SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

தங்கராணியிடம் வாங்கிய தங்கத்தை தமிழகத்துக்குள் கொண்டு வந்த இலை நிர்வாகி பற்றி சொல்கிறார்: wiki யானந்தா

2020-09-27@ 00:53:56

‘‘கொடைக்கானல்ல அதிகாரிகள் அதிகாரிகள் கூட்டமாக வந்து போறாங்களே... என்னவாம்’’ என்றார் பீட்டர் மாமா.  
‘‘சீசனுக்கு வந்து போனது எல்லாம் அந்த காலம்... இப்போது கொடைக்கானல்ல சீட்டு கட்டு மாதிரி இருக்கும் பங்களாக்களை வாங்கி குவிப்பதற்காக குவியுறாங்க...  உலக பிரசித்தி பெற்ற சுற்றுலாத்தலம் என்பதால், கொடைக்கானலில் சொத்துக்கள் வாங்குவதில் இலை தரப்புக்கு போட்டியா... அதிகாரிகளும் ஆர்வத்தோடு கட்டிடம், நிலங்களை வாங்கி குவிக்க ஆரம்பிச்சு இருக்காங்க.... சிலர் பினாமி பெயர்களிலும் சிலர் தங்கள் குடும்ப உறுப்பினர் பெயர்களிலும் சொத்து சேர்த்து இருக்காங்க... ஏற்கனெவே பூட்டு மாவட்டத்தில் முன்பு உயரதிகாரியாக இருந்த ஒருவர், கொடைக்கானல் நகராட்சிக்கு உட்பட்ட அப்சர்வேட்டரி பகுதியில் சொகுசு பங்களா ஒன்றை, தனது உறவினரின் பெயரில் வாங்கியதாக பேச்சு ஓடிச்சு... அவர் இப்போது தூங்கா நகர் மாவட்டத்தில் இருக்கிறாராம்... இப்போது அதே பூட்டு மாவட்டத்தில் உயரதிகாரியாக இருப்பவர்
கடந்த வாரம் திடீரென்று கொடைக்கானலுக்கு விசிட் அடித்தாராம்.... இவர் பல இடங்களை ஆய்வு செய்யலாம் எனக் கூறப்பட்டதால், அதிகாரிகளும் ‘அலர்ட்’ ஆக இருந்தாங்களாம்... அப்போது இவர், கொடைக்கானல் அருகே உள்ள அடுக்கம் கிராம பஞ்சாயத்தை சேர்ந்த பிரகாசபுரம் என்ற இடத்தில் பல கோடி ரூபாய் மதிப்புக்குரிய இடத்தை வருவாய்த்துறையினர் புடைசூழ பார்வையிட்டாராம்... உடனே அந்த பகுதி  மக்களுக்கு விஷயம் புரிந்து போச்சாம்... ஆனால் அதிகாரிகள் தான் ஏன் வந்தாரு... எதுக்கு வந்தாருன்னு தெரியாம மண்டையை பீய்த்து கொண்டு இருக்காங்களாம்... இப்போது இடத்தை வாங்குவதில் அரசியல்வாதிகள் சீசன் முடிந்து அதிகாரிகள் சீசன் தொடங்கிவிட்டதாக மக்கள் பேச துவங்கிட்டாங்களாம்...’’ என்றார் விக்கியானந்தா.
‘‘இலை பிரமுகரை எப்படி அமுக்குவது என்பது குறித்து என்ஐஏ யோசிக்குதாமே, ஏன் அப்படி...’’ என்று கேட்டார் பீட்டர் மாமா.
‘‘எல்லாம் அரசியல் கூட்டணிக்காகனு ஒரு பேச்சு ஓடுது.. அதை அப்புறம் சொல்றேன்... இப்ப இதை கேளு... கேரளாவை சேர்ந்த தங்க கடத்தல் ராணி சொப்னாவுக்கு கோவையில் உள்ள நகை பட்டறை உரிமையாளர் ஒருவருடன் தொடர்பு உள்ளது. இவர்தான், சொப்னாவிடமிருந்து தங்க கட்டிகளை பெற்று, நகைகளாக வடிவமைத்து கொடுத்துள்ளார். இந்த நபர் தற்போது, என்ஐஏ அதிகாரிகள் பிடியில் சிக்கியுள்ளார். கடந்த இரு வாரங்களாக, கேரள மாநிலம் கொச்சியில் உள்ள என்ஐஏ அலுவலகத்தில் இவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். இவர், பல்வேறு அதிர்ச்சி தகவல்களை வெளியிட்டுள்ளார். இதைக்கேட்டு, என்ஐஏ அதிகாரிகள் மிரண்டு போய்விட்டனர். குறிப்பாக, கோவையை சேர்ந்த இலை பிரமுகர் ஒருவரது பெயரை குறிப்பிட்டு, இவர்தான் எல்லாத்துக்கும் காரணம் எனக்கூறியுள்ளார். அந்த நபர் கட்சியில பதவியில இருந்தாலும், நகைக்கடை தொழில்தான் பிரதானம். தொழிலுக்கு ஒரு பாதுகாப்பு வேண்டுமே... என கட்சியில் ஒட்டிக்கொண்டுள்ளார். இவர்தான், தங்க ராணி சொப்னாவுடன் முக்கிய தொடர்பில் இருந்தவர். இவர் மூலமாகத்தான், தங்கக்கட்டிகள் கோவைக்குள் வந்துள்ளன. அதனால், இவரை தூக்கிச்சென்று விசாரணை நடத்தினால், பல முக்கிய தகவல்கள் வெளிவரும் என என்ஐஏ அதிகாரிகள் நினைக்கிறாங்க... ஆனால், இலை கட்சியில் இருப்பதால், இவரை தூக்கினால், ஏதேனும் அரசியல் கூட்டணியில் சலசலப்பு வருமா யோசிக்கிறாங்க... அதனால மேலிடத்துக்கு தகவல் அனுப்பிட்டு உத்தரவுக்காக வெயிட்டிங்காம்.. மேலும் ஏன்ஐஏ அதிகாரிகள் வேற  ‘ரூட்’’ல போய் இலை பிரமுகரை விசாரிக்க முடியுமானு யோசனையும் வைச்சு இருக்காங்களாம். இலையின் சொத்தான... முத்தான... இந்த நபர் சிக்கினால், பல கோடி மதிப்பிலான சொத்து பறிபோய்விடும் என்று அவர் கட்சியினரே பேசிக்கிறாங்க...’’ ்என்றார் விக்கியானந்தா.
‘‘அல்வா மாவட்டத்துல யார், யாருக்கு அல்வா கொடுக்கிறாங்க...’’ என்றார் பீட்டர் மாமா.
‘‘அல்வா மாவட்டத்தில் மணல் கொள்ளை விவகாரத்தில் நீதிமன்றம் கண்டனம் தெரிவித்தது. இதனால ஒரு குவாரியில் சட்டத்திற்கு புறம்பாக மணல் விற்பனை செய்தது அம்பலமான நிலையில் ஒரே நாளில் 9.50 கோடி ரூபாய் அபராதத்தை தீட்டிட்டாங்க. அதுதான் அரசு அதிகாரிகளுக்கு சிக்கலாகி தலைவலியாக மாறி இருக்காம். ஏன்னா... நெல்லை மாவட்ட கனிம வளத்துறையில் தகிடுதத்தங்கள் ஏராளமாக நடந்து வருகிறது. குவாரிகளில் இருந்து போலி பாஸ் மூலம் ஏராளமான மணல் கடத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் கசிந்து வருகிறது. இதற்கு முழுக்க முழுக்க கனிம வளத்துறையும் உடந்தை. ஆனால் அவர்கள் மட்டும் எந்த குற்றச்சாட்டுக்கும் ஆளாகாமல் தப்பி விடுகின்றனர் என குற்றம்சாட்டுகின்றனர் வருவாய்த்துறை அதிகாரிகள். மணல் கொள்ளை விவகாரம் சூடுபிடிக்க ஆரம்பித்துள்ளதால் மணலை விற்று கொள்ளையடித்த அதிகாரிகளின் பட்டியல் தயாராகி வருகிறது. இதில் யார், யார் சிக்கப் போகிறார்களோ என நெல்லை மாவட்ட அதிகாரிகள் கலங்கிப் போய் உள்ளனர்... இருந்தாலும் பெரிய தலைகளை காப்பாற்ற சிறு தலைகளை வெட்டுவது அரசியலில் வழக்கம் தானே...அதற்கான வேலைகள் தான் தற்போது கனகச்சிதமாக நடக்குதாம்...’’ என்றார் விக்கியானந்தா.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • pakisthan21

  ஆப்கானிஸ்தானில் உள்ள பாகிஸ்தான் தூதரகத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி பெண்கள் உள்பட 15 பேர் பலி!: புகைப்படங்கள்

 • kasirangaa21

  கொரோனா தொற்றால் மூடப்பட்டிருந்த அசாம் காசிரங்கா தேசியப்பூங்கா, உயிரியல் பூங்காக்கள் சுற்றுலாப் பயணிகள் பார்வைக்காக மீண்டும் திறப்பு!: புகைப்படங்கள்

 • kamaladance21

  அமெரிக்க தேர்தல் 2020: அனல் பறக்கும் பிரச்சாரத்திற்கு இடையே குடையுடன் கூல் நடனமாடிய கமலா ஹாரிஸ்.. வைரலாகும் புகைப்படங்கள்

 • thirupati21

  திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நவராத்திரி பிரம்மோற்சவ விழா: கருட வாகனத்தில் மலையப்ப சுவாமி எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி..!!

 • police21

  காவலர் வீர வணக்க நாள்: நாட்டைப் பாதுகாப்பதற்காக, வீரதீர செயல்களில் ஈடுபட்டு உயிர் தியாகம் செய்த காவலர்களின் நினைவு சின்னத்தில் உயரதிகாரிகள் மலர்த்தூவி மரியாதை..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்