SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

குழந்தைகளுக்கு அணிவிக்கப்படும் டயபர்களில் உடலுக்கு தீங்கு விளைவிக்கும் விஷப்பொருள் இருப்பது ஆய்வில் கண்டுபிடிப்பு!!

2020-09-29@ 12:12:52

டெல்லி: குழந்தைகளுக்கு அணிவிக்கப்படும் டயபர்களில் உடலுக்கு தீங்கு விளைவிக்கும் விஷப்பொருள் இருப்பது ஆய்வில் கண்டறியப்பட்டிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திருக்கிறது. டயபர் இன்றைக்கு எல்லா சிறுகுழந்தைகளுக்கும் பயன்படுத்தப்படுகிறது. ஒரு சிலர் நாள் முழுவதும் குழந்தைகளுக்கு டயபரை அணிவித்திருப்பர். அவர்களைப் பொறுத்தவரை டயபரினை அணிவிப்பதே சுத்தம் மற்றும் ஆரோக்கியம் என்று கருதுகின்றனர். ஆனால் அவை உண்மை இல்லை. தற்போது அவை குழந்தையின் உடல்நலத்திற்கும், சுற்றுசூழலுக்கும் பெருத்த கெடுதலை உண்டாக்கக் கூடிய மிகப்பெரிய‌ எதிரியாக மாறியுள்ளது.

அதாவது டெல்லியை சேர்ந்த தனியார் நிறுவனம் மேற்கொண்ட ஆய்வில் குழந்தைகள் பயன்பாட்டிற்கு விற்கப்படும் டயபரில் 'ப்தலேட்' எனப்படும் விஷப்பொருள் கலந்திருப்பது கண்டறிந்துள்ளது. இவை குழந்தைகளின் உடல் நலனில் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதும் கண்டறியப்பட்டுள்ளது. அதாவது ப்தலேட் எனப்படும் வேதிப்பொருள் கலந்த டயபரை பயன்படுத்துவதால் குழந்தைகளுக்கு இரத்த அழுத்தம், சர்க்கரை நோய், உடல் பருமன் உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளை உருவாக்கும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. தென் கொரியா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகளில் டயபரில் ப்தலேட் வேதிப்பொருள் கலப்பது தடை செய்யப்பட்டுள்ளது. ஆனால் ப்தலேட் கலந்த டயபர்களுக்கு இந்தியாவில் மட்டும் தடை விதிக்கப்படவில்லை. இதனால் குழந்தைகளுக்கு டயபரை பயன்படுத்தும்போது ப்தலேட் வேதிப்பொருள் எளிதில் உடலுக்குள் செல்லும் ஆபத்து குறித்தும் ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News Advertisement
Like Us on Facebook Dinkaran Daily News
  • carbomb28

    ஆப்கானிஸ்தானில் இருவேறு இடங்களில் நடந்த கார் வெடிகுண்டு தாக்குதல்: போலீசார், அப்பாவி பொதுமக்கள் உட்பட 8 பேர் உயிரிழப்பு..!!

  • molave28

    வியட்நாமில் கோரத்தாண்டவம் ஆடிய molave புயல்!: 13 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் பாதுகாப்பான இடங்களில் தஞ்சம்..!!

  • haryana28

    மதம் மாற மறுத்த இளம்பெண்..பட்டப்பகலில் துப்பாக்கியால் சுட்டு கொலை!: குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க கோரி பல இடங்களில் ஆர்ப்பாட்டம்..!!

  • water28

    தென் அமெரிக்காவில் 2,000 ஆண்டுக்களுக்கு முந்தைய மக்களான மயன் நாகரிகத்தினர் பயன்படுத்திய நீர் சுத்திகரிப்பு மையம் கண்டுபிடிப்பு: ஆச்சர்யத்தில் ஆய்வாளர்கள்..!!

  • biharele28

    கொரோனா பாதிப்புகளுக்கு இடையே பீகார் சட்டசபை தேர்தல் 2020: முதல் கட்டமாக 71 தொகுதிகளில் வாக்கு பதிவு தொடக்கம்..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்