SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கொரோனாவுடன் கைகோர்த்த இரட்டை தாக்குதல்: மண்டை காயும் மருத்துவர்கள்

2020-09-27@ 01:31:00

புதுடெல்லி: கொரோனா குழப்பமே இன்னும் முடியாத நிலையில், அதனுடன் கூடுதலாக சேர்ந்து டெங்கு காய்ச்சலும் தாக்கி வருவது மருத்துவர்களை குழுப்பி வருகிறது. இதுவரை உலகமெங்கும் மூன்று கோடி மக்களுக்கும் மேலாக பாதிப்பை ஏற்படுத்தியுள்ள கொரோனாவுக்கு, பிரத்யேகமான சிகிச்சை என்று எதுவும் இல்லை. மருந்துகளும் இல்லை. ஏற்கனவே வேறு நோய்களுக்கு அளிக்கப்படும் மருந்துகளையே  கொடுத்து மருத்துவர்கள் குணப்படுத்துகின்றனர். அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக அதிகம் நோய்த்தொற்று ஏற்பட்டுள்ள நாடாகவும் இந்தியா உள்ளது. வடகிழக்குப் பருவமழை தொடங்கியுள்ள நிலையில் டெங்கு காய்ச்சலும் கூடுதலாகப் பரவி வருவது மட்டுமின்றி, கொரோனா பாதித்தவர்களையும் எளிதாக தாக்கி வருவது புதிய சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.

இதற்கு உதாரணமாக, டெல்லி துணை முதல்வரான மணீஷ் சிசோடியாவுக்கு கடந்த செப்டம்பர் 14ம் தேதி கொரோனா உறுதியானது. அடுத்த நாள் அவருக்கு செய்யப்பட்ட பரிசோதனையில் டெங்கு தொற்றும் கூடுதலாக ஏற்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.டெல்லியில் 3 நோயாளிகளுக்கு கொரோனாவுடன் டெங்கு காய்ச்சலும் ஏற்பட்டுள்ளது என்று உறுதிப்படுத்தப்பட்டு  இருக்றது. இதுபோல், நாட்டின் பல்வேறு மாநிலங்களிலும் கொரோனாவுடன் டெங்கு கைகோர்த்துள்ளது.
இது பற்றி டெல்லியில் உள்ள ராஜீவ் காந்தி சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையின் மருத்துவ இயக்குநரான ஷெர்வால் கூறுகையில், ‘‘இரண்டு நோய்களுக்குமே நிலையான மருத்துவ நெறிமுறைகளின்படி சிகிச்சை எதுவும் இல்லை. இதனால், கயிற்றில் நடப்பதுபோல் மருத்துவர்களின் நிலை சிக்கலாகி உள்ளது. இவற்றில் எதற்கு முதலில் சிகிச்சை அளிப்பது என்ற குழப்பமும் ஏற்படுகிறது,’’ என்றார்.

பிரேசில், அமெரிக்காவில் ஆய்வு
* கொரோனாவுடன் டெங்கும் கைகோர்த்து மக்களை வதைப்பது குறித்த ஆய்வுகள் பிரேசில், அமெரிக்க பல்கலைக் கழகங்களில் நடைபெற்று வருகிறது.
* இப்போதைக்கு இந்த இரட்டை வைரஸ்களின் ஏமாற்று வேலையை சமாளிக்க மக்கள் முன்னெச்சரிக்கையுடன், பாதுகாப்பாக இருப்பதே இப்போதைய சரியான தடுப்பு முறை என்கின்றனர் மருத்துவ நிபுணர்கள்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • humanbodies23

  2,000 ஆண்டுகளுக்கு முன் எரிமலை வெடிப்பிலிருந்து தப்பிக்க முயன்ற 2 மனித உடல்கள் இத்தாலியில் கண்டுபிடிப்பு!: புகைப்படங்கள்

 • jammu23

  ஜம்மு காஷ்மீரில் நிலவும் கடுங்குளிர்!: தரை, வீடுகளின் கூரைகள், வாகனங்களின் மேற்பகுதி ஆகியவை பனி உறைந்து வெண்ணிறமாக காட்சி..!!

 • yamuna23

  இனவிருத்திக்காக யமுனை நதியில் கூட்டம் கூட்டமாக படையெடுக்கும் பறவைகள்!: சுற்றுலாப் பயணிகள் ஆர்வமுடன் கண்டு ரசிப்பு..!!

 • chadpuja23

  சூரிய கடவுளுக்கு நன்றி தெரிவிக்கும் சாத் பூஜை!: நியூ ஜெர்சியில் நூற்றுக்கணக்கான அமெரிக்க வாழ் இந்தியர்கள் வழிபாடு..!!

 • isrelviva23

  இப்படிக்கூட விவசாயம் செய்ய முடியுமா!: இஸ்ரேலில் வியக்க வைக்கும் செங்குத்து வேளாண்மை..புகைப்படங்கள்..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்