SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

நெல்லை, பொதிகை எக்ஸ்பிரஸ் 1ம் தேதி முதல் இயக்க வாய்ப்பு

2020-09-28@ 03:23:44

நெல்லை: கொரோனா ஊரடங்கு தளர்வையடுத்து அக்.1ம் தேதி முதல் நெல்லை, பொதிகை எக்ஸ்பிரஸ் ரயில்கள் இயக்கப்பட வாய்ப்புகள் உள்ளன. அதற்கான பெட்டிகள் நெல்லையில் தற்போது தயார் நிலையில் உள்ளன. ஊரடங்கு தளர்வு காரணமாக கடந்த 1ம் தேதி முதல் தமிழகம் முழுவதும் பல்வேறு எக்ஸ்பிரஸ் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. தென்மாவட்டங்களில் இருந்து செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில்கள் அனைத்திலும் கூட்டம் நிரம்பி வழிகிறது. இதன் காரணமாக கூடுதல் எக்ஸ்பிரஸ்களை சென்னைக்கு இயக்க பயணிகள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

அந்த வகையில் நெல்லை மற்றும் பொதிகை எக்ஸ்பிரஸ்களை இயக்கிட தெற்கு ரயில்வே முடிவு செய்துள்ளது. பெட்டிகள் பற்றாக்குறை காரணமாக இந்த ரயில்கள் கடந்த 1ம் தேதியன்று இயக்கப்படவில்லை. இந்நிலையில் தற்போது நெல்லை, பொதிகை எக்ஸ்பிரஸ்களுக்கான பெட்டிகள் நெல்லை பிட்லைன் மற்றும் தாழையூத்து பகுதிகளில் தயார் நிலையில் நிறுத்தப்பட்டுள்ளன. இந்நிலையில் வரும் 1ம் தேதி முதல் நெல்லை, பொதிகை எக்ஸ்பிரஸ்கள் இயக்கப்படலாம் என கூறப்படுகிறது. நெல்லை - திருச்செந்தூர் பயணிகள் ரயிலையும் தயார் நிலையில் வைத்திருக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தமிழக அரசின் அனுமதிக்கேற்ப பயணிகள் ரயில்கள் இயக்கப்படலாம் என தெரிகிறது.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • twins22

    தலை ஒட்டிப் பிறந்த இரட்டை சகோதரிகள் இனி தனித்தனியே!: அறுவை சிகிச்சைக்கு பின் சந்தோஷமாக நாடு திரும்பினர்..!!

  • mumbaitrain22

    7 மாதத்திற்கு பிறகு மும்பை மின்சார ரயிலில் பெண்கள் உற்சாக பயணம்!: 4 மகளிர் சிறப்பு ரயில்களும் இயக்கம்..!!

  • dinosauregg22

    பெரம்பலூரில் தோண்ட தோண்ட கிடைத்த ‘டைனோசர்’ முட்டைகள்!: ஒன்னு இல்ல ரெண்டு இல்ல.. ‘மிரள’ வைத்த எண்ணிக்கை..வியப்பில் பொதுமக்கள்..!!

  • locusts22

    எத்தியோப்பியாவில் வெட்டுக்கிளிகள் அட்டகாசம்!: 25 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு உணவு பயிர்கள் நாசம்..விவசாயிகள் வேதனை..!!

  • rainbowtree22

    உலக பொறியாளர்களின் கவனத்தை ஈர்த்த பிலிப்பைன்ஸ் ரெயின்போ ட்ரீ டவர்!: கண்கவரும் புகைப்படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்