திருச்சி மாநகரில் உள்ள குடிசை பகுதியில் தீ விபத்து: 100-க்கும் மேற்பட்ட வீடுகள் தீயில் எரிந்து சாம்பலாயின: போலீசார் விசாரணை..!!
2020-10-05@ 10:39:34

திருச்சி: திருச்சி மாநகரில் உள்ள செந்தண்ணீர்புரம் அருகே சங்கிலியண்டபுரம் ராமமூர்த்தி நகரில் 200-க்கும் மேற்பட்ட குடிசைகளை கொண்ட பகுதி உள்ளது. இங்கு வசிப்பவர்கள் பெரும்பாலும் கூலித் தொழிலாளிகள் ஆவார்கள். இந்த சூழலில் நேற்று இரவு தங்கள் பணிகளை முடித்துவிட்டு வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த போது, அதிகாலை 3 மணி அளவில் அங்குள்ள குடிசை வீடுகளில் தீ பற்றி எரிந்தது.
இதனையடுத்து, உடனடியாக மக்கள் தங்கள் வீடுகளை விட்டு அலறி அடித்து வெளியே ஓடி வந்தனர். தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது. இந்த தகவலறிந்து 4 தீயணைப்பு வாகனங்களில் விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். ஆனால் மளமளவென பற்றி எரிந்த தீ, நூற்றுக்கும் மேற்பட்ட குடிசைகளில் பரவியதால் அந்தப்பகுதியே எரிந்து சாம்பலானது.
இந்த நிலையில் இப்பகுதியில் தீ விபத்து ஏற்பட காரணம் என்ன என்ற முதல்கட்ட விசாரணையில், ஒரு குடிசையில் சமையல் பயண்பட்டிற்கு வைத்திருந்த சிலிண்டர் வெடித்ததால் ஏற்பட்ட தீ, பக்கத்தில் உள்ள வீடுகளிலுக்கும் பரவியதால் இந்த பெரும் விபத்து நடந்ததாக தெரிய வருகிறது. இந்த தீ விபத்தில் பல லட்சம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து சாம்பலாகின. ஆனாலும், அதிர்ஷ்டவசமாக இந்த பெரும் விபத்தில் உயிர்சேதம் எதுவும் ஏற்படாமல் தவிர்க்கப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் செய்திகள்
கொரோனா காரணமாக சுற்றுலாதலங்களுக்கு தடை புலிமேடு நீர் வீழ்ச்சியை காண குவிந்த பொதுமக்கள்
தமிழகத்தில் நாளை மறுநாள் பள்ளிகள் திறப்பு: 10, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு மல்டி வைட்டமின், ஜிங்க் மாத்திரை: சுகாதாரத்துறையினர் வழங்க நடவடிக்கை
திமுக பொதுச்செயலாளர் துரைமுருகனுக்கு மருத்துவமனையில் சிகிச்சை
திருவூடல் திருவிழாவை முன்னிட்டு அண்ணாமலையார் கிரிவலம் சென்று பக்தர்களுக்கு அருள்பாலித்தார்
ஓசூர் அருகே நெடுஞ்சாலையை கடக்க முயன்றபோது கன்டெய்னர் லாரி மோதி காட்டு யானை படுகாயம்: வனத்துறையினர் மீட்டு தீவிர சிகிச்சை
இறக்குமதி இல்லாததால் எகிறியது விலை 9 மாதங்களில் இரும்பு கம்பி டன்னுக்கு 20 ஆயிரம் உயர்வு: கட்டுமான பணிகள் சுணக்கம்
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியை முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ பன்னீர் செல்வம் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்
மாட்டு வண்டியை ஒட்டிய மு.க.ஸ்டாலின்... மக்களுடன் அமர்ந்து உணவு சாப்பிட்ட முதல்வர் பழனிசாமி, ராகுல் காந்தி!!
16-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
14-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
9 மாதங்களுக்கு பிறகு தியேட்டரில் ‘மாஸ்டர்’ ரிலீஸ்!: விஜய் ரசிகர்கள் கொண்டாட்டம்..புகைப்படங்கள்