுள்ளனர். அவை முளைத்து வரும் நிலையில் போதிய மழை இல்லாமல் பயிர்கள் கருகத்தொடங்கியுள்ளன. இதனால் விவசாயிகள் கண்ணீர் வடிக்கத் தொடங்கியுள்ளனர். எனவே பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு அரசு நிவாரணம் வழங்க வேண்டும்’ என்றார்.
மேலும் செய்திகள்
சமூக வலைத்தளங்களில் தணிக்கை செய்யப்பட்ட வீடியோவை வெளியிட உத்தரவிடக் கோரி வழக்கு: பேஸ்புக், யூடியூப், கூகுள் நிறுவனம் பதிலளிக்க ஐகோர்ட் கிளை உத்தரவு
சசிகலா அரசியலுக்கு வரவேண்டும்.. ஒரு பெண்ணாக சசிகலாவுக்கு எனது ஆதரவு உண்டு : பிரேமலதா விஜயகாந்த் கருத்து
சீர்காழியில் தீரன் பட பாணி கொலை, கொள்ளை.. கொள்ளையர்களை பிடித்து போலீசிடம் ஒப்படைத்த மக்கள்.. என்கவுண்டரில் ஒருவன் சுட்டுக் கொலை
சீர்காழி நகை கொள்ளை சம்பவம்..! தப்ப முயன்ற 3 கொள்ளையர்களில் ஒருவரை என்கவுண்டர் செய்தது காவல்துறை
நகை வியாபாரி வீட்டில் 2 பேரை கொலை செய்து 16 கிலோ தங்க நகைகள் கொள்ளை: சீர்காழியில் பரபரப்பு
துரோகிகளுக்கு மன்னிப்பு இல்லை முதல்வர் நாராயணசாமி ஆவேசம்
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிற்கு ரூ.80 கோடி செலவில் பீனிக்ஸ் பறவை வடிவில் நினைவிடம்
27-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
குடியரசு தின விழாவில் பாரம்பரியத்தை பறைசாற்றும் கண்கவர் நிகழ்ச்சிகள் :மாமல்லபுரம் கடற்கரை கோவில், ராமர் கோவில் அலங்கார ஊர்திகள் பங்கேற்பு!!
சாலைகளில் படுத்து மறியல்... மாட்டு வண்டி, டிராக்டர்கள், ஆட்டோக்களில் பேரணி : விவசாயிகளுக்கு ஆதரவாக தமிழர்கள் ஆவேசப் போராட்டம்!!
அலங்கார ஊர்திகளின் அணிவகுப்பு, சாகசங்கள், பாரம்பரிய நடனங்களோடு குடியரசு தின விழா கோலாகலம் : விழாக்கோலம் பூண்டது மெரினா!!