SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ராமநதி மலையடிவாரத்தில் உலா வரும் யானைகள்: இரவு, பகலாக தீ வைத்து விரட்டியடிப்பு

2020-10-01@ 14:20:40

கடையம்: கடையம் ராமநதி மலையடிவார பகுதியில் உலா வரும் யானைகளை விரட்ட தீயை கொளுத்தி வனத்துறையினர் விரட்டி வருகின்றனர். கடையம் ராமநதி அணை மேல் பகுதியில் தனியாருக்கு சொந்தமான விவசாய நிலங்கள் மற்றும் தோட்டம் உள்ளன. இதில் வெய்க்காலிபட்டியைச் சேர்ந்த விவசாயி குமரனுக்கு சொந்தமான 28 ஏக்கர் தோட்டத்தில் தென்னை, மா, முந்திரி நட்டு பராமரித்து வருகிறார். கடந்த 25ம் தேதி குமரன் தோட்டத்திற்குள் சோலார் மின்வேலியை சேதப்படுத்தி புகுந்த யானைகள், 8 தென்னை மரங்களின் குருத்தை தின்று சாய்த்து பிடுங்கி எரிந்து அட்டகாசத்தில் ஈடுபட்டன. தகவலறிந்த வனத்துறையினர் விரைந்து வந்து, யானையால் சேதமான சோலார் மின்வேலியை போர்க்கால அடிப்படையில் சரி செய்தனர்.

இருப்பினும் குட்டி யானை உள்பட 5 யானைகள், மலையடிவாரத்தில் தொடர்ந்து உலா வருகின்றன. யானை நுழைவதை தடுக்க வனத்துறையினர் சோலார் மின்வேலியை பலப்படுத்தி வருகின்றனர். மேலும் தோட்டத்துக்காரர்கள் மற்றும் வனத்துறையினர் தோட்டத்தில் இரவு பகலாக தீ வைத்தும், ஒலி எழுப்பியும் யானைகள் தோட்டத்திற்குள் நுழையாமல் தடுக்க பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த 12 ஆண்டுகளாக சோலார் மின்வேலியை தாண்டாத யானைகள், தற்போது மலையடிவாரத்தில் கூட்டமாக உலா வருவது விவசாயிகளிடையே அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • twins22

    தலை ஒட்டிப் பிறந்த இரட்டை சகோதரிகள் இனி தனித்தனியே!: அறுவை சிகிச்சைக்கு பின் சந்தோஷமாக நாடு திரும்பினர்..!!

  • mumbaitrain22

    7 மாதத்திற்கு பிறகு மும்பை மின்சார ரயிலில் பெண்கள் உற்சாக பயணம்!: 4 மகளிர் சிறப்பு ரயில்களும் இயக்கம்..!!

  • dinosauregg22

    பெரம்பலூரில் தோண்ட தோண்ட கிடைத்த ‘டைனோசர்’ முட்டைகள்!: ஒன்னு இல்ல ரெண்டு இல்ல.. ‘மிரள’ வைத்த எண்ணிக்கை..வியப்பில் பொதுமக்கள்..!!

  • locusts22

    எத்தியோப்பியாவில் வெட்டுக்கிளிகள் அட்டகாசம்!: 25 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு உணவு பயிர்கள் நாசம்..விவசாயிகள் வேதனை..!!

  • rainbowtree22

    உலக பொறியாளர்களின் கவனத்தை ஈர்த்த பிலிப்பைன்ஸ் ரெயின்போ ட்ரீ டவர்!: கண்கவரும் புகைப்படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்