நடிகர் ஹரிஷ் கல்யாணின் ட்விட்டர் பதிவு ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சி: நடிகை ப்ரியா பவானி கமெண்ட்
2020-09-29@ 21:37:41

சென்னை: நடிகர் ஹரிஷ் கல்யாணின் ட்விட்டர் பதிவு ரசிகர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதற்கு காரணம் நடிகை ப்ரியா பவானி சங்கருடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை ஹரிஷ் பதிவிட்டது மற்றும் இறுதியாக எங்களுக்கு மகிழ்ச்சி என்றும் அதனுடனேயே இரண்டு குறுஞ்செய்திகளையும் சேர்த்து ட்வீட்டரில் பதிவு செய்தார். ஹரிஷ் கல்யாணின் இந்த ட்வீட் பதிவுக்கு கமெண்ட் அடித்த ப்ரியா பவானி சங்கர், லாக்டவுன் முடியும் வரை காத்திருக்க முடியாதா? நான் தான் இதனை முதலில் பொதுவெளியில் சொல்லவேண்டும் என்று விரும்பினேன் என்று குறிப்பிட்டுள்ளார்.
அதற்கு அடுத்தடுத்து பதிலளித்திருக்கும் ஹரிஷ் கல்யாண் என்னால் காத்திருக்க முடியாது, காத்திருக்க மாட்டேன், நான் இதனை அதிகாரப்பூர்வமாக்குகிறேன், நாளை மாலை 5 மணிக்கு என்று பதிலளித்துள்ளார். ஹரிஷ் கல்யாண் - ப்ரியா பவானி சங்கர் இணைந்து ‘பெல்லி சூப்புலு’ தமிழ் ரீமேக்கில் நடித்து வருகின்றனர். தெலுங்கில் விஜய் தேவரகொண்டா, ரீத்து வர்மா நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற இந்தப் படத்தை தமிழில் ஏ.எல்.விஜய்யிடம் உதவி இயக்குநராக பணியாற்றிய கார்த்திக் சுந்தர் இயக்கியுள்ளார். இந்தப் படத்தின் விளம்பரத்துக்காகவே ஹரிஷ் கல்யாண் இப்படி ட்வீட் செய்திருப்பதாக தெரிகிறது.
எனவே நாளை மாலை ‘பெல்லி சூப்புலு’ படம் குறித்த முக்கியமான அறிவிப்பு வெளியாக வாய்ப்பிருக்கிறது என கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஆனால் ட்வீட்டைப் பார்க்கும் நெட்டிசன்கள் ஹரிஷ் கல்யாண் - ப்ரியா பவானி சங்கர் இருவரும் தங்களது காதலை வெளி உலகுக்கு அறிவித்துவிட்டார்களா? அல்லது என்னடா நடக்குது இங்க என்று கமெண்ட் பதிவிட்டு வருகிறார்கள். நடிகர் ஹரிஷ் கல்யாணுக்கு ஏராளமான பெண் ரசிகைகள் இருப்பதைப் போல ப்ரியா பவானி சங்கருக்கும் ஆண் ரசிகர்கள் அதிகம் இருக்கின்றனர்.
Tags:
Actor Harish Kalyanin Twitter post Fan Shock Actress Priya Bhavani Comment. நடிகர் ஹரிஷ் கல்யாணின் ட்விட்டர் பதிவு ரசிகர் அதிர்ச்சி நடிகை ப்ரியா பவானி கமெண்ட்மேலும் செய்திகள்
வாகன ஓட்டிகளுக்கு தலைக்கவசம்: சென்னை பெருநகர போக்குவரத்து காவல் விழிப்புணர்வு
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வாயிலாக தேர்வு செய்யப்பட்ட, 13 பின்பிரிவு உதவி பொறியாளர்களுக்கு, பணி நியமன ஆணை வழங்கினார் அமைச்சர் எ.வ.வேலு
சென்னையில் கன்டெய்னர் லாரி உரிமையாளர்கள் 3வது நாளாக வேலைநிறுத்தம்: தொடரும் பேச்சுவார்த்தை
காஞ்சிபுரம் மாவட்டத்தில் ரூ120.75 கோடியில் மேற்கொள்ளப்பட்டு வரும் வெள்ள தடுப்பு பணிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆய்வு
204-வது ஆண்டில் அடியெடுத்து வைத்த எழும்பூர் அரசு கண் மருத்துவமனை
பணியிடத்தில் உயிரிழந்த கட்டுமான தொழிலாளர்களின் வாரிசுகளுக்கு நிவாரணத் தொகை: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
ஹாட் டாக் பன் சாப்பிடும் போட்டி : 10 நிமிடங்களில் 63 பன்கள் சாப்பிட்டு ஜோய் செஸ்ட்நட் என்பவர் சாம்பியன்..!
தொடர் கனமழை : சிட்னி நகரத்தை சூழ்ந்த வெள்ளம்.. 50 ஆயிரம் மக்கள் வீடுகளை விட்டு வெளியேற அறிவுறுத்தல்..
மெக்சிகோவில் விநோதம்.! பெண் முதலையை முத்தம் கொடுத்து மணந்த மேயர்!!
தோண்ட தோண்ட சடலங்கள்.. மணிப்பூரில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 42 ஆக உயர்வு!!
அமெரிக்காவில் டெக்சாஸ் மாகாணத்தில் லாரி ஒன்றில் 53 அகதிகள் சடலமாக மீட்பு... 16 பேர் கவலைக்கிடம்!!