SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கோஹ்லியும் மனிதர் தான்... பயிற்சியாளர் ஆதரவு

2020-09-28@ 02:05:47

ஐபிஎல் தொடரின் நடப்பு சீசனில் ஆர்சிபி அணி கேப்டன் விராத் கோஹ்லி இதுவரை விளையாடிய 2 போட்டிகளில் சன்ரைசர்சுக்கு எதிராக 14 ரன், கிங்ஸ் லெவனுக்கு எதிராக 1 ரன் மட்டுமே எடுத்துள்ளார். இது அவரது ரசிகர்களுக்கு மிகுந்த ஏமாற்றத்தை கொடுத்துள்ளது. கே.எல்.ராகுல் கொடுத்த 2 கேட்ச் வாய்ப்பை கோஹ்லி நழுவவிட்டதும் விமர்சிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து கோஹ்லியின் சிறுவயது பயிற்சியாளர் ராஜ்குமார் ஷர்மா கூறுகையில், ‘விளையாட்டில் இதெல்லாம் சகஜம். களத்தில் ஒரு சில நாட்கள் மோசமாக அமைந்துவிடுவதை எந்த ஒரு வீரராலும் தவிர்த்து விட முடியாது. கோஹ்லியும் மனிதர் தானே.

ஆனால், அவர் தனக்கென ஒரு உயர்தரமான ஆட்டத் திறனை நிர்ணயித்துக் கொண்டுள்ளார். அதில் இருந்து கொஞ்சம் குறைவாக செயல்பட்டால் கூட ரசிகர்களால் அதை ஏற்றுக் கொள்ள முடிவது இல்லை. கேட்ச் வாய்ப்புகளை நழுவவிட்டதையும் பெரிதுபடுத்தக் கூடாது. மிகச் சிறந்த பீல்டர்களான ஜான்டி ரோட்ஸ், ஜாவேத் மியான்தத் போன்றவர்கள் கூட பல கேட்ச்களை கோட்டைவிட்டுள்ளனர். கோஹ்லி மிகுந்த அனுபவம் வாய்ந்தவர். இந்த நெருக்கடியில் இருந்து மீண்டு வருவார்’ என்றார். கோஹ்லி தலைமையிலான ஆர்சிபி அணி, ரோகித் தலைமையிலான நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்சுடன் இன்று மோதுகிறது. இரு அணிகளுமே 2 லீக் ஆட்டத்தில் ஒரு வெற்றி, ஒரு தோல்வி கண்டுள்ளதால் இப்போட்டியில் வெற்றியை பறிக்க வரிந்துகட்டுகின்றன.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • twins22

  தலை ஒட்டிப் பிறந்த இரட்டை சகோதரிகள் இனி தனித்தனியே!: அறுவை சிகிச்சைக்கு பின் சந்தோஷமாக நாடு திரும்பினர்..!!

 • mumbaitrain22

  7 மாதத்திற்கு பிறகு மும்பை மின்சார ரயிலில் பெண்கள் உற்சாக பயணம்!: 4 மகளிர் சிறப்பு ரயில்களும் இயக்கம்..!!

 • dinosauregg22

  பெரம்பலூரில் தோண்ட தோண்ட கிடைத்த ‘டைனோசர்’ முட்டைகள்!: ஒன்னு இல்ல ரெண்டு இல்ல.. ‘மிரள’ வைத்த எண்ணிக்கை..வியப்பில் பொதுமக்கள்..!!

 • locusts22

  எத்தியோப்பியாவில் வெட்டுக்கிளிகள் அட்டகாசம்!: 25 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு உணவு பயிர்கள் நாசம்..விவசாயிகள் வேதனை..!!

 • rainbowtree22

  உலக பொறியாளர்களின் கவனத்தை ஈர்த்த பிலிப்பைன்ஸ் ரெயின்போ ட்ரீ டவர்!: கண்கவரும் புகைப்படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்