சென்னை தெற்கு மாவட்ட திமுக செயலாளர் மா.சுப்பிரமணியனுக்கு தொற்று: வீட்டில் தனிமைப்படுத்தி கொண்டார்
2020-09-29@ 00:49:01

சென்னை: சென்னை தெற்கு மாவட்ட திமுக செயலாளர் மா.சுப்பிரமணியனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. கொரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு திமுக எம்பி, எம்எல்ஏக்கள் பலர் நலத்திட்ட உதவிகள் வழங்கி வரும் நிலையில், திமுக எம்எல்ஏக்கள் பலர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் மிகவும் பாதுகாப்பான முறையில் களப்பணியில் ஈடுபட வேண்டும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு அறிவுரை வழங்கியுள்ளார். இந்நிலையில், சென்னை தெற்கு மாவட்ட திமுக செயலாளரும், சைதாப்பேட்டை தொகுதி எம்எல்ஏவுமான மா.சுப்பிரமணியனுக்கு கடந்த சில நாட்களாக கொரோனா தொற்றுக்கான அறிகுறிகள் காணப்பட்டது. இதையடுத்து, மா.சுப்பிரமணியனும், அவரது மனைவி கல்பனாவும் பரிசோதனை செய்துகொண்டனர்.
பரிசோதனை முடிவில் அவர்கள் இருவருக்கும் கொரோனா தொற்று நேற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து இருவருக்கும் லேசான அறிகுறிகள் மட்டும் இருந்ததால் பரிசோதனைக்கு பின்பு இருவரும் வீட்டில் தங்களை தனிமைப்படுத்தி கொண்டனர். சென்னை தெற்கு மாவட்ட திமுக சார்பில் கந்தன்சாவடியில் நேற்று நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கான பணிகளை செய்து வந்தார். இதில் கலந்து கொள்ள இருந்த நிலையில், கொரோனா உறுதியானதால் அவர் கலந்து கொள்ளவில்லை.
மேலும் செய்திகள்
பொதுமக்களுக்கு அனுமதியில்லை: ஜெயலலிதா வாழந்த வேதா இல்லத்தை நாளை திறக்க சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி.!!!
தமிழகத்தில் கொரோனாவால் மேலும் 512 பேர் பாதிப்பு: 564 பேர் குணம்; 8 பேர் பலி...சுகாதாரத்துறை அறிக்கை..!
இலங்கை போர்க்குற்ற விசாரணை விவகாரத்தில் உடனே தலையிட வேண்டும்: பிரதமர் மோடிக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்.!!!
ஜெயலலிதாவின் நினைவிடம் திறப்புக்கு அதிமுகவினர் படையெடுப்பு: சென்னை முழுவதும் கடும் போக்குவரத்து நெரிசல்: ஆம்புலன்ஸ் செல்ல முடியாததால் நோயாளிகள் பாதிப்பு
இந்தியாவிலேயே அதிக நாட்கள் பதவியில் இருந்த பெண் முதல்வர் ஜெயலலிதா..! நினைவிட திறப்பு விழாவில் முதல்வர் பழனிசாமி பேச்சு
டெல்லி முதலாளிகளுக்கு விசுவாசம் காட்ட விவசாயிகளை புரோக்கர்கள் என்ற போலி விவசாயிதானே முதல்வர் பழனிசாமி : மு.க.ஸ்டாலின் தாக்கு!!
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிற்கு ரூ.80 கோடி செலவில் பீனிக்ஸ் பறவை வடிவில் நினைவிடம்
27-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
குடியரசு தின விழாவில் பாரம்பரியத்தை பறைசாற்றும் கண்கவர் நிகழ்ச்சிகள் :மாமல்லபுரம் கடற்கரை கோவில், ராமர் கோவில் அலங்கார ஊர்திகள் பங்கேற்பு!!
சாலைகளில் படுத்து மறியல்... மாட்டு வண்டி, டிராக்டர்கள், ஆட்டோக்களில் பேரணி : விவசாயிகளுக்கு ஆதரவாக தமிழர்கள் ஆவேசப் போராட்டம்!!
அலங்கார ஊர்திகளின் அணிவகுப்பு, சாகசங்கள், பாரம்பரிய நடனங்களோடு குடியரசு தின விழா கோலாகலம் : விழாக்கோலம் பூண்டது மெரினா!!