SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி வழங்குவதற்கான நிதி ஆதாரம் உள்ளது : சீரம் நிறுவனத்தின் கேள்விக்கு மத்திய அரசு உறுதி

2020-09-30@ 13:06:22

டெல்லி:  கொரோனா தடுப்பு மருந்தை வெளிநாடுகளிடமிருந்து வாங்கி விநியோகிக்க இந்திய அரசிடம் 80 ஆயிரம் கோடி ரூபாய் இருக்கிறதா? என்று சீரம் நிறுவனத்தின் கேள்விக்கு மத்திய அரசு பதிலளித்திருக்கிறது. கொரோனா தொற்றால் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ள நாடுகளில் இந்தியா 2வது இடத்தில் உள்ளது. இந்நிலையில் கொரோனாவை தடுப்பதற்கு தடுப்பூசி எப்போது வரும் என்பதுதான் அனைவரின் எதிர்பார்ப்பாக அமைந்துள்ளது. இதற்கிடையில் இங்கிலாந்து நாட்டின் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகமும், அஸ்ட்ரா ஜெனேகா மருந்து நிறுவனமும் இணைந்து கூட்டாக ஒரு தடுப்பூசியை உருவாக்கி சோதித்து வருகின்றன. இந்தியாவில் கோவிஷீல்டு என்ற பெயரில் இந்த தடுப்பூசியை சோதித்து, தயாரித்து வினியோகிக்க புனேயை சேர்ந்த இந்திய சீரம் இன்ஸ்டிடியூட் உரிமம் பெற்றுள்ளது.

இந்த நிலையில் மராட்டிய மாநிலம் பூனேவில் உள்ள சீரம் மருந்து தயாரிப்பு நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி ஆதர் பூனவாலா கடந்த வாரம் டுவிட்டர் பதிவு மூலம் மத்திய அரசுக்கு கேள்வி எழுப்பியிருந்தார். அதில், கொரோனா மருந்துகளை வாங்கி விநியோகிப்பதற்காக அடுத்த ஓராண்டில் இந்திய அரசிடம் 80 ஆயிரம் கோடி ரூபாய் நிதி ஆதாரம் இருக்கிறதா? என்று கேள்வி எழுப்பியிருந்தார். இதுவே தற்போது நாம் எதிர்கொள்ள வேண்டிய சவால் என்றும் பூனவாலா கூறியிருந்தார். இதற்கு பதிலளித்துள்ள மத்திய அரசு சீரம் நிறுவனம் தெரிவித்துள்ளதுபோல் கொரோனா தடுப்பு மருந்தை கொள்முதல் செய்ய 80 ஆயிரம் கோடி ரூபாய் செலவாகாது என்று தெரிவித்துள்ளது. இதுகுறித்து தேசிய அளவில் அமைக்கப்பட்டுள்ள நிபுணர் குழு 5 முறை சந்தித்து பேசி இருப்பதாக கூறியுள்ள மத்திய அரசு, கொரோனா தடுப்பு மருந்து கொள்முதலுக்காகும் செலவினங்கள் குறித்து இந்த குழு தங்களிடம் விரிவான அறிக்கையை தயாரித்து அளித்துள்ளதாகவும் கூறியுள்ளது.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News Advertisement
Like Us on Facebook Dinkaran Daily News
 • carbomb28

  ஆப்கானிஸ்தானில் இருவேறு இடங்களில் நடந்த கார் வெடிகுண்டு தாக்குதல்: போலீசார், அப்பாவி பொதுமக்கள் உட்பட 8 பேர் உயிரிழப்பு..!!

 • molave28

  வியட்நாமில் கோரத்தாண்டவம் ஆடிய molave புயல்!: 13 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் பாதுகாப்பான இடங்களில் தஞ்சம்..!!

 • haryana28

  மதம் மாற மறுத்த இளம்பெண்..பட்டப்பகலில் துப்பாக்கியால் சுட்டு கொலை!: குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க கோரி பல இடங்களில் ஆர்ப்பாட்டம்..!!

 • water28

  தென் அமெரிக்காவில் 2,000 ஆண்டுக்களுக்கு முந்தைய மக்களான மயன் நாகரிகத்தினர் பயன்படுத்திய நீர் சுத்திகரிப்பு மையம் கண்டுபிடிப்பு: ஆச்சர்யத்தில் ஆய்வாளர்கள்..!!

 • biharele28

  கொரோனா பாதிப்புகளுக்கு இடையே பீகார் சட்டசபை தேர்தல் 2020: முதல் கட்டமாக 71 தொகுதிகளில் வாக்கு பதிவு தொடக்கம்..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்