SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

39 கண்ணி வெடிகளை அகற்றி பல உயிர்களை காப்பாற்றிய கம்போடியாவைச் சேர்ந்த எலிக்கு தங்கப்பதக்கம் வழங்கி கௌரவம்!!!

2020-09-28@ 14:11:43

கம்போடியா : கம்போடியாவைச் சேர்ந்த எலிக்கு தங்கப்பதக்கம் வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளது. கம்போடியாவில் பாதுகாப்புகளுக்காக 60 லட்சம் வரை கண்ணி வெடிகள் புதைக்கப்பட்டுள்ளது. இந்த கண்ணிவெடிகளால் இதுவரை 64 ஆயிரம் பேருக்கு மேல் மரணம் அடைந்துள்ளனர். ஆகவே, கம்போடிய அரசு கொஞ்சம் கொஞ்சமாகக் கண்ணி வெடிகளை அகற்றி கண்ணி வெடிகள் இல்லாத தேசமாக மாற்ற முயற்சி மேற்கொண்டு வருகிறது. இதற்காக மகவா என்ற எலியை அந்நாட்டு அரசு பயன்படுத்தியுள்ளது. ஆப்பிரிக்காவில் காணப்படும் பெரிய உடலமைப்பைக் கொண்ட ஒருவகை எலி ஆகும். கடந்த ஏழு ஆண்டுகளில் இந்த எலியைக் கொண்டு 39 கண்ணி வெடிகளை அகற்றியுள்ளனர்.

மேலும், வெடிக்காத 28 ஆபத்தான பொருட்களையும் மகவா கண்டறிந்துள்ளது. மேலும், இதுவரை 1.41 லட்சம் சதுர அடி பரப்பளவிற்கு மேல் மகவா நிலத்தைத் தோண்டியுள்ளது. எனவே இந்த எலியின் சேவையைப் பாராட்டும் வகையில் இந்த ஆண்டிற்கான தங்கப்பதக்கத்தை 'நோய்வாய்ப்பட்ட விலங்குகளுக்கான மக்கள் மருந்தகம்' அமைப்பு மகவாவிற்கு வழங்கியுள்ளது.இந்த அமைப்பு விலங்குகள் ஆர்வலரான மரியா டிக்கினால் தொடங்கப்பட்டு, கடந்த 77 வருடமாக மனிதர்களின் நலனுக்கு சேவையாற்றும் விலங்குகளுக்குத் தங்கப்பதக்கம் வழங்கி கௌரவம் செய்து வருகிறது. இதுவரை பல நாடுகளின் ராணுவத்தில் பணியாற்றிய 34 மோப்ப நாய்கள், 32 புறாக்கள், நான்கு குதிரைகள் மற்றும் ஒரு பூனை உள்ளிட்ட விலங்குகளுக்கு இந்த விருது வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • jaipourelephant20

    ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் கோட்டையில் மீண்டும் யானை சவாரிக்கு அனுமதி!..

  • delhiformer20

    வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஹரியானா, பஞ்சாப்பில் இருந்து டெல்லி நோக்கி விவசாயிகள் பேரணி - கண்ணீர்புகை, தண்ணீர் பீய்ச்சி விரட்டியடிப்பு

  • nivarpondyvilupuram20

    நிவர் புயல் கரையை கடந்த நிலையில் புதுச்சேரி, விழுப்புரம் மற்றும் கடலூர் மாவட்டத்தில் சேதமடைந்த இடங்கள் ! புகைப்படங்கள்

  • nivarkadaloorcmvisit20

    நிவர் புயலால் பாதிக்கப்பட்ட கடலூர் மாவட்ட மக்களை பார்வையிட்டு நிவாரண பொருட்களை வழங்கினார் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.எடப்பாடி கே.பழனிசாமி!..

  • nivarthirvannamali20

    திருவண்ணாமலை மற்றும் திருப்பத்தூரில் நிவர் புயலின் தாக்கம் !... புகைப்படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்