SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

முன்னாள் மத்திய அமைச்சரும் பாஜக மூத்த தலைவருமான ஜஸ்வந்த் சிங் காலமானார்: பிரதமர் மோடி டுவிட்டரில் இரங்கல்.!!!

2020-09-27@ 09:13:30

டெல்லி: முன்னாள் மத்திய அமைச்சரும் பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவருமான ஜஸ்வந்த் சிங் காலமானார். ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த ஜஸ்வந்த் சிங் 1938-ம் ஆண்டு ஜனவரி 3-ம் தேதி பிறந்தார். இந்திய அரசியல்வாதியும்,  இந்திய நாடாளுமன்ற உறுப்பினருமான இவர் மேற்கு வங்க மாநிலம் டார்ஜிலிங் தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டவராவார். தொடர்ந்து 30 ஆண்டுகள் நாடாளுமன்ற உறுப்பினருமான பதவி வகித்துள்ளார். இந்திய இராணுவத்தில்  அலுவலராக 1960-களில் பணியாற்றியவர். மறைந்த முன்னாள் பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாயின் ஆட்சித்தில் மே 16, 1996 முதல் ஜூன் 1, 1996 வரையுள்ள இடைப்பட்ட காலத்தில், அவரது அமைச்சரவையில் ஆய அமைச்சராக இந்திய  நிதியமைச்சர் பொறுப்பிலும்,

அதன் பின் அமைந்த வாஜ்பாயின் அமைச்சரவையில் இரண்டு வருடங்களுக்குப்பின் வெளியுறவுத்துறை அமைச்சராக டிசம்பர் 5, 1998 முதல் ஜூலை 1, 2002 வரையுள்ள காலத்தில் பொறுப்பிலுருந்தார். 2002 க்கு பிறகு மீண்டும் நிதியமைச்சராக  பொறுப்பேற்று அக்கட்சி தேர்தலில் தோற்கடிக்கப்பட்டு பதவியிறங்கும் காலமான 2004 வரை பொறுப்பிலிருந்தார். சுதந்திரமான ஜனநாயகத்தை வலியுறுத்துபவராக விளங்கியதின் விளைவாக சிறந்த நாடாளுமன்ற உறுப்பினர் என்ற விருதினை   2001-ம் ஆண்டு பெற்றார்.

இந்நிலையில், 82 வயதான ஜஸ்வந்த் சிங் கடந்த 2014-ம் ஆண்டு வீட்டில் தவறி விழுந்து கோமா நிலைக்கு சென்றதையடுத்து டெல்லி ராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தொடர்ந்து, மருத்துவமனையில் சிகிச்சைப்பெற்று வந்தநிலையில்  சிகிச்சை பலனின்றி ஜஸ்வந்த் சிங் இன்று காலை காலமானார். ஜஸ்வந்த் சிங் மறைவிற்கு  பிரதமர் நரேந்திர மோடி, மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உள்ளிட்ட மத்திய அமைச்சர்கள், பல்வேறு கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

பிரதமர் மோடி டுவிட்:

பிரதமர் மோடி தனது டுவிட்டர் பக்கத்தில், ஜஸ்வந்த் சிங் ஜி நம் தேசத்தை விடாமுயற்சியுடன் பணியாற்றினார். முதலில் ஒரு சிப்பாயாகவும் பின்னர் அரசியலுடனான அவரது நீண்டகால தொடர்பிலும். அடல் ஜி அரசாங்கத்தின் போது, அவர்  முக்கியமான இலாகாக்களைக் கையாண்டார் மற்றும் நிதி, பாதுகாப்பு மற்றும் வெளி விவகாரங்களில் ஒரு வலுவான அடையாளத்தை வைத்தார். அவரது மறைவால் வருத்தம் அளிக்கிறது.

பாஜகவை வலுப்படுத்தியவர்களில் முக்கியமானவர் ஜஸ்வந்த் சிங் என பிரதமர் மோடி என புகழாரம் சூட்டியுள்ளார். அரசியல், சமூக விவகாரங்களில் தனித்துவமான கண்ணோட்டத்திற்காக நினைவுகூரப்படுவார். உங்கள் தொடர்புகளை நான்  எப்போதும் நினைவில் கொள்வேன். அவரது குடும்பத்தினருக்கும் ஆதரவாளர்களுக்கும் இரங்கல் தெரிவித்துக்கொள்கிறேன். ஓம் சாந்தி. அவரது இயல்புக்கு ஏற்ப, ஜஸ்வந்த் ஜி கடந்த ஆறு ஆண்டுகளாக தனது நோயை மிகுந்த தைரியத்துடன்  எதிர்த்துப் போராடினார் என்று பதிவிட்டுள்ளார்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • twins22

  தலை ஒட்டிப் பிறந்த இரட்டை சகோதரிகள் இனி தனித்தனியே!: அறுவை சிகிச்சைக்கு பின் சந்தோஷமாக நாடு திரும்பினர்..!!

 • mumbaitrain22

  7 மாதத்திற்கு பிறகு மும்பை மின்சார ரயிலில் பெண்கள் உற்சாக பயணம்!: 4 மகளிர் சிறப்பு ரயில்களும் இயக்கம்..!!

 • dinosauregg22

  பெரம்பலூரில் தோண்ட தோண்ட கிடைத்த ‘டைனோசர்’ முட்டைகள்!: ஒன்னு இல்ல ரெண்டு இல்ல.. ‘மிரள’ வைத்த எண்ணிக்கை..வியப்பில் பொதுமக்கள்..!!

 • locusts22

  எத்தியோப்பியாவில் வெட்டுக்கிளிகள் அட்டகாசம்!: 25 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு உணவு பயிர்கள் நாசம்..விவசாயிகள் வேதனை..!!

 • rainbowtree22

  உலக பொறியாளர்களின் கவனத்தை ஈர்த்த பிலிப்பைன்ஸ் ரெயின்போ ட்ரீ டவர்!: கண்கவரும் புகைப்படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்