SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பெற்றோரிடம் அனுமதி கடிதம் பெற்று சந்தேகம் கேட்க மட்டும் மாணவர்கள் பள்ளிக்கு வரலாம்: அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி

2020-09-28@ 03:13:21

கோபி: பள்ளிக்கூடம் திறப்பு குறித்து இதுவரை எவ்வித முடிவும் எடுக்கவில்லை, 10, 11, 12ம் வகுப்பு மாணவர்கள் பெற்றோர் அனுமதியுடன் சந்தேகம் கேட்க மட்டுமே வரலாம் என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். ஈரோடு மாவட்டம் கோபி அருகே அமைச்சர் செங்கோட்டையன் நிருபர்களிடம் கூறியதாவது: பள்ளிக்கூடம் திறப்பு குறித்து இதுவரை எவ்வித முடிவும் எடுக்கப்படவில்லை. இது குறித்து பெற்றோர்கள், கல்வியாளர்கள், அனைத்து துறை அதிகாரிகளுடன் கருத்து கேட்கப்பட்டு வருகிறது. 10, 11 மற்றும் 12ம் வகுப்பு பாடத்தில் உள்ள சந்தேகங்களை தீர்க்க வேண்டும் என மாணவர்கள் கோரிக்கை விடுத்தனர். அவர்களின் சந்தேகங்களை தீர்ப்பதற்காக மட்டுமே அக்டோபர் 1ம் தேதி பள்ளிக்கூடம் திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் தங்கள் சந்தேகங்களை தீர்ப்பதற்காக பெற்றோர் சம்மத கடிதத்துடன்தான் பள்ளிக்கூடத்துக்கு வர வேண்டும் என வருவாய்த்துறை மூலமாக ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News Advertisement
Like Us on Facebook Dinkaran Daily News
  • carbomb28

    ஆப்கானிஸ்தானில் இருவேறு இடங்களில் நடந்த கார் வெடிகுண்டு தாக்குதல்: போலீசார், அப்பாவி பொதுமக்கள் உட்பட 8 பேர் உயிரிழப்பு..!!

  • molave28

    வியட்நாமில் கோரத்தாண்டவம் ஆடிய molave புயல்!: 13 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் பாதுகாப்பான இடங்களில் தஞ்சம்..!!

  • haryana28

    மதம் மாற மறுத்த இளம்பெண்..பட்டப்பகலில் துப்பாக்கியால் சுட்டு கொலை!: குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க கோரி பல இடங்களில் ஆர்ப்பாட்டம்..!!

  • water28

    தென் அமெரிக்காவில் 2,000 ஆண்டுக்களுக்கு முந்தைய மக்களான மயன் நாகரிகத்தினர் பயன்படுத்திய நீர் சுத்திகரிப்பு மையம் கண்டுபிடிப்பு: ஆச்சர்யத்தில் ஆய்வாளர்கள்..!!

  • biharele28

    கொரோனா பாதிப்புகளுக்கு இடையே பீகார் சட்டசபை தேர்தல் 2020: முதல் கட்டமாக 71 தொகுதிகளில் வாக்கு பதிவு தொடக்கம்..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்