SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

மக்களுக்கு சேவை செய்வதில் மிகவும் இரக்கமுள்ளவர் : குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்திற்கு பிரதமர் மோடி, அமித்ஷா, தமிழிசை உள்ளிட்டோர் பிறந்த நாள் வாழ்த்து!!

2020-10-01@ 08:16:58

டெல்லி : இந்தியக் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தனது 75-வது பிறந்தநாளை இன்று கொண்டாடுகிறார். உத்தரப்பிரதேசத்தின்  கான்பூரில் 1945-ம் ஆண்டு அக்டோபர் 1-ம் தேதி பிறந்தார். 1977 முதல் 1979 வரை டெல்லி உயர் நீதிமன்றத்தில் மத்திய அரசின் வழக்கறிஞராகப் பணியாற்றியுள்ளார். 1998 முதல் 2002 வரை பா.ஜ.க-வின் பிற்படுத்தப்பட்டோருக்கான பிரிவின் தலைவராகப் பதவிவகித்தவர். 1994 - 2006-ஆம் ஆண்டுகள்வரை உத்தரப்பிரதேசத்தின் ராஜ்ய சபா எம்.பி-யாகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர்.

பா.ஜ.க-வின் தேசிய செய்தித் தொடர்பாளராக இருந்த இவர், ஆகஸ்ட் 8, 2015 முதல் பீகாரின் ஆளுநராக ஜனாதிபதி மூலம் நியமிக்கப்பட்டுப் பணியாற்றினார். தலித் தலைவர் என்ற தகுதிகளை உடைய ராம்நாத் கோவிந்தை, இந்திய ஜனாதிபதி தேர்தலுக்கான பா.ஜ.க வேட்பாளராக அறிவிக்கப்பட்டு இன்று இந்தியக் குடியரசுத் தலைவராக உள்ளார்.ராம்நாத் கோவிந்தை வாழ்த்தி பிரதமர் நரேந்திர மோடி இன்று தனது ட்விட்டர் பக்கத்தில் தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். மேலும் பல அரசியல் பிரமுகர்களும் இன்று தங்கள் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

பிரதமர் மோடி தெரிவித்துள்ள வாழ்த்துச் செய்தியில், 'மக்களுக்கு சேவை செய்வதில் மிகவும் இரக்கமுள்ளவர். நல்ல ஆரோக்கியத்துடனும் நீண்ட ஆயுளுடன் வாழ பிரார்த்திக்கிறேன்.ராம்நாத் தலைவரின் நுண்ணறிவும் புத்திசாலித்தனமான புரிதலும் நம் தேசத்திற்கு பெரும் சொத்து.,' என்றார். மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், ' குடியரசுத் தலைவரின் திறமை நாட்டுக்கு புதிய பலத்தை அளித்துள்ளது,' என்று தெரிவித்துள்ளார். தெலங்கானா ஆளுநர் தமிழிசை வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், ' குடியரசுத் தலைவர் வழிகாட்டுதலின் கீழ் இந்தியா மேலும் வளர்ச்சி அடைய வேண்டும்,' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • humanbodies23

  2,000 ஆண்டுகளுக்கு முன் எரிமலை வெடிப்பிலிருந்து தப்பிக்க முயன்ற 2 மனித உடல்கள் இத்தாலியில் கண்டுபிடிப்பு!: புகைப்படங்கள்

 • jammu23

  ஜம்மு காஷ்மீரில் நிலவும் கடுங்குளிர்!: தரை, வீடுகளின் கூரைகள், வாகனங்களின் மேற்பகுதி ஆகியவை பனி உறைந்து வெண்ணிறமாக காட்சி..!!

 • yamuna23

  இனவிருத்திக்காக யமுனை நதியில் கூட்டம் கூட்டமாக படையெடுக்கும் பறவைகள்!: சுற்றுலாப் பயணிகள் ஆர்வமுடன் கண்டு ரசிப்பு..!!

 • chadpuja23

  சூரிய கடவுளுக்கு நன்றி தெரிவிக்கும் சாத் பூஜை!: நியூ ஜெர்சியில் நூற்றுக்கணக்கான அமெரிக்க வாழ் இந்தியர்கள் வழிபாடு..!!

 • isrelviva23

  இப்படிக்கூட விவசாயம் செய்ய முடியுமா!: இஸ்ரேலில் வியக்க வைக்கும் செங்குத்து வேளாண்மை..புகைப்படங்கள்..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்