சென்னை, இம்பால், ராஞ்சி ஆகிய இடங்களில் என்ஐஏ கிளை அலுவலகம் அமைக்க மத்திய உள்துறை அமைச்சகம் அனுமதி
2020-09-28@ 21:58:57

டெல்லி: தேசிய புலனாய்வு முகமையின் (என்ஐஏ) கிளையை சென்னை (தமிழ்நாடு), ராஞ்சி (ஜார்கண்ட்), இம்பால் (மணிப்பூர்) ஆகிய நகரங்களில் கூடுதலாக அமைக்க இந்திய உள்துறை அமைச்சகம் அனுமதி வழங்கியுள்ளது. தேசிய முக்கியத்துவம் வாய்ந்த வழக்குகளில் என்ஐஏ விசாரணை நடத்துகிறது. பயங்கரவாத அமைப்புகள் தொடர்புடைய வழக்குகளிலும் தேசிய புலனாய்வு முகமை விசாரிக்கும். தேசிய விசாரணை முகமையின் (என்ஐஏ) தலைமையகம் புது டெல்லியில் உள்ளது. கவுகாத்தி, மும்பை, ஜம்மு, கொல்கத்தா, ஐதராபாத், கொச்சின், லக்னோ, ராய்ப்பூர், சண்டிகர் ஆகியவற்றில் என்ஐஏ-யின் கிளை உள்ளது.
இந்நிலையில் சென்னை, மணிப்பூரில் உள்ள இம்பால், ஜார்க்கண்டில் உள்ள ராஞ்சி ஆகிய நகரங்களில் கிளைகளை அமைக்க அமைக்க மத்திய உள்துறை அமைச்சகம் ஒப்புதல் வழங்கியுள்ளது. பயங்கரவாதிகள் தொடர்பான வழக்குகளை விசாரித்து வரும் தேசிய விசாரணை முகமை, மற்ற தேசிய பாதுகாப்பு தொடர்பான வழக்குகளையும் விசாரிக்கும். பயங்கரவாத செயல்குறித்து தகவல் கிடைத்தால் சரியான நேரத்தில் தகவல்கள் திரட்ட இந்த கிளைகள் உதவிகரமாக இருக்கும் என கூறப்படுகிறது.
மேலும் செய்திகள்
வருகிற 27ம் தேதி விடுதலை? சசிகலா ஆதரவு அதிகாரிகள் ரகசிய ஆலோசனை
நாடு முழுவதும் ஒரே நாளில் அதிகபட்சமாக 2,24,301 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது: மத்திய சுகாதாரத்துறை தகவல்..!
வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகளைத் தூண்டிவிட்டு போராட வைக்கின்றனர்: அமித்ஷா குற்றச்சாட்டு..!
கோயில்களை சேதப்படுத்திய பாதிரியார் அதிரடி கைது : பரபரப்பு வாக்குமூலம்
கடன் வாங்கிய வழக்கை மூடி மறைக்க ரூ.10 லட்சம் லஞ்சம் சிபிஐ இன்ஸ்பெக்டர், ஸ்டெனோகிராபர் சஸ்பெண்ட்: 2 டிஎஸ்பிக்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை
மான் வேட்டை வழக்கில் பிப். 6ல் ஆஜராக சல்மான் கானுக்கு உத்தரவு
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியை முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ பன்னீர் செல்வம் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்
மாட்டு வண்டியை ஒட்டிய மு.க.ஸ்டாலின்... மக்களுடன் அமர்ந்து உணவு சாப்பிட்ட முதல்வர் பழனிசாமி, ராகுல் காந்தி!!
16-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
14-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
9 மாதங்களுக்கு பிறகு தியேட்டரில் ‘மாஸ்டர்’ ரிலீஸ்!: விஜய் ரசிகர்கள் கொண்டாட்டம்..புகைப்படங்கள்