தமிழகம்-கேரளா இடையே 3 சிறப்பு ரயில்: வரும் 2-ம் தேதி முதல் தமிழகத்தில் மேலும் 7 சிறப்பு ரயில்கள் இயக்கம்: ரயில்வே அமைச்சகம் அறிவிப்பு.!!!
2020-09-30@ 11:10:14

சென்னை: தமிழகத்துக்கு மேலும் 7 சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என ரயில்வே அமைச்சகம் அறிவித்துள்ளது. தமிழகத்தில், மாவட்டங்களுக்கு இடையே பொது போக்குவரத்துக்கு வரும் கடந்த 7-ம் தேதி துவங்கப்பட்டது. இதையடுத்து, சென்னையில் இருந்து புதுடெல்லி, பீகார், கோவை, மதுரை, தூத்துக்குடி, திருச்சி, காரைக்குடி மற்றும் கோவையில் இருந்து மயிலாடுதுறை, திருச்சியில் இருந்து ஹவுரா என 13 சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், தமிழகத்தில் அக்டோபர் 2ம் தேதி (நாளை மறுநாள்) முதல் மேலும் 7 சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என ரயில்வே அமைச்சகம் அறிவித்துள்ளது. தமிழகத்திற்குள் 4 ரயில்களும், கேரள மாநிலத்திற்கு 3 ரயில்களும் அறிவித்துள்ளது.
1. சென்னை எழும்பூர்-திருநெல்வேலி (ரயில் எண் 02631) இடையே தினந்தொறும் இயக்கப்படும் சிறப்பு ரயில் வரும் 5-ம் தேதி முதல் இரவு 07.50 மணிக்கு சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் இருந்து புறப்பட்டு 6-ம் தேதி காலை 06.45 மணிக்கு திருநெல்வேலி சென்றடையும். மறுமார்க்கமாக, திருநெல்வேலி-சென்னை எழும்பூர் (ரயில் எண் 02632) இடையே தினந்தொறும் இயக்கப்படும் சிறப்பு ரயில் 2-ம் தேதி முதல் காலை 6.35 மணிக்கு திருநெல்வேலியில் இருந்து புறப்பட்டு இரவு 7.45 மணிக்கு சென்னை எழும்பூர் வந்தடையும்.
2. சென்னை எழும்பூர்- செங்கோட்டை (ரயில் எண் 02661) இடையே தினந்தொறும் இயக்கப்படும் சிறப்பு ரயில் வரும் 3-ம் தேதி முதல் இரவு 08.40 மணிக்கு சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் இருந்து புறப்பட்டு 4-ம் தேதி காலை 08.30 மணிக்கு செங்கோட்டை சென்றடையும். மறுமார்க்கமாக, செங்கோட்டை-சென்னை எழும்பூர் (ரயில் எண் 02662) இடையே தினந்தொறும் இயக்கப்படும் சிறப்பு ரயில் 4-ம் தேதி முதல் காலை 6.00 மணிக்கு செங்கோட்டையில் இருந்து புறப்பட்டு இரவு 6.10 மணிக்கு சென்னை எழும்பூர் வந்தடையும்.
3. சென்னை எழும்பூர்-மதுரை (ரயில் எண் 02613) இடையே (வியாழக்கிழமை தவிர்த்து )வாரத்தில் 6 நாட்கள் இயக்கப்படும் தேஜஸ் சிறப்பு ரயில் வரும் 2-ம் தேதி முதல் காலை 06.00 மணிக்கு சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் இருந்து புறப்பட்டு இன்று மதியம் 12.20 மணிக்கு மதுரை சென்றடையும். மறுமார்க்கமாக, மதுரை-சென்னை எழும்பூர் (ரயில் எண் 02614) இடையே (வியாழக்கிழமை தவிர்த்து )வாரத்தில் 6 நாட்கள் இயக்கப்படும் தேஜஸ் சிறப்பு ரயில் 2-ம் தேதி முதல் இரவு 9.30 மணிக்கு மதுரையில் இருந்து புறப்பட்டு அதிகாலை சென்னை எழும்பூர் வந்தடையும்.
4. சென்னை எழும்பூர்- ராமேஸ்வரம் (ரயில் எண் 02205) இடையே தினந்தொறும் இயக்கப்படும் சிறப்பு ரயில் வரும் 5-ம் தேதி முதல் மாலை 05.45 மணிக்கு சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் இருந்து புறப்பட்டு 6-ம் தேதி காலை 04.25 மணிக்கு ராமேஸ்வரம் சென்றடையும். மறுமார்க்கமாக, ராமேஸ்வரம்-சென்னை எழும்பூர் (ரயில் எண் 02206) இடையே தினந்தொறும் இயக்கப்படும் சிறப்பு ரயில் 2-ம் தேதி முதல் காலை 07.15 மணிக்கு ராமேஸ்வரத்தில் இருந்து புறப்பட்டு இரவு 8.20 மணிக்கு சென்னை எழும்பூர் வந்தடையும்.
5. சென்னை எழும்பூர்- கொல்லம் (ரயில் எண் 06723) இடையே தினந்தொறும் இயக்கப்படும் சிறப்பு ரயில் வரும் 3-ம் தேதி முதல் இரவு 08.10 மணிக்கு சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் இருந்து புறப்பட்டு 4-ம் தேதி மதியம் 01.15 மணிக்கு கொல்லம் சென்றடையும். மறுமார்க்கமாக, கொல்லம்-சென்னை எழும்பூர் (ரயில் எண் 06724) இடையே தினந்தொறும் இயக்கப்படும் சிறப்பு ரயில் 4-ம் தேதி முதல் காலை 08.10 மணிக்கு கொல்லத்தில் இருந்து புறப்பட்டு மறுநாள் காலை 3.00 மணிக்கு சென்னை எழும்பூர் வந்தடையும்.
6. சென்னை சென்ரல் ரயில் நிலையத்தில் இருந்து ஆழபுலா இடையே தினந்தோறும் இயக்கப்படும் சிறப்பு ரயில் சென்னை சென்ரல்- ஆழபுலா (ரயில் எண் 22639) இடையே இயக்கப்படுகிறது. மறுமார்க்கமாக, ஆழபுலா-சென்னை சென்ரல் ரயில் (ரயில் எண் 22640) இடையே இயக்கப்படுகிறது.
7. காரைக்கால்-எர்ணாகுளம் (ரயில் எண் 16187) இடையே தினந்தோறும் இயக்கப்படும் சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. மறுமார்க்கமாக, எர்ணாகுளம்- காரைக்கால் (ரயில் எண் 16188) இடையே தினந்தோறும் இயக்கப்படும் சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது.
மேலும் செய்திகள்
தமிழகத்தில் தினசரி கொரோனா பாதிப்பு 6 ஆயிரத்தை கடந்தது; சென்னையில் 2,124 பேருக்கு தொற்று உறுதி: சுகாதாரத்துறை அறிக்கை..!
மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய தமிழக மாவட்டங்களில் இன்றும், நாளையும் லேசான மழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்..!
சென்னை விமானநிலையத்தில் துபாய் விமானத்தில் இயந்திர கோளாறு: பயணிகள் 4 மணி நேரம் தவிப்பு
தொகுதி மக்களுக்கும், கட்சிக்கும் பேரிழப்பாகும்..! ஸ்ரீவில்லிபுத்தூர் காங்கிரஸ் வேட்பாளர் மாதவராவ் மறைவுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இரங்கல்
மிரட்டும் கொரோனா வைரஸ்: சென்னையில் அடுத்த 20 நாட்கள் நெருக்கடியான காலமாக இருக்கும்..! மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தகவல்
மின்னல் வேகத்தில் அதிகரிக்கும் கொரோனா: தடுப்பு நடவடிக்கை குறித்து மூத்த அதிகாரிகளுடன் முதல்வர் பழனிசாமி நாளை ஆலோசனை..!
11-04-2021 இன்றைய சிறப்பு படங்கள்
புகழ்பெற்ற கும்பமேளா திருவிழா : கொரோனாவுக்கு மத்தியில் ஹரித்வாரில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம்!!
சொல்வதைக் கேட்டு நடக்கும் சீனாவின் ரோபோ நாய் : அட்டகாசமான புகைப்படங்கள்!!
09-04-2021 இன்றைய சிறப்பு படங்கள்
எங்கும் மரண ஓலம்.. கதிகலங்கும் பிரேசில்!: ஒரு நாளில் 4,195 பேர் கொரோனா கொல்லுயிரிக்கு பலி..!!